12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22
கேள்வி 22 : உடல்செல் மரபணு சிகிச்சை, மற்றும் இனச்செல் மரபணு சிகிச்சை வேறுபடுத்துக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
| எண் | உடல்செல் மரபணு சிகிச்சை (Somatic Cell Gene Therapy) | இனச்செல் மரபணு சிகிச்சை (Germline Gene Therapy) |
|---|---|---|
| 1 | சிகிச்சைக்கான மரபணுக்கள் உடற்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. | சிகிச்சைக்கான மரபணுக்கள் இனச்செல்களுக்குள் மாற்றப்படுகின்றன. |
| 2 | மரபணுக்கள் எலும்பு மஜ்ஜை செல்கள், இரத்த செல்கள், தோல் செல்கள் போன்ற உடற்செல்களுக்குள் செலுத்தப்படுகின்றன. | மரபணுக்கள் அண்ட செல்கள் மற்றும் விந்து செல்கள் போன்ற இனச்செல்களுக்குள் செலுத்தப்படுகின்றன. |
| 3 | இம்முறையில் ஏற்படும் மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை. | இம்முறையில் ஏற்படும் மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. |


0 Comments