1. கீழ்க்கண்டவற்றுள் எந்த நுண்ணுயிரி, தொழிற்சாலைகளில் சிட்ரிக் அமில உற்பத்திக்கு பயன்படுகின்றது?
அ) லாக்டோபேசில்லஸ் பல்காரிகஸ்.
ஆ) பெனிசிலியம் சிற்றினம்.
இ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்.
ஈ) ரைசோபஸ் நைக்ரிகன்ஸ்.
விடை : இ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்.
2. கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை அவற்றால் உருவாக்கப்படும் பொருட்களுடன் சரியாக பொருந்தியுள்ளது?
அ) அசட்டோபாக்டர் அசெட்டி - உயிர் எதிர்ப்பொருள்.
ஆ) மெத்தனோபாக்டீரியம் - லாக்டிக் அமிலம்.
இ) பெனிசிலியம் நொடேட்டம் - அசிட்டிக் அமிலம்.
ஈ) சாக்ரோமைசெஸ் செரிவிசியே - எத்தனால்.
விடை : ஈ) சாக்ரோமைசெஸ் செரிவிசியே - எத்தனால்.
3. வடிசாலைகளில் எத்தனால் உற்பத்திக்கு பயன்படும் பொதுவான தளப்பொருள்.
அ) சோயா மாவு.
ஆ) நிலக்கடலை.
இ) கரும்பாலைக் கழிவுகள்.
ஈ) சோள உணவு.
விடை : இ) கரும்பாலைக் கழிவுகள்.
4. சைக்ளோஸ்போரின் - A என்ற நோய்த்தடுப்பாற்றல் ஒடுக்கு மருந்து எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது?
அ) அஸ்பர்ஜில்லஸ் நைஜர்.
ஆ) மனாஸ்கஸ் பர்பூரியஸ்.
இ) பெனிசிலியம் நொடேட்டம்.
ஈ) டிரைகோடெர்மா பாலிஸ்போரம்.
விடை : ஈ) டிரைகோடெர்மா பாலிஸ்போரம்.
5. கார்பன் டைஆக்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு.
அ) ஆல்கஹாலிக் நொதித்தல்.
ஆ) லாக்டேட் நொதித்தல்.
இ) விலங்குகளில் நடைபெறும் காற்றுச் சுவாசம்.
ஈ) தாவரங்களில் நடைபெறும் காற்றுச் சுவாசம்.
விடை : ஆ) லாக்டேட் நொதித்தல்.
6. கழிவு நீரை உயிரிய சுத்திகரிப்பு செய்வதன் நோக்கம்.
அ) உயிரிய ஆக்சிஜன் தேவையை குறைத்தல்.
ஆ) உயிரிய ஆக்சிஜன் தேவையை அதிகரித்தல்.
இ) படிவாதலை குறைத்தல்.
ஈ) படிவாதலை அதிகரித்தல்.
விடை : அ) உயிரிய ஆக்சிஜன் தேவையை குறைத்தல்.
7. காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள்.
அ) மீத்தேன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு.
ஆ) ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் மற்றும் சல்பர் டை ஆக்சைடு.
இ) ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் மற்றும் மீத்தேன்.
ஈ) மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு.
விடை : ஈ) மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு.


0 Comments