12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1
1. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிப்பு மையம்:
அ) விந்தக நுண் குழல்கள்.
ஆ) விந்து நாளம்.
இ) விந்தகமேல் சுருள்குழல்.
ஈ) விந்துப்பை.
விடை : இ) விந்தகமேல் சுருள்குழல்.
2. ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோனைச் சுரக்கும் இடம்:
அ) செர்டோலி செல்கள்.
ஆ) லீடிக் செல்கள்.
இ) விந்தகமேல் சுருள்குழல்.
ஈ) புரோஸ்டேட் சுரப்பி.
விடை : ஆ) லீடிக் செல்கள்.
3. விந்து திரவத்தின் பெரும்பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி:
அ) விந்துப்பை.
ஆ) பல்போயுரித்ரல் சுரப்பி.
இ) புரோஸ்டேட் சுரப்பி.
ஈ) கோழைச் சுரப்பி.
விடை : அ) விந்துப்பை.
4. பெண்ணின் சூலகம் ஆணின் எந்த உறுப்புக்குச் சமமானது?
அ) விதைப்பை.
ஆ) ஆண்குறி.
இ) சிறுநீர் வடிகுழல்.
ஈ) விந்தகம்.
விடை : ஆ) ஆண்குறி.
5. கரு பதியும் இடம்:
அ) கருப்பை.
ஆ) வயிற்றுக்குழி.
இ) கலவிக் கால்வாய்.
ஈ) ஃபெல்லோப்பியன் குழாய்.
விடை : அ) கருப்பை.
6. தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ் படலத்தின் அடிப்படை:
அ) ஆலன்டாயிஸ்.
ஆ) ஆம்னியான்.
இ) கோரியான்.
ஈ) கரு உணவுப்பை.
விடை : அ) ஆலன்டாயிஸ்.
7. குழந்தை பிறப்புக்குப் பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதற்கும், தொடர்ச்சியாகச் சுரக்க வைப்பதற்கும் உதவும் முக்கிய ஹார்மோன்:
அ) ஈஸ்ட்ரோஜன்.
ஆ) FSH.
இ) புரோலாக்டின்.
ஈ) ஆக்ஸிடோசின்.
விடை : இ) புரோலாக்டின்.
8. பாலூட்டியின் முட்டையின் வகைப்பாடு:
அ) மீசோலெசிதல், ஓடற்றது.
ஆ) மைக்ரோலெசிதல், ஓடற்றது.
இ) ஏலெசிதல், ஓடற்றது.
ஈ) ஏலெசிதல், ஓடுடையது.
விடை : இ) ஏலெசிதல், ஓடற்றது.
9. அண்ட செல்லைத் துளைத்துச் செல்வதற்கு முன் விந்து செல்லில் நடைபெறும் நிகழ்வு:
அ) ஸ்பெர்மியேஷன்.
ஆ) கார்டிகல் வினைகள்.
இ) ஸ்பெர்மியோஜெனிசிஸ்.
ஈ) திறனேற்றம்.
விடை : ஈ) திறனேற்றம்.
10. குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர்:
அ) கோழை.
ஆ) சீம்பால்.
இ) லாக்டோஸ்.
ஈ) சுக்ரோஸ்.
விடை : ஆ) சீம்பால்.
11. சீம்பாலில் அதிகமாகக் காணப்படுவது:
அ) IgE.
ஆ) IgA.
இ) IgD.
ஈ) IgM.
விடை : ஆ) IgA.
12. ஆண்ட்ரோஜன் இணைவுப் புரதத்தை உற்பத்தி செய்பவை:
அ) லீடிக் செல்கள்.
ஆ) ஹைபோதலாமஸ்.
இ) செர்டோலி செல்கள்.
ஈ) பிட்யூட்டரி சுரப்பி.
விடை : இ) செர்டோலி செல்கள்.
13. தவறான இணையைக் கண்டறிக:
அ) இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல்.
ஆ) நுண்பை செல்கள் (ஃபாலிகுலார்) நிலை - ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல்.
இ) லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு.
ஈ) அண்டம் விடுபடு நிலை – LH எழுச்சி.
விடை : இ) லூட்டியல் நிலை – FSH அளவு அதிகரிப்பு.
14. கூற்று (A) - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
காரணம் (R) - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 2°C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது.
அ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
இ) A உண்மை, R பொய்.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
விடை : அ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம்.
15. கூற்று (A) - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
காரணம் (R) - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.
அ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
இ) A உண்மை, R பொய்.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
விடை : இ) A உண்மை, R பொய்.
16. கூற்று (A) - விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
காரணம் (R) - அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.
அ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை.
இ) A உண்மை, R பொய்.
ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
விடை : ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்.
17. வலிமிகுந்த மாதவிடாய் இவ்வாறு அழைக்கப்படுகிறது:
அ) டிஸ்மெனோரியா.
ஆ) மெனோரேஜியா.
இ) அமெனோரியா.
ஈ) ஆலிகோமெனோரியா.
விடை : அ) டிஸ்மெனோரியா.
18. கீழ்க்கண்ட எந்த மாதவிடாய்க் கோளாறு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
அ) மெனோரேஜியா – ஒழுங்கற்ற மாதவிடாய்.
ஆ) ஏமெனோரியா – மாதவிடாய் இல்லாதிருத்தல்.
இ) டிஸ்மெனோரியா – அதிகப்படியான மாதவிடாய்.
ஈ) ஆலிகோமெனோரியா – வலி மிகுந்த மாதவிடாய்.
விடை : ஆ) ஏமெனோரியா – மாதவிடாய் இல்லாதிருத்தல்.


0 Comments