12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 39
கேள்வி 39 : குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக.
விடை :
- பாலினங்களை (ஆண் மற்றும் பெண்) அடையாளம் காணப் பயன்படுகிறது.
- குரோமோசோம்களில் நீக்கம், இரட்டித்தல், இடம்பெயர்தல் மற்றும் பிரியாநிலை போன்ற பிறழ்ச்சிகளைக் கண்டறிய உதவுகிறது.
- ஒழுங்கற்ற பன்மயம் போன்ற குரோமோசோம் குறைபாடுகளைக் கண்டறியப் பயன்படுகிறது.
- சிற்றினங்களுக்கிடையேயான பரிணாம உறவுகளை கணிக்க உதவுகிறது.
- மனிதனில் காணப்படும் மரபியல் நோய்களைக் கண்டறியப் பயன்படுகிறது.


0 Comments