Sunday, September 25, 2022

TNPSC G.K - 95 | தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் - பி.எஸ். கே. லட்சுமிபதி ராஜூ

தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் 4 பி.எஸ். கே. லட்சுமிபதி ராஜூ ('ஹரிஜன சேவா சங்கம்' மூலம் பின்தங்கியவர்களை முன்னேற்றினார்)

இளம் வயதில், பள்ளிக்கூட நாட்களிலேயே, சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் கொண்டு, பல நிகழ்ச்சிகளில், பங்கு கொண்டார். 1930-ம் ஆண்டிலேயே, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு, 6 மாத சிறைத்தண்டனை பெற்றார். 1942-ம் ஆண்டு வரை, பாதுகாப்பு கைதியாக சுமார் 1% ஆண்டுகள், சிறையில் அடைக்கப்பட்டார். இவரது சிறைவாசம், அலிப்புரம், பெல்லாரி, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் கழிந்தது. காங்கிரஸ் கட்சியில் உறுப்பி னராக, நகர கமிட்டி, தாலுகா கமிட்டி, மதுரை மாவட்ட கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் என படிப்படி யாக, எல்லா நிலைகளிலும், பணியாற்றி இருக்கிறார்.

இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, பழனி நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், 24 வார்டுகளுக்கும், காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து நிறுத்தினார். இவர்கள் அனைவருமே, மகத்தான வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், லட்சுமிபதிராஜூ, நகரசபை சேர்மனாக, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் காரணமாக, லட்சுமிபதி ராஜூவின் பெருமை, வெளி உலகுக்கு தெரியலாயிற்று. அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான பெருந்தலைவர் காமராஜர், புதுக்கோட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளையராஜா விஜயரகுநாத தொண்டைமான் தலைமையில், லட்சுமிபதி ராஜூவுக்கு ஒரு வெள்ளி வாள் பரிசளித்தார். பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தார்.

பழனி தாலுகாவில், விவசாயிகளின் கோரிக்கைகளின் படி, கொடைக்கானல்-பழனி ரோடு, விருப்பாச்சி, பரப்பலாறு அணை, பழனி பாலாறு-பொருந்தலாறு அணை, ஆய்க்குடி- வரதமாநதி அணை ஆகிய திட்டங்களுக்காக போராடி, தமிழ்நாடு அரசு மேற்படி திட்டங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டார். மலைத்தோட்ட விவசாயிகளுக்காக, பல போராட்டங்களை நடத்தினார். அடக்கு முறைகளை எதிர்த்து வெற்றிகண்டவர். இவரது பணிகளை மகாத்மா காந்தி பெரிதும் பாராட்டி இருக்கிறார்.

மத ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர். காந்தியடிகளின் அழைப்பை ஏற்று ‘ஹரிஜன சேவா சங்கம்' தொடங்கி, நகர துப்புரவுத்தொழிலாளிகள், தையல் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், ஓட்டல் தொழிலாளர், டாக்சி ஓட்டுனர்கள் ஆகியோரின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். தமிழ்நாடு சுதந்திரப்போராட்ட வீரர்கள் சங்கத்தின், தலைவராகவும் இருந்தவர்.

| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts