Saturday, November 12, 2022

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2022

நவம்பர் 1 : சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உள்பட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.


நவம்பர் 1 : ராஜஸ்தானில், ஆங்கிலேயே ராணுவத்தால் கொல்லப்பட்ட பழங்குடியினருக்கான நினை விடத்தை தேசிய நினைவுச்சின்னமாக பிரதமர் ேமாடி அறிவித்தார்.


நவம்பர் 1 : ‘சென்னையில் கடந்த ஆண்டு மழை நீர் பாதித்த பகுதிகளில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை’ என்றும், ‘மழை நீர் வடிகால் பணிகள் 75 சதவீதம் நிறைவுபெற்றுள்ளன’ என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


நவம்பர் 2 : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.


நவம்பர் 2 : 11 ஆயிரம் அரசு பள்ளிகளில் 30-க்கும் குறைவான மாணவர்கள் இருப்பது தமிழக கல்வித்துறையின் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.


நவம்பர் 2 : உரத்துக்கு ரூ.51 ஆயிரத்து 875 கோடி மானியம் வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.


நவம்பர் 2 : ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


நவம்பர் 3 : குஜராத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந் தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.


நவம்பர் 3 : உணவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளை ஆய்வு செய்வதற்கான செல்போன் செயலியை அமைச்சர் சக்கரபாணி அறிமுகம் செய்து வைத்தார்.


நவம்பர் 3 : முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


நவம்பர் 3 : 2020-2021 கல்வி ஆண்டில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் எண்ணிக்கை 1.95 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மத்திய கல்வி அமைச்சகம் திரட்டிய புள்ளி விவரத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.


நவம்பர் 4 : இந்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தமிழில் பாடப்புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.


நவம்பர் 4 : தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


நவம்பர் 4 : காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, டெல்லியில், தொடக்கப்பள்ளிகள் மூடப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


நவம்பர் 5 : தமிழகத்தில் வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழையின் போது உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


நவம்பர் 5 : நாட்டின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி 106 வயதில் மரணம் அடைந்தார்.


நவம்பர் 5 : திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 10,258 கிலோ தங்கம், ரொக்கம் 15,938 கோடி ரூபாய் ஆகியவை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.


நவம்பர் 3 : ஆசிய செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.


நவம்பர் 5 : தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக டாக்டர் அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டார்.


நவம்பர் 2 : டுவிட்டரில் ‘புளூ டிக்’ கணக்குகளுக்கு மாதம் ரூ.660 கட்டணம் விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.


நவம்பர் 2 : இஸ்ரேலில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் மீண்டும் அந்த நாட்டின் பிரதமராகவுள்ளார்.


நவம்பர் 2 : வடகொரியாவும், தென் கொரியாவும் பரஸ்பர ஏவுகணை வீச்சில் ஈடுபட்ட சம்பவம் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


நவம்பர் 3 : வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது தென்கொரியாவையும், ஜப்பானையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


நவம்பர் 5 : பாகிஸ்தானில் நடந்த பேரணியில் பங்கேற்ற போது இம்ரான் கான் சுடப்பட்டார். காலில் படுகாயம் அடைந்த அவருக்கு லாகூர் ஆஸ்பத்திரியில் அவசர அறுவை சிகிச்சை நடந்தது.


நவம்பர் 5 : உக்ரைன் போரில் ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஈரான் ஒப்புக்கொண்டது.


நவம்பர் 6 : மக்களிடம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் இல்லாத நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் அவலம் நேரப்போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


நவம்பர் 6 : டாக்டர்கள் படிப்பை முடித்தவுடன் குறிப்பிட்ட காலம் அரசுப்பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்து பிணை பத்திரம் வழங்குவது முடிவுக்கு வருகிறது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதில் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


நவம்பர் 6 : திருப்பதி கோவில் சொத்து மதிப்பு ரூ.2½ லட்சம் கோடி என்ற தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.


நவம்பர் 7 : பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.


நவம்பர் 7 : விதிமீறல் கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதித்து விட்டு, பின்னர் அவற்றை வரன்முறை செய்வதற்கு பதிலாக, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்ப பெற்றுவிடலாமே? என்று சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


நவம்பர் 7 : தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதியும் தொடங்குகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.


நவம்பர் 8 : தமிழகத்தின் 17-வது வன விலங்கு சரணாலயம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் அமைகிறது. இதற்கு புதிய காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம் என்று தமிழக அரசு பெயர் அறிவித்துள்ளது.


நவம்பர் 8 : 10 லட்சம் பேர் எழுதிய குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு வெளியானது. இதில் 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.


நவம்பர் 8 : புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.


நவம்பர் 8 : ‘ஜி-20’ அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைத்து மக்களுக்கும் பெருமிதம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


நவம்பர் 9 : பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்படும் என மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


நவம்பர் 9 : நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.


நவம்பர் 9 : முதுநிலைபடிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


நவம்பர் 9 : சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவி ஏற்றார்.


நவம்பர் 10 : 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


நவம்பர் 10 : இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், சூரிய மின்சக்தி உற்பத்தியால் எரிபொருள் செலவில் ரூ.34 ஆயிரம் கோடியை இந்தியா சேமித்துள்ளது.


நவம்பர் 10 : இந்திய ரெயில்வேயின் 65 ஆயிரத்து 141 கிலோ மீட்டர் அகலப்பாதை வழித்தடங்களில் 53 ஆயிரத்து 470 கிலோ மீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன.


நவம்பர் 11 : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.


நவம்பர் 11 : இந்த நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.10.54 லட்சம் கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நவம்பர் 11 : சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.


நவம்பர் 11 : ஜார்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா, சட்டசபையில் நிறைவேறியது.


நவம்பர் 12 : சுப்ரீம் கோர்ட்டு அளித்த விடுதலை தீர்ப்பையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


நவம்பர் 12 : அணைகளில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


நவம்பர் 12 : சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 செ.மீ. மழை பதிவானது.


நவம்பர் 20 : ஜார்கண்டில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்த 120 வெடிகுண்டுகள் பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டன.


நவம்பர் 20 : தடை நீக்கத்தையடுத்து டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது.


நவம்பர் 20 : அத்தியாவசிய மருந்து பட்டியலில் இதய ‘ஸ்டெண்ட்’ சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து விலை குறைய உள்ளது.


நவம்பர் 20 : மங்களூருவில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் குண்டு என்றும், இது பயங்கரவாத செயல் என்றும் கர்நாடக மாநில போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.


நவம்பர் 21 : உயர் சாதியினருக்கு ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும். ஆனால், பிற வகுப்பினருக்கு ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் இருந்தாலே சலுகைகளை இழக்கும் நிலை உள்ளதாக தொடர்ந்த வழக்கில் மத்திய நிதி அமைச்சகம் பதில் அளிக்க மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


நவம்பர் 21 : டிசம்பர் 1-ந் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 22 : இந்தியாவில் ஒரே ஆண்டில் 7 லட்சம் பேர் உயிரை 5 வகை பாக்டீரியாக்கள் பறித்துள்ளன என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.


நவம்பர் 22 : மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கு 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி நியமன ஆணைகளை வழங்கினார்.


நவம்பர் 22 : மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


நவம்பர் 22 : மதுரை எய்ம்ஸ் பணிகளை 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிப்போம் என்பது சாத்தியமா? என்று மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.


நவம்பர் 22 : மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை கூறியுள்ளது.


நவம்பர் 22 : சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.


நவம்பர் 23 : மின் கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு அவசியம் என்ற மின்வாரியத்தின் திடீர் நடவடிக்கை பொதுமக்களை அவதிக்கு உள்ளாக்கியது.


நவம்பர் 23 : ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


நவம்பர் 23 : சட்டப்படி செயல்படக்கூடிய போலீசாரை அனைத்து சூழ் நிலைகளிலும் காப்பாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.


நவம்பர் 23 : தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக 10 பக்க புகார் மனுவை அளித்தார்.


நவம்பர் 23 : இயற்கை நீரோடைகளை திசை திருப்புவதை ஏற்க முடியாது என்றும், எஸ்டேட்டுகள், ரிசார்ட்டுகளில் சட்டவிரோத நீர்வீழ்ச்சிகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


நவம்பர் 24 : உள்நாட்டிலேேய கட்டப்பட்ட புதிய போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.


நவம்பர் 24 : தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 190 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


நவம்பர் 24 : மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ள புதிய பயங்கரவாத அமைப்பு கர்நாடக கூடுதல் டி.ஜி.பி.க்கும் மிரட்டல் விடுத்தது.


நவம்பர் 24 : ஏர் இந்தியா நிறுவன விமானங்களில் வேலை செய்கிற பணிப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பணிப்பெண்கள் ½ செ.மீ. அளவில் பொட்டு அணியலாம், மதக்கயிறுகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 24 : நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதி கட்டுக்களை உடைக்க முடியவில்லை என சென்னை ஐகோர்ட்டு வேதனை கருத்து தெரிவித்துள்ளது.


நவம்பர் 24 : சென்னை விமான நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையத்தை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தொடங்கி வைத்தார்.


நவம்பர் 25 : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவைத்தொகையாக ரூ.17 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.1,188 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.


நவம்பர் 25 : வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.


நவம்பர் 26 : ‘குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடுத்த 24 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்' என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.


நவம்பர் 26 : அசுர வளர்ச்சியாலும், அதிவேக பொருளாதார முன்னேற்றத்தாலும் உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தியாவைப் பார்க்கிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.


இநவம்பர் 26 : ந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என்று பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


நவம்பர் 26 : மெட்ரோ ரெயில்களில் இருப்பது போல மாநகர பஸ்களில் பஸ் நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஒலிக்கருவி வசதி திட்டத்தை, சென்னையில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.


நவம்பர் 26 : ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.


நவம்பர் 26 : ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், டிசம்பர் 31-ந்தேதி வரை பழைய முறையில் மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.


நவம்பர் 20 : உக்ரைன் போரால் கடுமையான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை உலகம் எதிர்கொண்டதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார்.


நவம்பர் 20 : 6 மாதங்களில் முதல்முறையாக சீனாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.


நவம்பர் 21 : உலக கால்பந்து போட்டியையொட்டி நாமக்கல்லில் இருந்து கத்தார் நாட்டிற்கு 1½ கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டது.


நவம்பர் 21 : இந்தோனேஷியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் 162 பேர் உயிரிழந்தனர். 700 பேர் படுகாயமடைந்தனர்.


நவம்பர் 24 : னாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


நவம்பர் 20 : உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஈகுவடார் அணி கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.


நவம்பர் 21 : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் அருணாசலபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் ஜெகதீசன் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். அத்துடன் தொடர்ச்சியாக 5 சதம் அடித்தும் வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.


நவம்பர் 21 : ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் 6-வது முறையாக ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். ரூ.38¾ கோடியை பரிசாக அள்ளினார்.


நவம்பர் 22 : உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது.


நவம்பர் 22 : இந்தியா- நியூசிலாந்து மோதிய கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழை குறுக்கிட்டதால் ‘டை’யில் முடிந்தது. தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.


நவம்பர் 23 : உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி, பலம் வாய்ந்த முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை தோற்கடித்தது.


நவம்பர் 23 : ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து அணி முதலிடத்தை இழந்தது.


நவம்பர் 23 : நவ 25 -உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது தோல்வியுடன் கத்தார் அணி வெளியேறியது.


நவம்பர் 23 : நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 306 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது.


நவம்பர் 27 : தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 2.99 லட்சம் பேர் எழுதினார்கள். 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் இந்த தேர்வில் கலந்து கொண்டனர்.


நவம்பர் 27 : அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் 2 புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


நவம்பர் 27 : காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்படும் என்று வாரணாசி மாவட்ட கலெக்டரான தமிழ்நாட்டின் கடையநல்லூரை சேர்ந்த ராஜலிங்கம் அறிவித்துள்ளார்.


நவம்பர் 27 : ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதி ஆனது. இதைத் தொடர்ந்து நிலுவையில் இருக்கும் மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


நவம்பர் 28 : மாணவர்களிடம் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு பள்ளிகளில் `வானவில் மன்றம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.


நவம்பர் 28 : கங்கை கொண்ட சோழபுரம் அருகே அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


நவம்பர் 28 : இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தை ஸ்ரீஹரிஹோட்டாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார்.


நவம்பர் 28 : சென்னை விமான நிலையத்தில் வாகன போக்கு வரத்து நெரிசலை குறைக்க உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களுக்கு தனித்தனி வழிகளும், கூடுதல் கட்டண சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.


நவம்பர் 28 : தமிழகத்தில் இதுவரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 17 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.


நவம்பர் 29 : ஆர்கானிக் அரிசி, குருணை அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியது.


நவம்பர் 29 : தமிழகத்தில் 3.62 கோடி வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.


நவம்பர் 29 : பள்ளிகளில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு, பள்ளிகளில் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படாததை அப்படியே விட்டுவிட முடியாது எனவும் கருத்து தெரிவித்தது.


நவம்பர் 29 : ஊழல் வழக்கு விசாரணையை சிறப்பு கோர்ட்டு நீதிபதிகள் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். தேவையின்றி வாய்தா கொடுக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


நவம்பர் 29 : கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க மேலும் 4 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.


நவம்பர் 30 : மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனைக்காக மண் எடுக்கும் சவாலான பணி தொடங்கியது.


நவம்பர் 30 : இந்தியாவில் 2030-க்குள் ஆண்டுதோறும் 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் என்று உலக வங்கி அதிர்ச்சித்தகவல் வெளியிட்டுள்ளது.


நவம்பர் 30 : தாராவி குடிசைப்பகுதியை அடுக்குமாடி கட்டிடங்களாக மாற்றும் சீரமைப்பு திட்டப்பணி அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த திட்டப்பணியையொட்டி அங்கு வசிப்பவர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.


நவம்பர் 30 : கடல் பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோ கடந்த 26-ந் தேதி விண்ணுக்கு அனுப்பிய ‘ஓசோன் சாட்-03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோவின் தேசிய தொலை நிலை உணர்தல் மையத்துக்கு அனுப்பி உள்ளது.


நவம்பர் 29 : ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை அடுத்த மாதம் திறக்கப்படுகிறது.


நவம்பர் 29 : அமெரிக்காவுக்கு போட்டியாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா வெளியிட்டது.


நவம்பர் 29 : அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய எரிமலை 38 ஆண்டுகளுக்கு பின்பு வெடித்தது.


No comments:

Popular Posts