12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 40

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 40

கேள்வி 40 : மனிதனில் பால் சார்ந்த மரபுக்கடத்தலில் காணப்பபடும் பண்புகளை எழுதுக.


விடை :

பால்  சார்ந்த மரபுக்கடத்தல் (Sex-linked Inheritance):

பாலினக் குரோமோசோம்களில் (X அல்லது Y) அமைந்துள்ள மரபணுக்களால் சில பண்புகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவது பால் சார்ந்த மரபுக்கடத்தல் ஆகும்.

பாலினக் குரோமோசோம் மரபணு வகைகள்:

  • X சார்ந்த மரபணுக்கள்: X குரோமோசோமின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள்.
  • Y சார்ந்த மரபணுக்கள் (ஹோலாண்ட்ரிக் ஜீன்கள்): Y குரோமோசோமின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் மரபணுக்கள்.

1. X-சார்ந்த மரபணு மரபுக்கடத்தல்:

  • ஹீமோஃபிலியா: இது ஒடுங்கிய X சார்ந்த மரபணுவால் ஏற்படும் ஒரு நோயாகும். இதில் சிறிய காயங்கள் கூட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த நோய்க்கான கடத்திப் பெண்களின் (Carrier females) மகன்களில் 50% பேருக்கு நோய் கடத்தப்படுகிறது.
  • நிறக்குருடு (Color Blindness): இதுவும் X சார்ந்த ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது. இதனால் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களைப் பிரித்தறியும் திறன் பாதிக்கப்படுகிறது. தந்தையிடமிருந்து மகள் வழியாக பேரனுக்கு ஒரு பண்பு கடத்தப்படுவது குறுக்கு மறுக்கு மரபுக்கடத்தல் (Criss-cross Inheritance) எனப்படும்.

2. Y-சார்ந்த மரபணு மரபுக்கடத்தல் (ஹோலாண்டிரிக் ஜீன்கள்):

  • Y-குரோமோசோமில் உள்ள மரபணுக்கள் தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே நேரடியாக கடத்தப்படும்.
  • எடுத்துக்காட்டு: மனிதனில், காது மடலில் அதிக முடிவளர்தல் (ஹைப்பர்டிரைக்கோசிஸ்) Y-சார்ந்த மரபணுவால் ஏற்படுகிறது. இது தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே கடத்தப்படுகிறது; பெண்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை.

 


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement