12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 44

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 44

கேள்வி 44 : இனமேம்பாட்டியலின் முறைகளை பற்றி எழுதுக.


விடை :

இன மே‌ம்பாட்டியல் என்பது மனித இனத்தை மேம்படுத்துவதற்காக மரபியல் விதிகளைப் பயன்படுத்துவது ஆகும்.

பெயர் தோற்றம்:

  • பிரான்சிஸ் கால்டன் என்பவர் 1885 ஆம் ஆண்டு 'யூஜெ‌னி‌க்‌ஸ்' (Eugenics) என்ற சொல்லை உருவாக்கினார்.
  • 'யூஜெ‌னி‌க்‌ஸ்' என்பதன் பொருள் 'ந‌ல்ல ‌பிற‌ப்பு' ஆகும்.
  • நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் இவரே ஆவார்.

இன மே‌ம்பாட்டியலின் வகைகள்:

  1. நே‌ர்மறை இனமே‌ம்பா‌‌ட்டிய‌ல் (Positive Eugenics):
    • சமூக‌த்‌தி‌ன் சிற‌ந்த வள‌ர்‌கரு ‌‌பிளாச‌த்‌தினை (விரும்பத்தக்க மரபணுப் பொருளை) பாதுகாக்கவும், தொடர்ந்து நிலையாக அதிக‌ரி‌க்கவும் முய‌ல்வது நே‌ர்மறை இனமே‌ம்பாட்டியல் ஆகும்.
    • சுருக்கமாக, சிறந்த மரபுகளைப் பெருக்குவது.
  2. எ‌தி‌‌ர்மறை இனமே‌ம்பா‌ட்டிய‌ல் (Negative Eugenics):
    • சமூக‌த்‌தி‌ல் குறைபாடு உடைய வள‌ர்கரு ‌பிளாச‌த்‌தினை (குறைபாடுள்ள மரபணுப் பொருளை) வெ‌ளியே‌ற்றுவது எ‌தி‌‌ர்மறை இனமே‌ம்பா‌ட்டிய‌ல் ஆகு‌ம்.
    • சுருக்கமாக, குறைபாடுள்ள மரபுகளை நீக்குவது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement