12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 34

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 34

கேள்வி 34 : குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

ஆக்ஸிடோசின் ஹார்மோனின் பணிகள் :

  • கருப்பையில் சுருக்கங்களை உருவாக்கி குழந்தை பிறத்தலை எளிதாக்குகிறது.
  • பால் சுரப்பியின் மீச்சிறு கதுப்புகளிலிருந்து விசையுடன் பாலை வெளித்தள்ள உதவுகிறது.
  • கருப்பையை கர்ப்ப காலத்திற்கு முந்தைய நிலைக்கு சுருங்கச் செய்து மாற்றும் வேலையை செய்கிறது.

ரிலாக்ஸின் ஹார்மோனின் பணிகள் :

  • தாய்சேய் இணைப்புத்திசுவால் சுரக்கப்பட்டு, கார்பஸ் லூட்டியத்தில் காணப்படுகிறது.
  • இடுப்பு எலும்பு மூட்டுகளைத் தளர்வடையச் செய்து, கருப்பை வாய்ப் பகுதியை வலிமையான சுருக்கங்களால் விரிவடையச் செய்து, குழந்தை பிறத்தலை எளிதாக்குகிறது.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :

ஆக்ஸிடோசின் பணிகள்:

  • கருப்பைச் சுருக்கத்தை உருவாக்கி பிரசவத்தை எளிதாக்குதல்.
  • பால் சுரப்பியின் கதுப்புகளிலிருந்து பாலை விசையுடன் வெளித்தள்ளுதல்.
  • கருப்பையை பிரசவத்திற்கு முந்தைய நிலைக்குச் சுருங்கச் செய்தல்.

ரிலாக்ஸின் பணிகள்:

  • தாய்சேய் இணைப்புத்திசுவால் சுரக்கப்பட்டு, கார்பஸ் லூட்டியத்தில் காணப்படுகிறது.
  • இடுப்பு மூட்டுகளைத் தளர்த்தி, கருப்பை வாயை விரிவடையச் செய்து, பிரசவத்தை எளிதாக்குதல்.

data-ad-client="ca-pub-4119817662052542" data-ad-slot="2514926915">

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement