12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 14
கேள்வி 14 : தொழில்துறை ஆல்கஹால் என குறிப்பிடப்படுவது எது? அதன் தயாரித்தலை சுருக்கமாக விளக்குக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- எத்தனால் "தொழில்துறை ஆல்கஹால்" என்று அறியப்படுகிறது.
- இது சைமோமோனாஸ் மோபிலிஸ் மற்றும் சர்சினா போன்ற பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
- எத்தனால் உற்பத்தியில், முதலில் தளப்பொருள் அரைக்கப்படுகிறது.
- பின்னர் ஆஸ்பர்ஜில்லஸ்-ஸிலிருந்து பெறப்பட்ட நீர்த்த அமைலேஸ் நொதி சேர்க்கப்பட்டு, ஸ்டார்ச்சை சிதைத்து நொதிக்கக்கூடிய சர்க்கரையாக மாற்றுகிறது.
- இதன் பின்னர் ஈஸ்ட் சேர்க்கப்பட்டு சர்க்கரையானது எத்தனாலாக மாற்றப்படுகிறது.
- இது 96% அடர்வு கொண்ட எத்தனாலாகக் காய்ச்சி வடிக்கப்படுகிறது.
- பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள உயிரிய எரிபொருட்கள் எத்தனால் மற்றும் பயோ டீசல் ஆகும்.
- இவை உயிரிய எரிபொருள் தொழில்நுட்பத்தின் முதல் தலைமுறைப் பிரதிநிதிகளாகும்.
- எத்தனால் பெரும்பாலும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக உயிரிய எரிபொருளாக கேசோலைனுடன் சேர்க்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது.



0 Comments