12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 37
கேள்வி 37 : Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்குக.
விடை :
Rh காரணி (Rh Factor)
- அல்லீல் அமைவிடம் மற்றும் பெயரிடல்:
- Rh காரணிக்குரிய மூன்று வெவ்வேறு அல்லீல் இணைகள் உள்ளன. இவை அமைப்பொத்த குரோமோசோம்களில் நெருக்கமான மூன்று வெவ்வேறு இடங்களில் (அமைவிடங்களில்) அமைந்துள்ளன.
- இந்த மூன்று அல்லீல் இணைகள்: Cc, Dd, Ee.
- தற்போதைய பயன்பாட்டில், Rh இரத்த அமைப்பு பொதுவாக Cde என்ற பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
- மரபுவகை:
- ஒவ்வொரு குரோமோசோமும் ஒரு C அல்லது c, ஒரு D அல்லது d, மற்றும் ஒரு E அல்லது e என்ற மரபுவகையைப் பெற்றிருக்கும்.
- மரபுவகை எடுத்துக்காட்டுகள்: CDE/cde, CdE/cDe, cde/cde, CDe/CdE.
- Rh புறத்தோற்றம் (Phenotype):
- Rh பாசிட்டிவ் (Rh உடையோர்) புறத்தோற்றம்: அனைத்து மரபு வகைகளிலும் உள்ள ஓங்கிய D அல்லீல்கள் (D-ன் இருப்பு) Rh பாசிட்டிவ் (+) புறத்தோற்ற வகையை உருவாக்குகின்றன.
- Rh நெகட்டிவ் (Rh அற்றோர்) புறத்தோற்றம்: இரண்டு ஒடுங்கிய பண்புகொண்ட மரபுவகையில் (dd) உள்ள அல்லீல்கள் Rh நெகட்டிவ் (-) புறத்தோற்ற வகையை உற்பத்தி செய்கின்றன.


0 Comments