Sunday, September 25, 2022

TNPSC G.K - 97 | தமிழ்

  • பாம்பு எந்த அதிர்வுகளை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கிறது? தரையின்.

  • பாம்பு யாருக்கு நண்பன்? விவசாயிகளுக்கு.

  • “மனைக்கு விளக்கம் மடவாள்” என்னும் நான்மணிக்கடிகைப் பாடலை பாடியவர் யார்? விளம்பிநாகனார்.

  • நான்மணிக்கடிகை எந்த நூல்களுள் ஒன்று? பதினெண்கீழ்க்கணக்கு 5. குடும்பத்தின் விளக்கு யார்? பெண்.

  • கடிகை என்பது? அணிகலன் (நகை).

  • நான்மணிக்கடிகை என்பதன் பொருள்? நான்கு மணிகள் கொண்ட அணிகலன்.

  • நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்? விளம்பிநாகனார்.

  • எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு எது? நாட்டுப்புறப் பாட்டு.

  • குழந்தையைத் தாய் தொட்டிலிலிட்டுப் பாடும் பாட்டுக்கு பெயர் என்ன? தாலாட்டுப்பாடல்.

  • முற்காலத்தில் தாலாட்டுப்பாடல்களை எவ்வாறு கூறி வந்தார்கள்? கிராமியப் பாடல்கள்.

  • சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் ______ கூட நாட்டுப்புறப் பாடல்? கானாப்பாடல்.

  • கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் என்ன பாட்டு பாடுவார்கள்? நாட்டுப்புறப்பாடல்.

  • நாட்டுப்புறப் பாடல்களைக் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? தாலாட்டுப்பாடல்கள், விளையாட்டுப்பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள்.

  • பிறந்த குழந்தைக்காக பாடும் பாடல் எது? தாலாட்டுப் பாடல். 

  • கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடும் பாடல் எது? விளையாட்டுப்பாடல்.

  • களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடுவது எது? தொழில் பாடல் .

  • திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது எது? சடங்குப் பாடல், கொண்டாட்டப் பாடல்கள்.

  • சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் எது? வழிபாட்டுப்பாடல். 

  • இறந்தொருக்குப் பாடும் பாடல் எது? ஒப்பாரிப்பாடல்கள்.

  • மக்கள் நெருக்கம் மிகுந்த நகரம் எது? கொல்கத்தா.

  • வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போலப் பாய்ந்து சாலைக்கு வந்தவர் யார்? விவேகானந்தர்.

  • பிற்காலத்தில் உலகம் புகழ் உயர்ந்த சுவாமி யார்? விவேகானந்தர் 

  • விவேகானந்தரின் மறுபெயர் என்ன? நரேந்திரநாத்.

  • மழையே மழையே வாவா என்ற இசையமுது என்ற பாடலை எழுதியவர் யார்? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

kalvisolai tnpsc

No comments:

Popular Posts