[1]
6.023×1023 என்பது?
a. மோல் எண்.
b. அவோகெட்ரோ எண்.
c. மூலக்கூறு நிறை எண்.
d. ஒப்பு மூலக்கூறு நிறை எண்.
Answer: b. அவோகெட்ரோ எண்.
[2]
STP-இல் ஒரு மோல் வாயுவானது அடைத்துக் கொள்ளும் பருமன் மோலார் பருமன் எனப்படும். அதன் மதிப்பு எவ்வளவு?
a. 20.4 லிட்டர்.
b. 22.4 லிட்டர்.
c. 24.2 லிட்டர்.
d. 25.4 லிட்டர்.
Answer: b. 22.4 லிட்டர்.
[3]
அதிக கார்பனை கொண்டு அதிக வெப்ப ஆற்றலைத் தரும் நிலக்கரி வகை எது?
a. லிக்னைட்.
b. பிட்டுமண் நிலக்கரி.
c. ஆந்திரசைட்.
d. மென் நிலக்கரி.
Answer: c. ஆந்திரசைட்.
[4]
கரைப்பான் மூலக்கூறுகள் அதன் செறிவு அதிகமான இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்கு ஒரு அரை கடத்து சவ்வின் மூலம் கடத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படும்?
a. உள்ளீர்த்தல்.
b. பரவுதல்.
c. சவ்வூடு பரவல்.
d. உயிர்ப்பு உறிஞ்சுதல்.
Answer: c. சவ்வூடு பரவல்.
[5]
வேர்த்தூவிகள் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது சைலக்குழாய்களை அடைந்து அங்கிருந்து இலைகளை அடையும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?
a. நீராவிப்போக்கு.
b. உள்ளீர்த்தல்.
c. பரவுதல்.
d. சாறேற்றம்.
Answer: d. சாறேற்றம்.
[6]
தாவரங்கள் கார்போ ஹைட்ரேட் தயாரித்தலில் பயன்படாதது எது?
a. ஒளி ஆற்றல்.
b. CO2.
c. சைலக் குழாய்கள்.
d. நீர்.
Answer: c. சைலக் குழாய்கள்.
[7]
ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் தயாரிக்கும் இறுதிப்பொருள் எது?
a. கரியமில வாயு.
b. குளுக்கோஸ்.
c. நீர்.
d. ஆக்ஸிஜன்.
Answer: b. குளுக்கோஸ்.
[8]
ஒளிவினையில் உண்டான ATP மற்றும் NADPH2 ஆகியவற்றின் உதவியால் கரியமில வாயுவானது (CO2) கார்போ ஹைட்ரேட்டாக ஒடுக்க அடையும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a. ஒளிவினை.
b. நைட்ரஜன் நிலைநிறுத்தம்.
c. சுவாசித்தல்.
d. இருள்வினை.
Answer: d. இருள்வினை.
[9]
நீராவிப் போக்கின் முக்கிய வகையானது?
a. இலைத்துளை நீராவிப்போக்கு.
b. கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு.
c. பட்டைத்துளை நீராவிப்போக்கு.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[10]
மணி ஜாடி சோதனை எதை விளக்கும் சோதனை ஆகும்?
a. இலைகள் மூலம் நீராவிப் போக்கு நடைபெறுவதை.
b. தண்டின் மூலம் நீர் கடத்தப்படுவதை.
c. வேர்கள் மூலம் உறிஞ்சப்படுவதை.
d. நீரை வேர்த்தூவிகள் மூலம் பரவுவதை.
Answer: a. இலைகள் மூலம் நீராவிப் போக்கு நடைபெறுவதை.
[11]
செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது எது?
a. கார்போஹைட்ரேட்.
b. அடினோசின் ட்ரை பாஸ்பேட்.
c. குளோரோபின்.
d. பசுங்கணிகம்.
Answer: b. அடினோசின் ட்ரை பாஸ்பேட்.
[12]
காற்றுள்ள மற்றும் காற்றில்லா உயிரினங்கள் இரண்டிலும் நடைபெறும் பொதுவான நிகழ்ச்சி எது?
a. எலக்ட்ரான் கடத்து சங்கிலி.
b. கிரிப்ஸ் சுழற்சி.
c. பைருவிக் அமிலத்தின் ஆக்ஸிஜனேற்றம்.
d. கிளைக்காலிஸிஸ்.
Answer: d. கிளைக்காலிஸிஸ்.
[13]
நீர் மற்றும் அதில் கரைந்துள்ள கனிமங்கள் வேரிலிருந்து மற்ற பகுதிகளுக்கு எதன் மூலம் கடத்தப்படுகின்றன?
a. ஃபுளோயம்.
b. பாரன்கைமா.
c. கோலன்கைமா.
d. சைலம்.
Answer: d. சைலம்.
[14]
இலைகளிலிருந்து தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு உணவு கடத்தப்படும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?
a. சைலம்.
b. டிரக்கீடுகள்.
c. சல்லடைக் குழாய்கள்.
d. சைலம் நார்கள்.
Answer: c. சல்லடைக் குழாய்கள்.
[15]
ஒட்டுண்ணி உணவூட்ட முறையில் ஒரு உயிரினம் தனக்கு தேவையான உணவை எதிலிருந்து பெறுகிறது?
a. உயிரற்ற கரிமக் கூட்டுப் பொருட்களிலிருந்து பெறுகிறது.
b. மற்ற உயிரிகள் உடலிலிருந்து பெற்றுக் கொள்கிறது.
c. கனிமக் கூட்டுப் பொருட்களிலிருந்து பெற்றுக் கொள்கிறது.
d. சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்கிறது.
Answer: b. மற்ற உயிரிகள் உடலிலிருந்து பெற்றுக் கொள்கிறது.
[16]
இவற்றில் மட்குண்ணி வகை ஊட்ட முறை யானது எது?
a. மியூக்கர்.
b. நாய்க்குடை.
c. பேசில்லஸ் சட்டிலிஸ்.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[17]
புறத்தூண்டலுக்கு ஏற்ப, ஒரு தாவரத்தில் ஏற்படும் வளர்ச்சி அல்லது அசைவு எவ்வாறு அழைக்கப்படும்?
a. திசை சார்பசைவு.
b. தொங்கும் அசைவு.
c. தூண்டல் அசைவு.
d. நேர்சார்பசைவு.
Answer: a. திசை சார்பசைவு.
[18]
ஒரு சர்க்கரைப் பொருளினால் தூண்டப்பட்டு, மகரந்தக்குழல் சூல் பகுதியை நோக்கி வளர்தல் எவ்வாறு அழைக்கப்படும்?
a. வேதிசார்பசைவு.
b. புவிசார்பசைவு.
c. ஒளிசார்பசைவு.
d. நீர்சார்பசைவு.
Answer: a. வேதிசார்பசைவு.
[19]
மலர்களின் இதழ்கள் திறப்பதும் மூடுவதும் எவ்வகை அசைவு ஆகும்?
a. வளர்ச்சி அசைவு.
b. தொங்கும் அசைவு.
c. சார்பசைவு.
d. திசை அசைவு.
Answer: b. தொங்கும் அசைவு.
[20]
செல்கள் எவற்றுள் சரியாக பொருந்துகிறது?
a. உயிரினங்களின் அமைப்பு அலகாக உள்ளன.
b. உயிரினங்களின் செயல்பாடு அலகாக உள்ளன.
c. உயிரினங்களின் கட்டமைப்பு அலகாக உள்ளன.
d. மூன்றும் சரியானவை.
Answer: d. மூன்றும் சரியானவை.
[21]
புரோட்டோ பிளாஸ்ட் என்பது எதைக் குறிக்கிறது?
a. செல்லில் உள்ள மொத்தப் பிளாஸ் மாவை.
b. செல்லில் உள்ள மொத்தப் வாக்கு வோல்களை.
c. செல்லில் உள்ள மொத்தப் புரோட்டோ பிளாசத்தை.
d. செல்லில் உள்ள மொத்தப் மைட்டோ காண்ட்ரியாவை.
Answer: c. செல்லில் உள்ள மொத்தப் புரோட்டோ பிளாசத்தை.
[22]
இவற்றில் ஆக்குத் திசுக்களின் செல்களின் வடிவம் என்ன?
a. கோள வடிவம்.
b. முட்டை வடிவம்.
c. செவ்வக வடிவம்.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[23]
சைலத்தின் செல்களில் உயிருள்ளது எது?
a. சைலம் பாரன்கைமா.
b. சைலம் நார்கள்.
c. சைலம் குழாய்கள்.
d. டிரக்கீடுகள்.
Answer: a. சைலம் பாரன்கைமா.
[24]
ஃபுளோயத்தின் உயிரற்றவை எது?
a. ஃபுளோயம் பாரன்கைமா.
b. ஃபுளோயம் நார்கள்.
c. துணை செல்கள்.
d. சல்லடைக் குழாய் கூறுகள்.
Answer: b. ஃபுளோயம் நார்கள்.
[25]
பாஸ்ட் நார்கள் என அழைக்கப்படுவது எது?
a. சல்லடைக் குழாய் கூறுகள்.
b. துணை செல்கள்.
c. ஃபுளோயம் நார்கள்.
d. ஃபுளோயம் பாரன்கைமா.
Answer: c. ஃபுளோயம் நார்கள்.
[26]
முதன் முதலில் பூமியில் தோன்றிய உயிரினம் எது?
a. வைரஸ்.
b. இயோபாக்டீரியம்.
c. பூஞ்சை.
d. ஆல்காக்கள்.
Answer: b. இயோபாக்டீரியம்.
[27]
மலர் என்பது எதைக் குறிக்கிறது?
a. பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு.
b. மாறுபாடு அடைந்த வரம்புடைய வளர்ச்சியினை உடைய தண்டு தொகுப்பு.
c. இனப்பெருக்க உறுப்பு அல்ல.
d. A மற்றும் B சரி.
Answer: d. A மற்றும் B சரி.
[28]
தன் மகரந்தச் சேர்க்கையின் விளைவு என்ன?
a. வீணான மகரந்தத் தூள்கள் உருவாகும்.
b. புறக் காரணிகளை சார்ந்திருக்க வேண்டும்.
c. நன்கு முளைக்கும் திறனுடைய விதைகள் உருவாகும்.
d. புதிய ரகங்கள் உருவாகும்.
Answer: c. நன்கு முளைக்கும் திறனுடைய விதைகள் உருவாகும்.
[29]
அயல் மகரந்த சேர்க்கை மூலம் என்ன உருவாகிறது?
a. முளைக்கும் விதைகள்.
b. ஒரே ரகம்.
c. வலிமை குறைந்த உயிரிகள்.
d. புதிய ரகங்கள்.
Answer: d. புதிய ரகங்கள்.
[30]
பூச்சிகள் வழி மகரந்த சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a. சூஃபிலி.
b. அனிமோஃபிலி.
c. ஹைடிரோ ஃபிலி.
d. என்டமோபிலி.
Answer: d. என்டமோபிலி.
[31]
விலங்குகளின் வழி மகரந்தச் சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a. சூஃபிலி.
b. அனிமோஃபிலி.
c. ஹைடிரோ ஃபிலி.
d. ஆர்னித்தோ ஃபிலி.
Answer: a. சூஃபிலி.
[32]
ஹைடிரோஃபிலி வகையை சேர்ந்த தாவரம் எது?
a. மக்காச்சோளம்.
b. வாலிஸ்நீரியா.
c. அனிமோபில்லஸ்.
d. பற்கள்.
Answer: b. வாலிஸ்நீரியா.
[33]
கருவுறுதலுக்குப் பின் சூலகப்பை வளர்ந்து பெரிதாகி எவ்வாறு மாறுகிறது?
a. விதை.
b. விதை உறை.
c. கனி.
d. கனித்தோல்.
Answer: c. கனி.
[34]
கருவுறாக் கனிகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
a. திராட்சை.
b. கொய்யா.
c. அன்னாசி.
d. A மற்றும் B சரி.
Answer: d. A மற்றும் B சரி.
[35]
தனிக்கனி வகைகளில் பக்கேட் வகை கனி எது?
a. பெர்ரி.
b. ஹெஸ்பேரிடியம்.
c. போம்.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[36]
கல் போன்ற கனி என அழைக்கப்படும் கனி எது?
a. வெள்ளரி.
b. ஆப்பிள்.
c. மா.
d. ஆரஞ்சு.
Answer: c. மா.
[37]
உலர்தனிக் கனி வெடிக்கும் தன்மை கொண்டது என்ற கூற்றுக்கு பொருத்தமற்றது எது?
a. வெடிக்கும்.
b. வெடிக்காது.
c. பிளவுபடும்.
d. உதிரும்.
Answer: a. வெடிக்கும்.
[38]
கார்யாப்சிஸ் எனப்படும் வெடியா உலர் தானியம் எதைக் குறிக்கும்?
a. நெல்.
b. கோதுமை.
c. சோளம்.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[39]
நெல் ஒரு விதையுடைய தனிக்கனி ஆகும். இதற்கு என்ன பெயர்?
a. ட்ரூப்.
b. ஹெஸ்பேரிடியம்.
c. போம்.
d. கார்யாப்சிஸ்.
Answer: d. கார்யாப்சிஸ்.
[40]
கனிகளும் விதைகளும் பரவுவதேன்?
a. ஒரே இடத்தில் தாவர கூட்டங்களின் நெரிசலினால் ஏற்படும் போட்டியிலிருந்து விடுபட.
b. தாவர சிற்றினங்கள் வெற்றிகரமாக பரவ.
c. புவியில் தாவரங்கள் தங்களை நிலைநிறுத்த.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[41]
விதை விலங்குகளால் பரவுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a. ஆட்டோகோரி.
b. அனிமோகோரி.
c. சூகோரி.
d. ஹைட்ரோகோரி.
Answer: c. சூகோரி.
[42]
விதை மனிதர்களால் பரவுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a. ஆட்டோகோரி.
b. அனிமோகோரி.
c. சூகோரி.
d. ஆந்த்ரோபோகோரி.
Answer: d. ஆந்த்ரோபோகோரி.
[43]
இவற்றில் பொருத்தமான இணை எது?
a. உடற்குழியற்றது - உருளைப்புழு.
b. குளிர் இரத்த விலங்கு - பறவை.
c. வெப்ப இரத்த விலங்கு - தவளை.
d. உண்மையான உடற்குழியுடையவை - மண்புழு.
Answer: d. உண்மையான உடற்குழியுடையவை - மண்புழு.
[44]
இவற்றில் பொருத்தமான இணை எது?
a. துளையுடலிகள் - நாடாப்புழு.
b. தட்டைப்புழுக்கள் - அஸ்காரிஸ்.
c. குழியுடலிகள் - ஹைடிரா.
d. உருளைப்புழுக்கள் - மண்புழு.
Answer: c. குழியுடலிகள் - ஹைடிரா.
[45]
வளைதசைப்புழுக்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
a. மண்புழு.
b. நத்தை.
c. நட்சத்திரமீன்.
d. கரப்பான் பூச்சி.
Answer: a. மண்புழு.
[46]
கணுக்காலிகளின் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது?
a. செவ்வுள்கள்.
b. டிரக்கியா.
c. புத்தக நுரையீரல்.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[47]
மெல்லுடலிகளில் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது?
a. உடற்பரப்பு.
b. டிராக்கியா.
c. டினீடியம்.
d. மேன்டில்.
Answer: c. டினீடியம்.
[48]
இவை குழல் கால்கள் மூலம் இடம் பெயர்கின்றன.
a. முட்தோலிகள்.
b. மெல்லுடலிகள்.
c. கணுக்காலிகள்.
d. துளையுடலிகள்.
Answer: a. முட்தோலிகள்.
[49]
இரு வினைகளின் பொருள் வேறுபாடு என்ன? (உன்னுதல் - உண்ணுதல்)
a. முடித்தல் - சாப்பிடுதல்.
b. நினைத்தல் - சாப்பிடுதல்.
c. எடுத்தல் - சாப்பிடுதல்.
d. வழங்கல் - சாப்பிடுதல்.
Answer: b. நினைத்தல் - சாப்பிடுதல்.
[50]
ஆற்று' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் என்ன?
a. ஆற்றுதல்.
b. ஆற்றாமை.
c. ஆற்றுவான்.
d. ஆற்றுகின்றான்.
Answer: c. ஆற்றுவான்.
[51]
வளர்' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கண்டறிக.
a. வளர்த்து.
b. வளர்ந்த.
c. வளரும்.
d. வளரா.
Answer: a. வளர்த்து.
[52]
பணி' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கண்டறிக.
a. பணிந்திலன்.
b. பணியா.
c. பணிந்த.
d. பணிந்து.
Answer: d. பணிந்து.
[53]
ஔ' என்னும் எழுத்துக்கு இன எழுத்து எது?
a. 'உ'.
b. 'ஊ'.
c. 'இ'.
d. 'ஈ'.
Answer: a. 'உ'.
[54]
கடலுக்கு வேறு பெயர் என்ன?
a. பரவை.
b. பறவை.
c. பருவை.
d. பறுவை.
Answer: a. பரவை.
[55]
குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக: (விடு - வீடு)
a. சேருதல் - மலை.
b. பிரிந்துபோதல் - குடியிருப்பு.
c. சேருதல் - அருவி.
d. பிரிந்துபோதல் - மாலை.
Answer: b. பிரிந்துபோதல் - குடியிருப்பு.
[56]
பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் எவை?
a. தாள், செம்மல், போது.
b. அரும்பு, செம்மல், போது.
c. தட்டு, போது, அரும்பு.
d. கழி, அரும்பு, போது.
Answer: b. அரும்பு, செம்மல், போது.
[57]
உத்தியோகம்' என்பதன் தமிழ்ச்சொல் என்ன?
a. வேலை.
b. அதிகாரி.
c. வல்லுநர்.
d. பணி.
Answer: d. பணி.
[58]
உதகமண்டலம்' என்ற ஊர்ப்பெயரின் மரூஉ என்ன?
a. ஊட்டி.
b. உதகு.
c. உதகை.
d. உதகம்.
Answer: c. உதகை.
[59]
புகழாலும் பழியாலும் அறியப்படுவது எது?
a. அடக்கமுடைமை.
b. நாணுடைமை.
c. நடுவுநிலைமை.
d. பொருளுடைமை.
Answer: c. நடுவுநிலைமை.
[60]
புள்' என்பதன் வேறு பெயர் என்ன?
a. மனிதன்.
b. பூச்சிக்கொல்லி.
c. விலங்கு.
d. பறவை.
Answer: d. பறவை.
[61]
திங்கள்' என்பதன் இருபொருள் என்ன?
a. வருடம், சூரியன்.
b. நாள், விண்மீன்.
c. கிழமை, செவ்வாய்.
d. மாதம், சந்திரன்.
Answer: d. மாதம், சந்திரன்.
[62]
இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
a. வளமை.
b. முதுமை.
c. தனிமை.
d. எளிமை.
Answer: b. முதுமை.
[63]
திருக்குறள் கயல்விழியால் படிக்கப்பட்டது - இது எவ்வகை வாக்கியம்?
a. செய்யப்பாட்டு வினை.
b. செய்வினை.
c. தன்வினை.
d. பிறவினை.
Answer: a. செய்யப்பாட்டு வினை.
[64]
Weather' என்பதன் தமிழ்ச்சொல் என்ன?
a. வானிலை.
b. காலநிலை.
c. பருவநிலை.
d. மழைப்பொழிவு.
Answer: a. வானிலை.
[65]
Internet' என்பதன் தமிழ்ச்சொல் என்ன?
a. இணையம்.
b. புலனம்.
c. மென்பொருள்.
d. இசுமை.
Answer: a. இணையம்.
[66]
Art Critic' என்பதன் கலைச்சொல் என்ன?
a. கலை விமர்சகர்.
b. கலை வித்தகர்.
c. கலை ஆர்வலர்.
d. கலை நிபுணர்.
Answer: a. கலை விமர்சகர்.
[67]
Prosody' என்பதன் நேரான தமிழ்ச் சொல் என்ன?
a. சொல்லிலக்கணம்.
b. எழுத்திலக்கணம்.
c. யாப்பிலக்கணம்.
d. அணியிலக்கணம்.
Answer: c. யாப்பிலக்கணம்.
[68]
Agronomy' என்பதன் நேரான தமிழ்ச் சொல் என்ன?
a. சூழலியல்.
b. வனவியல்.
c. உளவியல்.
d. உழவியல்.
Answer: d. உழவியல்.
[69]
அவசரக் குடுக்கை' என்ற மரபுத் தொடருக்கு உரியப் பொருள் என்ன?
a. ஆராய்ந்து பாராமை.
b. எண்ணிச் செயல்படாமை.
c. புகழ்பெற்று விளங்குதல்.
d. விரைந்து வெளியேறுதல்.
Answer: b. எண்ணிச் செயல்படாமை.
[70]
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக மத்திய அரசு ஒப்புதல் அளித்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் யார்.
a. ரகுராம் ராஜன்.
b. சக்திகாந்த தாஸ்.
c. உர்ஜித் படேல்.
d. வை.வி.ரெட்டி.
Answer: c. உர்ஜித் படேல்.
[71]
செப்டம்பர் 01 ஆம் தேதி தொடங்கப்பட்ட மாநிலத் தீயணைப்பு ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்.
a. சங்கர் ஜிவால்.
b. சைலேந்திர பாபு.
c. டி.கே. ராஜேந்திரன்.
d. திரிபாதி.
Answer: a. சங்கர் ஜிவால்.
[72]
யுனெஸ்கோ அமைப்பின் தொட்டுணர முடியாத மகத்தான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு செயலாற்றி வரும் பண்டிகை எது.
a. தீபாவளி.
b. ஹோலி.
c. சத் மகாபர்வா.
d. ஓணம்.
Answer: c. சத் மகாபர்வா.
[73]
சத் பூஜை எங்கு தோன்றிய ஒரு பெரிய சூரியக் கடவுள் பண்டிகையாகும்.
a. பீகார், மேற்கு வங்கம், ஒடிசா.
b. ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்.
c. பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் நேபாளம்.
d. அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா.
Answer: c. பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் நேபாளம்.
[74]
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி எந்த மொழி தினமாக அனுசரிக்கப்பட்டது.
a. தமிழ் மொழி தினம்.
b. கன்னட மொழி தினம்.
c. தெலுங்கு மொழி தினம்.
d. மலையாள மொழி தினம்.
Answer: c. தெலுங்கு மொழி தினம்.
[75]
சர்வதேச திமிங்கலச் சுறா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது.
a. ஆகஸ்ட் 29.
b. ஆகஸ்ட் 30.
c. செப்டம்பர் 01.
d. செப்டம்பர் 07.
Answer: b. ஆகஸ்ட் 30.
[76]
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் ஒவ்வோர் ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது.
a. ஆகஸ்ட் 30.
b. செப்டம்பர் 07.
c. செப்டம்பர் 18.
d. செப்டம்பர் 26.
Answer: a. ஆகஸ்ட் 30.
[77]
ரோபோடிக்/எந்திரத் தனிப்பயனாக்கப்பட்ட லேசர் கண்புரை அறுவை சிகிச்சையைச் செய்த இந்தியாவின் முதல் அரசு நிறுவனம் எது.
a. எய்ம்ஸ், டெல்லி.
b. இராணுவ மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை (AHRR) அமைப்பு.
c. ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
d. இராணுவத் தளம் மருத்துவமனை, கொல்கத்தா.
Answer: b. இராணுவ மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை (AHRR) அமைப்பு.
[78]
குறைகடத்திகளுக்கான இந்தியாவின் முதல் சோதனைப் பகுதி எங்கு தொடங்கி வைக்கப்பட்டது.
a. சென்னை, தமிழ்நாடு.
b. பெங்களூரு, கர்நாடகா.
c. குஜராத்தின் சனந்த்.
d. புனே, மகாராஷ்டிரா.
Answer: c. குஜராத்தின் சனந்த்.
[79]
சந்திரயான்-5 ஆய்வுப் பணிக்கான கூட்டுறவினை மேற்கொண்ட நாடுகள் எவை.
a. இந்தியா மற்றும் ரஷ்யா.
b. இந்தியா மற்றும் அமெரிக்கா.
c. இந்தியா மற்றும் ஜப்பான்.
d. இந்தியா மற்றும் இஸ்ரேல்.
Answer: c. இந்தியா மற்றும் ஜப்பான்.
[80]
அருணாச்சலப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் 'அச்சூக் பிரஹார்' எனும் பெரிய கூட்டுத் தாக்குதல் பயிற்சியை நடத்திய அமைப்புகள் எவை.
a. இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை.
b. இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை.
c. இந்திய இராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை (ITBP).
d. இந்திய இராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ்.
Answer: c. இந்திய இராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை (ITBP).
[81]
காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர்களுக்கான 79 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்.
a. மீராபாய் சானு.
b. அஜய பாபு வல்லூரி.
c. ஜெரேமி லால்ரின்னுங்கா.
d. குருராஜா பூஜாரி.
Answer: b. அஜய பாபு வல்லூரி.
[82]
எந்த மாநிலத்தின் கட்ச் பகுதியில் முகேஷ் அம்பானி ஒரு பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தினை அறிவித்துள்ளார்.
a. ராஜஸ்தான்.
b. குஜராத்.
c. மகாராஷ்டிரா.
d. ஆந்திரப் பிரதேசம்.
Answer: b. குஜராத்.
[83]
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தில் (IATA) இணைந்த நான்காவது இந்திய விமான நிறுவனம் எது.
a. இண்டிகோ.
b. ஸ்பைஸ்ஜெட்.
c. ஏர் இந்தியா.
d. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
Answer: d. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
[84]
கைபேசிச் சாதனங்களுக்கான இந்தியாவின் முதல் டெம்பர்டு (செம்பதக் கண்ணாடி) கண்ணாடி உற்பத்தி மையம் எங்கு திறந்து வைக்கப்பட்டது.
a. ஹைதராபாத், தெலுங்கானா.
b. நொய்டா, உத்தரப் பிரதேசம்.
c. சென்னை, தமிழ்நாடு.
d. குருகிராம், ஹரியானா.
Answer: b. நொய்டா, உத்தரப் பிரதேசம்.
[85]
இந்திய ராணுவம் 'யுத் கௌஷல் 3.0' பயிற்சியை எங்கு நடத்தியது.
a. லடாக்.
b. சிக்கிம்.
c. அருணாச்சலப் பிரதேசத்தின் உயரமான காமெங் பகுதி.
d. இமாச்சலப் பிரதேசம்.
Answer: c. அருணாச்சலப் பிரதேசத்தின் உயரமான காமெங் பகுதி.
[86]
இந்தியாவின் 29வது பொதுக் கணக்குத் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டவர் யார்.
a. கிரீஷ் சந்திர முர்மு.
b. டி.சி.ஏ. கல்யாணி.
c. ராஜிவ் மெஹ்ரிஷி.
d. சுனில் அரோரா.
Answer: b. டி.சி.ஏ. கல்யாணி.
[87]
இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் கீழ் இந்தியப் பசுமைக் கட்டிடச் சபையிடமிருந்து பசுமை நகர பிளாட்டினம் சான்றிதழைப் பெற்ற முதல் நகரம் எது.
a. பெங்களூரு.
b. சென்னை.
c. இந்தூர்.
d. புனே.
Answer: c. இந்தூர்.
[88]
இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து 21வது 'யுத் அபியாஸ்' கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்கிறது.
a. பிரான்ஸ்.
b. ரஷ்யா.
c. அமெரிக்கா.
d. இங்கிலாந்து.
Answer: c. அமெரிக்கா.
[89]
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடத்தப்படும் என பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு (BWF) அறிவித்தது.
a. புது டெல்லி.
b. மும்பை.
c. பாரிஸ்.
d. தோக்கியோ.
Answer: a. புது டெல்லி.
[90]
பாபா சாகேப் இலண்டன் பொருளியல் மற்றும் அரசியல் அறிவியல் கல்லூரியில் பயிலும் போது டாக்டர் B.R. அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்திற்கு வருகை தந்த முதல்வர் யார்.
a. உத்தவ் தாக்கரே.
b. அரவிந்த் கெஜ்ரிவால்.
c. மு.க. ஸ்டாலின்.
d. மம்தா பானர்ஜி.
Answer: c. மு.க. ஸ்டாலின்.
[91]
ICAO தரநிலைகளுடன் இணைக்கப்பட்ட புதிய கட்டமைப்பின் கீழ் DGCA பாதுகாப்பு ஒப்புதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிலக் கட்டுப்பாட்டு மேலாண்மை நிறுவனம் எது.
a. ஏர் இந்தியா.
b. ஏர் இந்தியா SATS விமான நிலைய சேவைகள் (AISATS).
c. இண்டிகோ.
d. டெல்லி விமான நிலைய ஆணையம்.
Answer: b. ஏர் இந்தியா SATS விமான நிலைய சேவைகள் (AISATS).
[92]
கழுகு வளங்காப்பில் பணிபுரியும் தனிநபர்களை இணைப்பதற்கான இந்தியாவின் முதல் தளம் எங்கு தொடங்கப்பட்டது.
a. சென்னை பல்கலைக்கழகம்.
b. கௌஹாத்தி பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை.
c. மைசூர் பல்கலைக்கழகம்.
d. கொல்கத்தா பல்கலைக்கழகம்.
Answer: b. கௌஹாத்தி பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை.
[93]
பெரியாரின் உருவப்படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்தவர் யார்.
a. மு.க. ஸ்டாலின்.
b. அமித் ஷா.
c. திரௌபதி முர்மு.
d. நரேந்திர மோடி.
Answer: a. மு.க. ஸ்டாலின்.
[94]
இந்தியாவின் முதல் துறைமுக அடிப்படையிலான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி சோதனை நிலையம் எங்கு தொடங்கி வைக்கப்பட்டது.
a. மும்பை துறைமுகம்.
b. சென்னை துறைமுகம்.
c. V.O. சிதம்பரனார் துறைமுகம், தூத்துக்குடி.
d. கொச்சின் துறைமுகம்.
Answer: c. V.O. சிதம்பரனார் துறைமுகம், தூத்துக்குடி.
[95]
The Chola Tigers: The Avengers of Somnath, part of the Indic Chronicle series என்ற நூலை வெளியிட்டவர் யார்.
a. சசி தரூர்.
b. சேத்தன் பகத்.
c. அமிஷ் திரிபாதி.
d. அருந்ததி ராய்.
Answer: c. அமிஷ் திரிபாதி.
[96]
ஷில்ப் சமகம் மேளா 2025 எங்கு தொடங்கப்பட்டது.
a. புது டெல்லி.
b. பெங்களூரு.
c. சென்னை.
d. மும்பை.
Answer: b. பெங்களூரு.
[97]
பூடான் அரசப் புத்தக் கோவில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது.
a. பாட்னா, பீகார்.
b. ராஜ்கிர், பீகார்.
c. வாரணாசி, உத்தரப் பிரதேசம்.
d. கயா, பீகார்.
Answer: b. ராஜ்கிர், பீகார்.
[98]
20வது உலகளாவிய நிலைத்தன்மை உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது.
a. மும்பை.
b. பெங்களூரு.
c. டெல்லி.
d. கொல்கத்தா.
Answer: c. டெல்லி.
[99]
வானளாவிய கட்டிடங்கள் (ஸ்கைஸ்க்ரேப்பர்) தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது.
a. செப்டம்பர் 01.
b. செப்டம்பர் 03.
c. செப்டம்பர் 07.
d. செப்டம்பர் 09.
Answer: b. செப்டம்பர் 03.
[100]
2025 ஆம் ஆண்டு அமெரிக்க டென்னிஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் பட்டத்தை வென்றவர் யார்.
a. ஜானிக் சின்னரை.
b. கார்லோஸ் அல்கராஸ்.
c. நோவக் ஜோகோவிச்.
d. ரஃபேல் நடால்.
Answer: b. கார்லோஸ் அல்கராஸ்.
🧠 General Science & Biology
- Avogadro Number: 6.023×1023
- Molar Volume at STP: 22.4 liters
- High Carbon Coal Type: Anthracite
- Plant Physiology:
- Osmosis and transpiration processes
- Role of xylem and phloem in transport
- Photosynthesis and its products (e.g., glucose)
- ATP as the energy currency of cells
- Cell Biology:
- Cell structure and types
- Protozoa and early life forms
- Types of plant tissues and their functions
🌱 Botany & Zoology
- Pollination Types:
- Self vs. cross-pollination
- Agents: insects (entomophily), animals (zoophily), water (hydrophily)
- Fruit Types:
- Examples of true fruits and dry fruits
- Caryopsis as a grain type (e.g., rice, wheat)
- Seed Dispersal Mechanisms:
- By animals (zoochory), humans (anthropochory), etc.
- Animal Classification:
- Examples of segmented worms, mollusks, arthropods
- Respiratory systems across species
📚 Tamil Language & Grammar
- Word Forms & Meanings:
- Verb roots and derivatives
- Synonyms and antonyms
- Compound words and idioms
- Tamil Equivalents for English Terms:
- Internet → இணையம்
- Weather → வானிலை
- Agronomy → உழவியல்
🌍 Current Affairs (2025 Highlights)
- Appointments & Recognitions:
- Urjit Patel approved as IMF Executive Director
- Ajay Babu Valluri wins gold in Commonwealth weightlifting
- DCA Kalyani appointed as India’s 29th CAG
- Events & Observances:
- Telugu Language Day: August 29
- International Whale Shark Day: August 30
- Skyscraper Day: September 3
- Technological & Environmental Initiatives:
- India’s first robotic laser eye surgery by AHRR
- Green hydrogen pilot at VOC Port, Thoothukudi
- Indore receives Platinum Green City certification
- International Collaborations:
- Chandrayaan-5: India-Japan partnership
- Joint military exercises with USA (Yudh Abhyas)
- Cultural Milestones:
- Periyar’s portrait unveiled at Oxford by M.K. Stalin
- Sat Mahaparva festival proposed for UNESCO heritage listing


0 Comments