ஆசிரியர்களின் இயற்பெயர் மற்றும் சிறப்புப் பெயர்கள்

ஆசிரியர்களின் இயற்பெயர் மற்றும் சிறப்புப் பெயர்கள்

ஆசிரியர்களின் இயற்பெயர் மற்றும் சிறப்புப் பெயர்கள்

  1. பாரதிதாசன்: இயற்பெயர் - சுப்புரத்தினம். சிறப்புப் பெயர்கள் - புரட்சிக்கவி, பாவேந்தர்.
  2. பெருஞ்சித்திரனார்: இயற்பெயர் - துறைமாணிக்கம். சிறப்புப் பெயர் - பாவலேறு.
  3. பாரதியார்: இயற்பெயர் - சுப்பிரமணியன். சிறப்புப் பெயர்கள் - மகாகவி, தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, செந்தமிழ் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மரம் பாட வந்த மறவன், பாட்டுக்கொரு புலவன்.
  4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: சிறப்புப் பெயர் - மக்கள் கவிஞர்.
  5. காமராசர்: சிறப்புப் பெயர்கள் - கருப்பு காந்தி, பெருந்தலைவர், கருமவீரர், ஏழை பங்காளர், படிக்காத மேதை, தலைவர்களை உருவாக்குபவர், கல்விக்கண் திறந்தவர்.
  6. முடியரசன்: இயற்பெயர் - துரைராசு. சிறப்புப் பெயர் - திராவிட நாட்டின் வானம்பாடி.
  7. வே. ராமலிங்கனார்: சிறப்புப் பெயர்கள் - காந்தியக் கவிஞர், நாமக்கல் கவிஞர்.
  8. உடுமலை நாராயணக்கவி: சிறப்புப் பெயர் - பகுத்தறிவு கவிராயர்.
  9. சுரதா: இயற்பெயர் - ராசகோபாலன்.
  10. முத்துராமலிங்க தேவர்: சிறப்புப் பெயர்கள் - சன்மார்க்க சண்ட மாருதம், தேசியம் காத்த செம்மல், வித்யா பாஸ்கர், பிரவசன கேசரி, இந்து புத்த சமய மேதை, சுத்த தியாகி.
  11. இரா. பி. சேதுபிள்ளை: சிறப்புப் பெயர் - சொல்லின் செல்வர்.
  12. ஜூல்ஸ் வெர்ன்: சிறப்புப் பெயர் - அறிவியல் புனைக்கதைகளின் தலைமகன்.
  13. காலமேகப் புலவர்: இயற்பெயர் - வரதன்.
  14. டி. கே. சிதம்பரநாதர்: சிறப்புப் பெயர்கள் - ரசிகமணி, கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர்.
  15. கண்ணதாசன்: இயற்பெயர் - முத்தையா. சிறப்புப் பெயர் - கவியரசு.
  16. காயதே மில்லத்: இயற்பெயர் - முகமது இஸ்மாயில்.
  17. தாராபாரதி: இயற்பெயர் - ராதாகிருஷ்ணன். சிறப்புப் பெயர் - கவிநாயிறு.
  18. தேசிய விநாயகனார்: சிறப்புப் பெயர் - கவிமணி.
  19. இரா. இளங்குமரனார்: சிறப்புப் பெயர் - செந்தமிழ் அந்தணர்.
  20. வாணிதாசன்: இயற்பெயர் - அரங்கசாமி என்கிற எத்திராசலு. சிறப்புப் பெயர்கள் - தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞரேறு, பாவலர்மணி.
  21. சுஜாதா: இயற்பெயர் - ரங்கராஜன்.
  22. திரு. வி. கல்யாணசுந்தரனார் (திரு.வி.க): சிறப்புப் பெயர் - தமிழ் தென்றல்.
  23. சுந்தரர்: சிறப்புப் பெயர்கள் - நம்பியாரூரர், தம்பிரான் தோழர்.
  24. குணங்குடி மஸ்தான் சாகிபு: இயற்பெயர் - சுல்தான் அப்துல் காதர்.
  25. அயோத்திதாசர்: இயற்பெயர் - காத்தவராயன்.
  26. புதுமைப்பித்தன்: இயற்பெயர் - சோ. விருத்தாச்சலம். சிறப்புப் பெயர் - சிறுகதை மன்னன்.
  27. இறையரசன்: இயற்பெயர் - சேசுராசா.
  28. கோமகள்: இயற்பெயர் - இ. ராஜலட்சுமி.
  29. திருவள்ளுவர்: சிறப்புப் பெயர்கள் - மாதனுபங்கி, தேவர், நாயனார், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், சென்னாப்போதார், பெருநாவலர்.
  30. கந்தர்வன்: இயற்பெயர் - நாகலிங்கம்.
  31. மயில்சாமி அண்ணாதுரை: சிறப்புப் பெயர் - இளைய கலாம்.
  32. அண்ணா: சிறப்புப் பெயர் - தென்னகத்து பெர்னாட் ஷா.
  33. ஆண்டாள்: சிறப்புப் பெயர் - சூடிக்கொடுத்த சுடர்க்கொடி.
  34. தந்தை பெரியார்: சிறப்புப் பெயர்கள் - தெற்காசியாவின் சாக்ரடீஸ், வைக்கம் வீரர், ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர், பெண்ணினப் போர்முரசு, புத்துலகத் தொலைநோக்காளர்.
  35. நா. பிச்சமூர்த்தி: புனைப்பெயர்கள் - பிசு, ரேவதி. சிறப்புப் பெயர் - புதுக்கவிதையின் தந்தை.
  36. கல்யாண்ஜி: இயற்பெயர் - கல்யாணசுந்தரம். புனைப்பெயர் - வண்ணதாசன்.
  37. கா. அப்பாத்துரையார்: சிறப்புப் பெயர் - பன்மொழிப்புலவர்.
  38. தேவநேயப் பாவாணர்: சிறப்புப் பெயர் - மொழி ஞாயிறு.
  39. தமிழகனார்: இயற்பெயர் - சண்முகசுந்தரம். சிறப்புப் பெயர் - சந்தக்கவிமணி.
  40. அதிவீரராம பாண்டியர்: பட்டப்பெயர் - சீவலமாறன்.
  41. ஸ்டீபன் ஹாக்கிங்: சிறப்புப் பெயர் - தற்காலத்தின் ஐன்ஸ்டைன்.
  42. செய்குதம்பி பாவலர்: சிறப்புப் பெயர் - சதாவதானி.
  43. கமலலாயன்: இயற்பெயர் - வே. குணசேகரன்.
  44. மா. பொ. சிவஞானம் (ம.பொ.சி): இயற்பெயர் - ஞானப்பிரகாசம்.
  45. இரண்டாம் இராசராச சோழன்: பட்டங்கள் - கோப்பரகேசரி, திருபுவன சக்கரவர்த்தி.
  46. நாகூர் ரூமி: இயற்பெயர் - முகமது ரஃபி.
  47. வீரமாமுனிவர்: இயற்பெயர் - கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி.
  48. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்: சிறப்புப் பெயர் - புலமைக் கதிரவன்.
  49. தருமு சிவராம்: புனைப்பெயர்கள் - பானுச்சந்திரன், சிவராம். இயற்பெயர் - சிவராமலிங்கம்.
  50. ஆபிரகாம் பண்டிதர்: சிறப்புப் பெயர் - தமிழிசை இயக்கத்தின் தந்தை.
  51. அண்ணாமலையார்: சிறப்புப் பெயர் - காவடிச் சிந்துக்குத் தந்தை.
  52. சி. வை. தாமோதரனார்: சிறப்புப் பெயர் - தமிழ் பதிப்புலகின் தலைமகன்.
  53. ஜி. யு. போப்: சிறப்புப் பெயர் - செந்தமிழ் செம்மல்.
  54. பிரபஞ்சன்: இயற்பெயர் - வைத்தியலிங்கம்.
  55. திரிகூட ராசப்ப கவிராயர்: பட்டப்பெயர் - திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்.
  56. சங்கரதாசு சுவாமிகள்: சிறப்புப் பெயர் - தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்.
  57. சுந்தர ராமசாமி: புனைப்பெயர் - பசுவையா.
  58. ரவீந்திரநாத் தாகூர்: சிறப்புப் பெயர்கள் - பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர், கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி, குருதேவ்.
  59. இன்குலாப்: இயற்பெயர் - சாகுல் அமீது.
  60. ஆறுமுக நாவலர்: சிறப்புப் பெயர் - வசன நடை கைவந்த வள்ளலார்.
  61. பரிதிமாற் கலைஞர்: இயற்பெயர் - வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி. சிறப்புப் பெயர் - திராவிட சாஸ்திரி.
  62. நா. முத்துச்சாமி: சிறப்புப் பெயர் - கலை ஞாயிறு.
  63. சி. மணி: இயற்பெயர் - சி. பழனிச்சாமி. புனைப்பெயர்கள் - வே. மாலி, செல்வம்.
  64. மறைமலை அடிகள்: இயற்பெயர் - சுவாமி வேதாச்சலம்.
  65. வா. சு. பா. மாணிக்கம்: சிறப்புப் பெயர் - தமிழ் இமயம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement