12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 36
கேள்வி 36 : கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்ட செல் உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
படத்தை அடையாளம் காணுதல் மற்றும் இது அண்டசெல் உருவாக்கத்தின் எந்த நிலையைக் குறிக்கிறது என்பதைக் கண்டறிதல்.
- படம்: அண்ட செல் விடுபடும் நிலையைக் குறிக்கிறது.
ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் (அண்டசெல் விடுபடுதலுக்குக்) காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்கள்.
- அண்டக ஹார்மோன்கள்: ஈஸ்ரோஜன், புரோஜெஸ்டிரான்.
- பிட்யூட்டரி ஹார்மோன்கள்: FSH (Follicle Stimulating Hormone), LH (Luteinizing Hormone).
இ) அதே நேரத்தில், எதிர்பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
அண்டசெல் விடுபடும் அதே நேரத்தில் எதிர்பார்க்கப்படும் கருப்பை மாற்றங்கள்.
- எண்டோமெட்ரியம் புதுப்பித்தல்: எண்டோமெட்ரியம் புதுப்பிக்கப்பட்டு, கருமுட்டை பதிவதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது.
- சுரப்பு நிலை: கருப்பை ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தைச் சுரக்கும் நிலையில் (Secretory Phase) இருக்கும்.
ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.
| C - இரண்டாம் நிலை ஃபாலிக்கிள் (Secondary Follicle) | H - கார்பஸ் லியூட்டியம் (Corpus Luteum) |
| இது சூலகத்தில் காணப்படும் வளரும் ஃபாலிக்கிளின் நிலையாகும். | இது அண்டம் விடுபட்ட பிறகு உருவாகும் தற்காலிக நாளமில்லா சுரப்பியாகும். |
| ஃபாலிக்கிள் செல்கள் ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோனைச் சுரக்கின்றன. | இது அதிக அளவில் புரோஜெஸ்டிரோன் (Progesterone) ஹார்மோனைச் சுரக்கிறது. |
| இது இறுதியில் முதிர்ந்த (கிராஃபியன்) ஃபாலிக்கிளாக (Graafian Follicle) வளர்ச்சி அடைகிறது. | இது கார்பஸ் அல்பிகான்ஸாக (Corpus Albicans) சிதைவுறுகிறது. |


0 Comments