Friday, September 30, 2022

Mughal Emperors - Bahadur Shah / பிற்கால முகலாயப் பேரரசு

  • பிற்கால முகலாயப் பேரரசு.
  • பக்சார் போர் 1764.
  • இரண்டாம் அக்பர் கிபி 1806 -1837.
  • இரண்டாம் பகதூர் ஷா கிபி 1837 -1857.

முக்கியக் குறிப்புகள்.


  • சுபேதாக்கள்.
  • அமைச்சர்கள்.
  • பிற அமைச்சர்கள்.
  • நிலங்களின் பிரிவு அக்பர் காலத்தில்.
  • முகலாயர் கால சமுதாயம்.
  • முக்கிய நகரங்கள்.
  • ஆடைகள்.
  • சமுதாய பிரிவு.

பிற்கால முகலாயப் பேரரசு.


முதலாம் பகதூர் ஷா 1707 - 1712.


  • இயற்பெயர் முகமது மூஸம் ஷா.
  • ஷா ஆலம் பட்டப்பெயருடன் ஆட்சி செய்தார்.

ஜக்கந்தர் ஷா கிபி 1712 - 1713.


பரூக் ஷயர் கிபி 1713 - 1720.


  • ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியா முழுவதும் வணிகம் செய்தது.

முகமது ஷா கிபி 1720 - 1748.


  • 1739 நாதிர்ஷா படையெடுப்பு.
  • மயிலாசனம் மற்றும் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டது.

அகமது ஷா கிபி 1748 - 1754.


இரண்டாம் ஆலம்கீர் கிபி 1754 - 1759.


இரண்டாம் ஷா ஆலம் கிபி 1759 - 1806.


  • 1761 மூன்றாம் பானிபட் போர் - மராட்டியர் மற்றும் அகமது ஷா அப்தாலி.
  • 1764 பக்சார் போர் வங்காள நவாப் மீர் காசிம் அயோத்தி நவாப் உத் தவுலா ஷா ஆலம் (ஆங்கிலேயருடன் போர்).
  • 1765 அலகாபாத் உடன்படிக்கை.
  • 1806 வேலூர் புரட்சி கலகம்.

பக்சார் போர் 1764.


  • வங்காள நவாப் மீர் காசிம் மீது ஆங்கிலேயர் படை எடுத்தபோது காசிமிற்கு உதவியாக அயோத்தி நவாப் ஹுஜா உத்தௌலா மற்றும் இரண்டாவது ஷா ஆலம் இருந்தனர்.
  • ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
  • தோற்றதற்காக வங்காளம் பீகார், ஒரிசா பகுதிகளைச் ஷா ஆலம் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்.
  • 26 லட்சம் ஆண்டுதோறும் (அ) மாதம்தோறும் கொடுத்தனர்.
  • 1765 அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தானது.

இரண்டாம் அக்பர் கிபி 1806 -1837.


  • ராஜாராம் மோகன்ராய் இவரின் நண்பர்.

இரண்டாம் பகதூர் ஷா கிபி 1837 -1857.


  • இவரின் காலத்தில் மாபெரும் புரட்சி நடைபெற்றது இதன் பிறகே முகலாயர்கள் அரண்மனை மற்றும் கோட்டைகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
  • குதப் பகுதியில் தங்க, டல்ஹவுசி பிரபு ஆணையிட்டார்.
  • இவருக்குப் பின்னர் வந்த முகலாயர்களில் அரசர்கள் இருக்கக் கூடாது இளவரசர் மட்டும் இருக்கலாமெனக் கானிங் பிரபு கூறினார்.

முக்கியக் குறிப்புகள்.


  • பேரரசு (பாதுஷா) அரசர் - சுபாக்கள் (மாகாணங்கள் / மாநிலங்கள்) சுபேதார் - சர்க்கார் மாவட்டங்கள் (பாஜ்தார்) பர்கானா (ஷிக் தார்) - கிராமங்கள் (முக்காடம்) - நிர்வாக உறுப்பு (பஞ்ச்) பஞ்சாயத்து - மக்கள்.

சுபேதாக்கள்


  • அக்பர் - 15 எண்ணிக்கை.
  • ஜஹாங்கீர் - 17.
  • ஷாஜகான் - 22.
  • ஒளரங்கசீப் (Aurangzeb) - 21.
  • சுபேதார் - உதவி.
  • திவான் - நிதி அமைச்சர்.
  • மாநில சதர் - சமயத் துறை.
  • பட்சி - வழக்கு அலுவலர்.
  • கொத் வால் - நகர சிறப்பு நிர்வாக அலுவலர்.

அமைச்சர்கள்.


  • வகீல் - பிரதமர்.
  • மீர் சாமான் குவாசி - தலைமை நீதிபதி.
  • மீர்பாக் ஷி - ராணுவம்.
  • வசிர் (திவானி ஆலா) - நிதித்துறை.
  • காஸி - நீதித்துறை.
  • சதா உஸ் தனர் - சமயத் துறை (religion matter).
  • மஹதாபி - பொது ஒழுக்கக் கட்டுப்பாடு.
  • கான் இ சாமான் - உயர் அரண்மனை அலுவலர்.

பிற அமைச்சர்கள்.


  • தரோகா இ தாசௌகி - ஒற்றர் தலைவர்.
  • மீர் ஐ அடிஷ் - பீரங்கி படைத்தலைவர்.
  • மீர் பஹரி - சிறு கப்பற்படை தலைவர்.
  • மீர் பார் - காடுகளுக்குப் பொறுப்பாளர்.
  • அமீர் தோசக் - அவை சடங்குப் பொறுப்பாளர்.

நிலங்களின் பிரிவு அக்பர் காலத்தில்.


  • போலஜ் - ஆண்டுதோறும் பயிரிடும் நிலம்.
  • பரௌதி - இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை.
  • சச்சார் - மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை.
  • பஞ்சார் - 5 அல்லது அதற்கு அதிகமான காலம்.

முகலாயர் கால சமுதாயம்.


  • இந்திய மக்கள் தொகை 16ம் நூற்றாண்டில் 15 கோடி 18ஆம் நூற்றாண்டில் 20 கோடி.
  • நிலப்பரப்பு - காடுகள் அதிகம் வேளாண்மை குறைவு.
  • சமூக முதன்மை தொழில் வேளாண்மை.
  • சமூக முதன்மை நிறுவனம் - கிராம சமூகம்.
  • கிராமத் தலைவர் முக்காடம் - பஞ்ச் (பஞ்சாயத்து).
  • சமூகத்தின் நடுத்தரவர்க்கம் சிறிய கடைகள் வைத்திருப்பார்கள்.
  • சிறிய மன்சப்தாரிகள்.
  • ஹக்கீம் - மருத்துவர்கள்.
  • இசைக்கலைஞர்கள் அதிகம்.
  • மதாத் இ மாஷ் - மானியம் பெறும் வர்க்கம்.

முக்கிய நகரங்கள்.


  • டெல்லி, ஆக்ரா, பதேபூர் சிக்ரி, லாகூர், அகமது நகர், டாக்கா, முல்தான் ஆகியவை லண்டன் பாரிஸ் நகருக்கு சமமாக இருந்ததாகக் கூறினர்.

ஆடைகள்.


  • மேல்தட்டு மக்கள் உயர்தர ஆடைகள் மற்றும் அணிகலன்கள் பயன்படுத்தினார்.
  • கீழ்தட்டு மக்கள் லங்கோடு - ஆண், சேலை- பெண்கள் பயன்படுத்தினர்.

சமுதாய பிரிவு.


  • மேட்டுக்குடியினர்.
  • நடுத்தர பிரிவினர்.
  • கீழ்நிலை வகுப்பினர்.
  • அடிமைகள்.
  • மன்சப்தாரிகள் /பிரபுக்கள் (அடக்கு முறை சுரண்ட கூடிய பண்பினர்).
  • ஜமீன்தார்கள்.

No comments:

Popular Posts