12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 13
கேள்வி 13 : குறிப்பு வரைக. அ) மிகை உணவூட்டம், ஆ) பாசிப் பெருக்கம்
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
அ) மிகை உணவூட்டம் :
- ஊட்டச்சத்துக்களை கொண்ட நீர், நிலப்பகுதியிலிருந்து வழிந்தோடி ஏரி போன்ற நீர் நிலைகளை சென்றடையும் பொழுது, அடர்ந்த தாவர வளர்ச்சியினை உண்டாக்குகிறது.
ஆ) பாசிப் பெருக்கம் :
- ஊட்டச்சத்து செறிவு அதிகரிப்பதால் நீர்நிலைகளில் பாசிகள் மற்றும் ஆகாயத் தாமரை வளர்ச்சி தூண்டப்படுகிறது.
- இது கால்வாய்கள், ஆறுகள், ஏரிகளில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது.
- இது உள்ளூர் தாவரங்களை பதிலீடு செய்து, நீரில் ஆக்சிஜனைக் குறைக்கிறது.
- மேலும், விரும்பத்தகாத நுரை மற்றும் துர்நாற்றத்தை உருவாக்குகிறது.


0 Comments