12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 43

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 43

கேள்வி 43 : பழப்பூச்சியை (டிரோசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி?


விடை :

பழப்பூச்சிகளில் (டிரோசோஃபைலா) பால் நிர்ணயம், மரபணு சமநிலை மூலமே நடைபெறுகிறது என்பதை முதன்முதலில் கண்டறிந்தவர் C.B. பிரிட்ஜஸ் ஆவார்.

இம்முறையில்:

  • ஆண் உயிரியின் கருவுறுதல் திறனுக்கு Y குரோமோசோம் அவசியமாகிறது. இருப்பினும், Y குரோமோசோம் ஆண் பாலினத்தை நிர்ணயிப்பதில்லை.
  • X குரோமோசோமில் பெண் தன்மைக்கான மரபணுக்கள் உள்ளன.
  • உடல் குரோமோசோமில் (Autosome) ஆண் தன்மைக்கான மரபணுக்கள் உள்ளன.
  • எனவே, X குரோமோசோமில் உள்ள மரபணுக்களுக்கும் உடல் குரோமோசோமில் உள்ள மரபணுக்களுக்கும் இடையே உள்ள மரபுச் சமநிலையே பாலினத்தை நிர்ணயிக்கிறது.

பால்குறியீட்டு எண் (Sex Index):

இது பின்வரும் சூத்திரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது:

பா‌ல்கு‌றி‌யீ‌ட்டு எ‌ண் = x குரோமோசோ‌ம் எ‌ண்‌ணி‌க்கை (x) / உட‌ல்  குரோமோசோ‌ம் தொகு‌திக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை (A)

பால்குறியீட்டு எண்பாலினம்
1 அல்லது 1க்கு அதிகம்பெண் பூச்சி
0.50ஆண் பூச்சி
0.67இடைப்பால் உயிரி
0.33மிகை ஆண் பூச்சி
1.50மிகை பெண் பூச்சி

குறிப்பு: பழப்பூச்சியில் ஆண் தன்மை உருவாவதற்கு Y குரோமோசோமின் இருப்பு அவசியம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement