Question 1: எழிலோவியம் எழுதியவர்?
- a) பாரதிதாசன்.
- b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
- c) வாணிதாசன்.
- d) கண்ணதாசன்.
Answer c) வாணிதாசன்.
Question 2: பிரெஞ்சு கையகர முதலி எழுதியவர்?
- a) வாணிதாசன்.
- b) பாரதியார்.
- c) திரு. வி. கல்யாணசுந்தரனார்.
- d) சுரதா.
Answer a) வாணிதாசன்.
Question 3: கவிஞர் திலகம் என்று அழைக்கப்பட்டவர்?
- a) கண்ணதாசன்.
- b) சுரதா.
- c) வாலி.
- d) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
Answer b) சுரதா.
Question 4: தேன்மழை எழுதியவர்?
- a) நாமக்கல் கவிஞர்.
- b) வைரமுத்து.
- c) சுரதா.
- d) பாரதியார்.
Answer c) சுரதா.
Question 5: சுரதாவின் முதல் நூல் எது?
- a) சுவரும் சுண்ணாம்பும்.
- b) தேன்மழை.
- c) துறைமுகம்.
- d) சாவின் முத்தம்.
Answer d) சாவின் முத்தம்.
Question 6: சோகம் தராதவன் அசோகன் எனப் பாடியவர்?
- a) பாரதிதாசன்.
- b) சுரதா.
- c) கண்ணதாசன்.
- d) வாணிதாசன்.
Answer b) சுரதா.
Question 7: சுரதாவிற்கு உவமைக் கவிஞர் என்ற பட்டம் வழங்கியவர்?
- a) மு.வரதராசனார்.
- b) அறிஞர் அண்ணா.
- c) ஜெகசிற்ப்பியன்.
- d) தந்தை பெரியார்.
Answer c) ஜெகசிற்ப்பியன்.
Question 8: விடுதலை விளைத்த உரிமை என்ற பாடல் தொகுப்பை எழுதியவர்?
- a) கண்ணதாசன்.
- b) பாரதியார்.
- c) சுரதா.
- d) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
Answer a) கண்ணதாசன்.
Question 9: முச்சங்கங்கள் பற்றி முழு விவரங்களையும் கூறும் முதல் நூல் எது?
- a) தொல்காப்பியம்.
- b) நன்னூல்.
- c) புறநானூறு.
- d) இறையனார் களவியல் உரை.
Answer d) இறையனார் களவியல் உரை.
Question 10: பட்டத்தரசி, மங்கையர்க்கரசி எழுதியவர்?
- a) வாணிதாசன்.
- b) சுரதா.
- c) பாரதிதாசன்.
- d) கண்ணதாசன்.
Answer b) சுரதா.
Question 11: கம்பராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது?
- a) மதுரை.
- b) காஞ்சிபுரம்.
- c) திருவரங்கம்.
- d) சிதம்பரம்.
Answer c) திருவரங்கம்.
Question 12: உதட்டில் உதடு, எச்சில் இரவுகள் எழுதியவர்?
- a) வைரமுத்து.
- b) வாலி.
- c) மு.மேத்தா.
- d) சுரதா.
Answer d) சுரதா.
Question 13: சேக்கிழார் இயற்பெயர்?
- a) அருண்மொழித்தேவர்.
- b) மருள்நீக்கியார்.
- c) திருநாவுக்கரசர்.
- d) நம்பியாரூரார்.
Answer a) அருண்மொழித்தேவர்.
Question 14: தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய நூல்கள் எவை?
- a) திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
- b) திருமாலை, திருப்பள்ளி எழுச்சி.
- c) பெருமாள் திருமொழி.
- d) பெரிய திருமொழி.
Answer b) திருமாலை, திருப்பள்ளி எழுச்சி.
Question 15: இனியவை நாற்பதின் ஆசிரியர் யார்?
- a) கபிலர்.
- b) நல்லாதனார்.
- c) பூதஞ்சேந்தனார்.
- d) முன்றுறையரையனார்.
Answer c) பூதஞ்சேந்தனார்.
Question 16: நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
- a) வீரமாமுனிவர்.
- b) எல்லிஸ் துரை.
- c) ஜி.யு.போப்.
- d) ராபர்ட் கால்டுவெல்.
Answer c) ஜி.யு.போப்.
Question 17: பெரியபுராணம் அரங்கேற்றப்பட்ட இடம் எது?
- a) திருவரங்கம்.
- b) மதுரை.
- c) தஞ்சாவூர்.
- d) தில்லை.
Answer d) தில்லை.
Question 18: காரைக்கால் அம்மையாரின் (புனிதவதி) கணவரின் பெயர் என்ன?
- a) பரஞ்சோதி.
- b) பரமதத்தன்.
- c) சாத்தன்.
- d) கோவலன்.
Answer b) பரமதத்தன்.
Question 19: பன்னிரு திருமுறைகள் எந்த அரசனின் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டன?
- a) இராஜராஜ சோழன்.
- b) இராஜேந்திர சோழன்.
- c) குலோத்துங்க சோழன்.
- d) பாண்டிய நெடுஞ்செழியன்.
Answer a) இராஜராஜ சோழன்.
Question 20: சம்பந்தர் காலத்தில் சமணத்தைப் போற்றிய பாண்டிய மன்னன் யார்?
- a) நின்றசீர் நெடுமாறன்.
- b) கூன்பாண்டியன்.
- c) பூதப்பாண்டியன்.
- d) வரகுண பாண்டியன்.
Answer b) கூன்பாண்டியன்.

0 Comments