12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 13
கேள்வி 13 : உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் எப்பொழுது உருவாகிறது?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் என்பது பாக்டீரியாவை கொல்ல அல்லது அதன் வளர்ச்சியை தடுக்க உருவாக்கப்பட்ட உயிர் எதிர்ப்பொருளை பாக்டீரியா செயலிழக்கச் செய்யும் திறனைப் பெறுவதாகும். இது பொது சுகாதாரத்திற்கு ஒரு தீவிர அச்சுறுத்தலாகும்.
- உயிர் எதிர்ப்பொருட்களின் தவறான பயன்பாடு மற்றும் அதிகப்படியான பயன்பாடு உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறனை துரிதப்படுத்துகிறது.
- மோசமான தொற்றுத் தடுப்புக் கட்டுப்பாட்டினாலும் இது நிகழ்கிறது.
- பரந்த செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருட்களை விட குறுகிய செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருட்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது, ஏனெனில் அவை குறிப்பிட்ட நுண்ணுயிரிகளை திறம்பட இலக்கு வைத்து தாக்குவதோடு, எதிர்ப்புத்திறன் உருவாகும் வாய்ப்பையும் குறைக்கின்றன.
- பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பல உயிர் எதிர்ப்பொருட்களுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற பாக்டீரியத் திரிபுகள் "சூப்பர் பக்" என்று அழைக்கப்படுகின்றன.


0 Comments