மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்-CVC- Central vigilance commission
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (அல்லது) மத்திய கண்காணிப்பு ஆணையம் (அல்லது) லஞ்ச ஒழிப்பு ஆணையம்
இந்திய தண்டனை சட்ட தொகுப்பு ? 1860
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி சட்டத்திற்குப் புறம்பான அல்லது தனது பணிக்கு புறம்பான (லஞ்சம்) செயலை செய்ய பணம் கையாடல் செய்தால் அவரை தடுக்கும் அதிகாரம் கொண்டது ஊழல் கண்காணிப்பு ஆணையம்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது? 1964 பிப்ரவரி 11
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அமைக்க பரிந்துரை செய்த குழு? சந்தானம் குழு
ஊழல் தடுப்பு சட்டம் எந்த வருடம் இயற்றப்பட்டது? 1988 (பிரிவு 3)
மத்திய ஊழல் கண்காணிப்பு குழுவை எந்த ஆண்டு பாராளுமன்ற ஒரு சட்டபூர்வ அமைப்பாக அறிவித்தது ? (தன்னாட்சிப் பெற்ற அமைப்பாக மாறியது-எந்த ஒரு அரசு அதிகாரிகளின் தலையீடு இல்லாதிருத்தல்) - 2003 செப்டம்பர் 11
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பணி ? விசாரணை செய்யாது, ஆலோசனை மட்டுமே வழங்கும்
ஊழல் தடுப்பு ஆணையர்களின் பதவிக்காலம்? 4 ஆண்டுகள் (அல்லது) 65 வயது
முதல் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பெயர்? நீட்டுர் சீனிவாசராவ்
தற்போதைய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பெயர்? Shri Sanjay Kothari/ சஞ்சய் கோத்தாரி
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் எத்தனை பேர்? ஒரு தலைவர் இரண்டு உறுப்பினர்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையற்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்? குடியரசுத்தலைவர்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை நியமிக்க பரிந்துரை செய்வது
பிரதமர்
உள்துறை அமைச்சர்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை நீக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? (உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில்) குடியரசுத் தலைவர் நீக்கலாம்
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரின் சம்பளம் எவ்வளவு? UPSC தலைவருக்கு இணையான சம்பளம் (சுமார் 2.5 லட்சம்)
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் முதல் ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்பு இருந்த அமைப்பு? நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவு 20. AVD- Administrative Vigilance Division
நிர்வாக ஊழல் கண்காணிப்புப் பிரிவு யாரால் ஏற்படுத்தப்பட்டது? மத்திய உள்துறை அமைச்சகம்
நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவில் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1955 ஆகஸ்ட்
குற்றவியல் நடைமுறைச் சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1973
மத்திய புலனாய்வு ஆணையம் எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது ?1963 (CBI)
CBI- Cental Bureav of Investigation
மத்திய புலனாய்வு ஆணையம் (CBI) எந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது? சந்தானம் குழு
மத்திய புலனாய்வு ஆணையத்தின் பணி? மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உதவி செய்ய வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யும்
மத்திய புலனாய்வு ஆணையரின் (CBI) பதவி காலம்? 2 வருடம்
முதல் மத்திய புலனாய்வு ஆணையரின் பெயர்? D.P.கோலி (1 April 1963-31 May 1968)
தற்போதைய மத்திய புலனாய்வு ஆணையரின் பெயர்? Subodh Kumar Jaiswal-25 May 2021 முதல்
மத்திய புலனாய்வு ஆணையத்தின் (CBI) முன்னோடியாக இருந்தது? டெல்லி சிறப்பு காவல் நிறுவனம் (1946)
0 Comments