12-ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1

12-ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1

1. முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய்.
அ) AIDS.
ஆ) புற்றுநோய்.
இ) நீர்மத் திசு அழற்சி.
ஈ) SCID.
விடை : ஈ) SCID.

2. டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம்.
அ) ஜீன் மாற்றியமைப்பு நகலாக்கம்.
ஆ) இனச்செல்கள் உதவியின்றி நகலாக்கம்.
இ) உடல் செல்கள் திசு வளர்ப்பு நகலாக்கம்.
ஈ) உட்கரு மாற்றியமைப்பு நகலாக்கம்.
விடை : ஈ) உட்கரு மாற்றியமைப்பு நகலாக்கம்.

3. அடினோசின் டிஅமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு.
அ) நொதி இடமாற்ற சிகிச்சை.
ஆ) ADA cDNA கொண்ட மரபுப் பொறியியல் மாற்றிய லிம்போசைட்களை கால இடைவெளியில் உட்செலுத்துதல்.
இ) அடினோசின் டி அமினேஸ் தூண்டிகளை அளித்தல்.
ஈ) ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல்.
விடை : ஈ) ஆரம்ப கால கரு வளர்ச்சியின் போதே ADA உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை செல்களை கருவினுள் நுழைத்தல்.

4. இன்சுலின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன.
அ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 13 அமினோ அமிலங்கள்.
ஆ) A சங்கிலியில் 21 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்.
இ) A சங்கிலியில் 20மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்.
ஈ) A சங்கிலியில் 12 மற்றும் B சங்கிலியில் 20அமினோ அமிலங்கள்.
விடை : ஆ) A சங்கிலியில் 21 மற்றும் B சங்கிலியில் 30 அமினோ அமிலங்கள்.

5. பாலிமரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை...
அ) இயல்பு திரிபு, இணைப்பு இழைபதப்படுத்துதல், உற்பத்தி.
ஆ) உற்பத்தி, இணைப்பு, இயல்புதிரிபு.
இ) இணைப்பு, உற்பத்தி, இயல்புதிரிபு.
ஈ) செயலிழப்பு, இயல்புதிரிபு இணைப்பு.
விடை : அ) இயல்பு திரிபு, இணைப்பு இழைபதப்படுத்துதல், உற்பத்தி.

6. கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும்.
அ) உள் நுழைத்த டி.என்.ஏவை பெற்றுக் கொள்ளும் செல்லில் ஒட்டுவதற்கு உதவுகின்றது.
ஆ) இது தேர்வு செய்யும் குறியாளராகச் செயல்படுகின்றது.
இ) இதுவைரஸில் இருந்து பிரிக்கப்படுகின்றது.
ஈ) உயர்வெப்பநிலையிலும் செயல்படுகின்றது.
விடை : ஈ) உயர்வெப்பநிலையிலும் செயல்படுகின்றது.

7. எலைசா முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது.
அ) திடீர் மாற்றங்களைக் கண்டறிய.
ஆ) நோய்க்கிருமிகளைக் கண்டறிய.
இ) விரும்பத்தக்க பண்புகளைடைய விலங்குகளைத் தேர்வு செய்ய.
ஈ) விரும்பத்தக்க பண்புகளையுடைய தாவரங்களைத் தேர்வு செய்ய.
விடை : ஆ) நோய்க்கிருமிகளைக் கண்டறிய.

8. மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொண்டுள்ளது.
அ) சில செல்களில் அயல் டி.என்.ஏ.
ஆ) அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ.
இ) சில செல்களில் அயல் ஆர்.என்.ஏ.
ஈ) அனைத்து செல்களிலும் அயல் ஆர்.என்.ஏ.
விடை : ஆ) அனைத்து செல்களிலும் அயல் டி.என்.ஏ.

9. தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.
அ) துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள்.
ஆ) வலுகுறைக்கப்பட்ட மறுசேர்க்கை தடுப்பூசிகள்.
இ) டி.என்.ஏ தடுப்பூசிகள்.
ஈ) வழக்கமான தடுப்பூசிகள்.
விடை : அ) துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள்.

10. GEAC என்பது.
அ) ஜீனோம் பொறியியல் செயல் குழுமம்.
ஆ) நில சுற்றுச்சூழல் செயல் குழுமம்.
இ) மரபுப் பொறியியல் ஒப்புதல் குழுமம்.
ஈ) மரபிய மற் றும் சுற்றுச்சூழல் ஒப்புதல் குழுமம்.
விடை : இ) மரபுப் பொறியியல் ஒப்புதல் குழுமம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement