12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 25
கேள்வி 25 : இம்யுனேகுளோபுலின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்குக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- கண்டுபிடிப்பு: இம்யுனோகுளோபுலின் 1950 ஆம் ஆண்டில் போர்டெர் மற்றும் ஈடெல்மென் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- வடிவம் மற்றும் அமைப்பு:
- இது 'Y' வடிவில் உள்ளது.
- இது நான்கு பாலிப்பெப்டைடு சங்கிலிகளால் ஆனது:
- நீளம் அதிகமான இரண்டு கனமான சங்கிலிகள் (Heavy Chains - H சங்கிலிகள்).
- நீளம் குறைவான இரண்டு லேசான சங்கிலிகள் (Light Chains - L சங்கிலிகள்).
- சங்கிலிகள் அனைத்தும் டை சல்பைடு பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன.
- அமினோ அமிலங்கள் மற்றும் மூலக்கூறு எடை:
- கனமான சங்கிலியில் 450 அமினோ அமிலங்களும், லேசான சங்கிலியில் 214 அமினோ அமிலங்களும் உள்ளன.
- கனமான சங்கிலியின் மூலக்கூறு எடை 50,000 டால்டன்கள்.
- லேசான சங்கிலியின் மூலக்கூறு எடை 25,000 டால்டன்கள்.
- சங்கிலிகளின் முனைகள் மற்றும் பகுதிகள்:
- ஒவ்வொரு சங்கிலியும் C-முனை மற்றும் N-முனை என இரண்டு முனைகளைக் கொண்டுள்ளன.
- இம்யுனோகுளோபுலினில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன:
- மாறுபடும் பகுதி (Variable Region - V-பகுதி).
- நிலையான பகுதி (Constant Region - C-பகுதி).



0 Comments