Friday, October 07, 2022

TNPSC G.K - 191 | பொதுத்தமிழ் - ஐங்குறுநூறு.

ஐங்குறுநூற்றின் உருவம்:


  • திணை = அகத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 500
  • பாடியோர் = 5
  • அடி எல்லை = 3-6

பெயர்க்காரணம்:


  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.

தொகுப்பு:


  • தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  • தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

உரை, பதிப்பு:


  • முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சாமிநாதர்
  • முதலில் உரை எழுதியவர் = ஔவை சு. துரைசாமிப்பிள்ளை

கடவுள் வாழ்த்து:


  • இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்

நூல் பகுப்பு:


  • ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணைக்கும் நூறு நூறு பாடல்கள் என்னும் வீதத்தில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாடல்கள் எனப் பத்து பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு பத்து பாடல்களின் தலைப்பும் “பத்து” என முடிகிறது.
  • குரங்குப்பத்து, எருமைப்பத்து, குயிற்பத்து, வேட்கைப்பத்து தொண்டிப்பத்து, மஞ்சைபத்து மறுதரவு பத்து போன்ற தலைப்புகள் உள்ளன.

பாடியோர்:


  • இந்நூலை இயற்றியவர்கள் பற்றிப் பழம்பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
  • மருதமோ ரம்போகி, நெய்தலம் மூவன்
  • கருதும் குறிஞ்சி கபிலன் – கருதிய
  • பாலை ஓதலாந்தை பனிமுல்லை பேயனே
  • நூலை ஓது ஐங்குறு நூறு
  • மருதம் திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
  • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
  • குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
  • பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
  • முல்லை திணை பாடல்கள் பாடியவர் = பேயனார்

நூலில் கூறப்படும் அரசர்கள்:


  • கடுமான் குட்டுவன்
  • ஆதன் அவினி
  • கொற்கை கோமான் மத்தி

நூலில் கூறப்படும் ஊர்கள்:


  • தொண்டி தேனூர்
  • கழார்(காவிரி) கொற்கை

கிடைக்காதவை:


  • ஐங்குறுநூற்றில் உள்ள ஐநூறு பாடல்களில் 129, 130 ஆகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால் 498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பொதுவான குறிப்புகள்:


  • தொகை நூல்களில் மருதத்திணையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்ட நூல் இதுவே.
  • தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ளது.
  • அம்மூவனார் இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ள தொண்டிப்பத்து, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
  • சங்க இலக்கியத்தில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு.
  • இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் இதுவே.
  • தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை என்ற வனப்பு இதில் விரவி வந்துள்ளது.
  • ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதன் மரூஉ மொழி
  • புலவர்கள் சிலர்
  • பேயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன
  • கபிலர் குறுந்தொகையில் குறிப்பு உள்ளது ஓதலாந்தையார்
  • ஆந்தையார் என்பது இவர் இயற்பெயர் ஓதலூர் என்னும் ஊரில் பிறந்ததால் இப்பெயர் பெற்றார்

முக்கிய அடிகள்:


  • அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்
  • தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
  • உவலைக் கூவல் கீழ
  • மானுண்டு எஞ்சிய கலுழி நீரே - (கபிலர்)
  • நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
  • விளைக வயலே வருக இரவலர்
  • என வேட்டோய் யாயே - (ஓரம்போகியார்)
  • பூத்த கரும்பில் காய்ந்த நெல்லிற்
  • கழனி யூரன்
  • வாழி ஆதன் வாழி அவினி

No comments:

Popular Posts