Friday, September 30, 2022

Mughal Emperors Part 9

முகலாயர்கள்.


  • ஜமீன்தார்கள்.
  • பெண்களின் நிலை.
  • பொருளாதாரம்.
  • ஜப்தி முறை அறிமுகம்.
  • வணிகம்/ வர்த்தகம்.
  • புகழ்பெற்ற வரிகள் சமூகத்தினர்.
  • ஐரோப்பியர்கள்.
  • மதங்கள்.
  • கபீர்.
  • சீக்கிய மதம்.

ஜமீன்தார்கள்.


  • அபுல் பாசல் -அயனி அக்பரி நூலில் ஜமீன்தாராக இருக்க ஜாதி, தகுதிபற்றிக் கூறியுள்ளார்.
  • முஸ்லிம்கள், துருக்கியர், ஆப்கானியர், அரேபியர்கள், ஈரானியர்கள், ராஜபுத்திரர்கள்,  மராட்டியர்கள், இந்துக்கள், பிராமணர், ஆப்கானிய இந்திய முஸ்லிம்கள் (ஷேயிக் சதாஸ்) ஆகியோர்  ஜமீன்தாராக இருந்தனர்.
  • அக்பர் காலத்தில் ராஜா தோடர்மால், ராஜா மான்சிங், ராஜா பீர்பாலென 15% இந்து பிரபுக்கள்  இருந்தனர்.
  • ஜகாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் - மராட்டியப் பிரபுக்களை வைத்திருந்தனர்.
  • ஷாஜகான் சிவாஜியின் தந்தை ஷாஜியை பிரபுவாக வைத்திருந்தார்.
  • ராஜபுத்திரர்கள் நிர்வாகப் பணிக்காகக் காயஸ்தர், கத்ரி சமூகத்தைப் பயன்படுத்தினர்.

பெண்களின் நிலை.


  • இந்துப் பெண்கள் சிறிய வயதில் திருமணம் செய்தனர்.
  • விதவை திருமணம் இல்லை.
  • சொத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே உரிமை.
  • முஸ்லிம் பெண்கள் மகர் எனப்படும் திருமண பரிசு பெறும் உரிமை இருந்தது (மணமகன்  பெண்ணிற்கு தருவது).

பொருளாதாரம்.


  • அடித்தளம் வேளாண்மை.
  • காடு சார்ந்த வேளாண்மை பொருளாதாரம்.
  • தொழில்கள் அனைத்தும் வளர்ந்தது.
  • உற்பத்தியாளர்களுக்கும் காடுகளுக்கு மிகவும் நெருக்கமான உறவு இருந்தது.
  • முக்கிய பாசன முறை கிணற்று நீர் பாசனம்.
  • அயனி அக்பரி நூலில் ரபி, காரீப் பருவங்களில் பயிரிடப்பட்டது எனக் கூறுகிறது.
  • 16ஆம் நூற்றாண்டில் அன்னாசிப்பழம் அறிமுகம்.
  • 17ஆம் நூற்றாண்டில் புகையிலை, மக்காச்சோளம் அறிமுகம்.
  • 18ம் நூற்றாண்டில் உருளைக்கிழங்கு, சிகப்பு மிளகாய் அறிமுகம்.
  • வேர்க்கடலை, தக்காளி, கொய்யா அறிமுகம் செய்யப்பட்டது..
  • முக்கிய வணிக பயிர் இண்டிகோ (அவுரி) சாயம்.
    தலைமை பட்டு உற்பத்தி மையம்- வங்காளம்.
  • நிலவரி 1/3.

ஜப்தி முறை அறிமுகம்.


  • ராஜா தோடர்மால் அறிமுகம்.
  • அக்பர் பிரகடனம் அதற்குத் தாஹாசாலா எனப் பெயர் 1580.
  • வரி விவர அட்டவணை - தஸ்தர் என்றழைக்கப்பட்டது.
  • நகரப்புற பொருளாதாரம் தொழிற்கூடங்கள் சார்ந்தது.
  • முக்கிய தொழில் கூடங்கள் இரும்பு, தாமிரம், வைரச்சுரங்கம் மற்றும் துப்பாக்கி தயாரிப்பு.
  • அரசாங்க தொழிற்கூடங்கள் லாகூர், ஆக்ரா, பதேபூர் மற்றும் அகமதாபாத் கர்கானா.
  • கர்கானா -விலையுயர்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழிற் கூடம்.

வணிகம்/ வர்த்தகம்.


  • சட்ட ஒழுங்குடன் நடைபெற்றது.
  • சேத் போரா தொலைதூர வணிகம்.
  • பானிக் உள் நாட்டு வர்த்தகம்.
  • பஞ்சாராக்கள் நாடோடி வணிகக்குழு /மொத்த வியாபாரம்.
  • ஆறுகள், சாலைகள், ஒட்டகம், மாட்டுவண்டி மூலம் வணிகம் செய்தனர்.
  • வங்காளம் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் அரிசி, கோதுமை, உணவுத் தானியம் மஸ்லின் பட்டு,  சோழமண்டல கடற்கரையின் பருத்தித் துணி உற்பத்தி செய்யப்பட்டது.
  • காஷ்மீர் சால்வை.
  • லாகூர் தரைவிரிப்புகள் கைவினைப் பொருட்கள்.
  • உண்டி - கடன் பத்திரங்கள்.
  • சராய்க்கள் எனப்படும் சத்திரங்கள் கட்டப்பட்டிருந்தது.

புகழ்பெற்ற வரிகள் சமூகத்தினர்.


  • குஜராத்- போரா முஸ்லிம்கள்.
  • ரஜபுதனம் -மார்வாரிகள்.
  • சோழமண்டலக் கடற்கரை - செட்டியார்கள்.
  • மலபார் -முஸ்லிம்கள்.

ஐரோப்பியர்கள்.


  • ஏற்றுமதி நறுமண பொருட்கள், சாயங்கள், மஸ்லின் பட்டு, பருத்தி துணி.
  • இறக்குமதி தங்கம், வெள்ளி.

மதங்கள்.


  • இந்து மதம் - 16, 17 ஆம் நூற்றாண்டு வைணவ மதம்.
  • ராமர் வழிபாட்டு முறைபற்றித் துளசிதாசரின் ராம்சரிதமனாஸ்.
  • கிருஷ்ண வழிபாட்டு முறை - வல்லபாச்சாரியார் மகன் வித்தல்நாத் சூர்தாஸ் சூர்சராவளி.
  • ஏகநாதர், துக்காராம் மகாராஷ்டிரா.
  • வியாசராயரால் தசருதா இயக்கம் கர்நாடகாவில் (தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் துவங்கினார்).

கபீர்.


  • முழுமையான ஒரு கடவுள் கோட்பாட்டை வலியுறுத்தினார்.
  • எதிர்த்தவை உருவ வழிபாடு, சடங்குகள், ஜாதி முறை.
  • சமய பரப்புதல் அதிகம் வட இந்தியாவில் காணப்பட்டது.
  • ஹரியானா சத்னாமி சமூகம் இவரின் கொள்கையை ஏற்றுக் கொண்டனர்.
  • கபீர் ஒரு நெசவாளர் பிராமணராகப் பிறந்து முஸ்லிமால் வளர்க்கப்பட்டவர்.
  • ரவிதாஸ் தோல் பதனிடும் தொழில் செய்பவர்.
  • சைன் -சிகையலங்கார தொழில் செய்பவர்.
  • தாது - பருத்தி சுத்தம் செய்பவர்.

சீக்கிய மதம்.


  • தோற்றுவித்தவர் குருநானக்.
  • கோட்பாடு கடவுள் ஒருவரே உருவமற்றவர் எங்கும் இருப்பவர்.
  • புனித நூல் குருகிரந்த் சாகிப்.
  • இஸ்லாமிய மதகுரு ஷேக் பரீத்.
  • பக்தி இயக்கப் புலவர்கள் கபீர், ரவி, தாஸ், சைன் தாது ஆகியோர் குருநானக் போதனையை  உள்ளடக்கியே பரப்புரை செய்தனர்.
  • குருநானக் ஆதரித்தவை - அன்பு, நன்னெறி கடைபிடிப்பு.
  • குருநானக் எதிர்த்தவை - உருவ வழிபாடு சடங்குகள் ஜாதி முறை.

No comments:

Popular Posts