வரலாறு (History)
- முதல் உலகப்போரின் முடிவில் வீழ்ச்சியடைந்த மூன்று பெரிய பேரரசுகள் யாவை?
- விடை: ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்.
- 'ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சகட்டம்' என்று எடுத்துரைத்தவர் யார்?
- விடை: லெனின்.
- பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச் செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- விடை: பிரிட்டன்.
- லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் 'நல்ல அண்டை வீட்டுக்காரன்' கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் யார்?
- விடை: பிராங்ளின் D. ரூஸ்வெல்ட்.
- ஜப்பான் முறைப்படி சரணடைந்ததாக எப்போது கையெழுத்திட்டது?
- விடை: செப்டம்பர் 2, 1945.
- பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதற்கு முக்கியப் பங்காற்றியவர் யார்?
- விடை: உட்ரோ வில்சன்.
- அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
- விடை: ஹிரோஷிமா.
- ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயச் சாசனம் எப்போது கையெழுத்தானது?
- விடை: ஜூன் 26, 1945.
- வார்சா ஒப்பந்தம் எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
- விடை: 1991.
- உடன்கட்டை ஏறுதல் (சதி) எந்த ஆண்டில் ஒழிக்கப்பட்டது?
- விடை: 1829.
- விதவை மறுமணச் சங்கத்தை நிறுவியவர் யார்?
- விடை: M.G. ரானடே.
- 'சத்யார்த்தபிரகாஷ்' எனும் நூலின் ஆசிரியர் யார்?
- விடை: தயானந்த சரஸ்வதி.
- கிழக்கிந்திய கம்பெனியின் ஆக்கிரமிப்பு ஆசையை எதிர்த்த முதல் பாளையக்காரர் யார்?
- விடை: பூலித்தேவர்.
- சிவ சுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
- விடை: நாகலாபுரம்.
- திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர்கள் யார்?
- விடை: மருது சகோதரர்கள்.
- வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
- விடை: 1806, ஜூலை 10.
- வங்கப் பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
- விடை: 1905, அக்டோபர் 16.
- 1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
- விடை: திலகர்.
- விடுதலை நாளாக எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
- விடை: 1930, ஜனவரி 26.
- மாகாண தன்னாட்சியை அறிமுகப்படுத்திய சட்டம் எது?
- விடை: இந்திய அரசுச் சட்டம், 1935.
- சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
- விடை: P. ரங்கையா.
- இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு எங்கு நடைபெற்றது?
- விடை: ஆயிரம் விளக்கு (சென்னை).
- இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது?
- விடை: சேலம்.
- 1709 இல் தரங்கம்பாடியில் முழுமையான அச்சகத்தை நிறுவியவர் யார்?
- விடை: சீகன்பால்கு.
- 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவியவர் யார்?
- விடை: இரட்டைமலை சீனிவாசன்.
- அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய நீதிக்கட்சியால் நிறுவப்பட்டது எது?
- விடை: பணியாளர் தேர்வு வாரியம்.
- முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
- விடை: ஹிட்லர், முசோலினி, பிராங்கோ.
- முத்துத் துறைமுகத்தை ஜப்பான் எப்போது தாக்கியது?
- விடை: 1941.
- 'மூன்றாம் உலக நாடுகள்' என்று எவை அழைக்கப்படுகின்றன?
- விடை: அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளின் கூட்டணியில் சேராத மற்ற நாடுகள்.
- ராமலிங்க சுவாமிகள் எங்கு இலவச உணவுச்சாலையை அமைத்தார்?
- விடை: வடலூர்.
- ஜாலியன்வாலா பாக் படுகொலை எப்போது நடைபெற்றது?
- விடை: 1919, ஏப்ரல் 13.
- ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் திரும்பப் பெற காரணமான நிகழ்வு எது?
- விடை: 1922 இல் நடந்த சௌரி சௌரா நிகழ்வு.
- சைமன் குழு புறக்கணிக்கப்பட்டதற்கான முக்கியக் காரணம் என்ன?
- விடை: அக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாதது.
- காந்தியடிகளுக்கும், அம்பேத்காருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் எது?
- விடை: பூனா ஒப்பந்தம்.
- சுயமரியாதை இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
- விடை: 1925.
- 'பீகாரின் துயரம்' என்று அழைக்கப்படும் ஆறு எது?
- விடை: கோசி ஆறு.
- தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் எது?
- விடை: ஆனைமுடி.
- பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: பாங்கர்.
- ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: சம மழைக்கோடுகள்.
- இந்தியாவில் 'தங்க இழைப் பயிர்' என அழைக்கப்படுவது எது?
- விடை: சணல்.
- ஆந்த்ரசைட் நிலக்கரி எவ்வளவு கார்பன் அளவைக் கொண்டுள்ளது?
- விடை: 80% - 95%.
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது?
- விடை: கோயம்புத்தூர்.
- இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் எது?
- விடை: மகாராஷ்டிரம்.
- தேசிய தொலையுணர்வு மையம் (NRSC) அமைந்துள்ள இடம் எது?
- விடை: ஹைதராபாத்.
- தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் எது?
- விடை: தொட்ட பெட்டா.
- தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
- விடை: கடலூர்.
- 'தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம்' என்று அழைக்கப்படும் டெல்டா எது?
- விடை: காவிரி டெல்டா.
- இந்திய திட்ட நேரம் எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?
- விடை: 82° 30' கிழக்கு தீர்க்க ரேகை (மிர்சாபூர் வழியாகச் செல்கிறது).
- இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் எவை?
- விடை: நர்மதை, தபதி, மாஹி, சபர்மதி.
- வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் எவ்வளவு வெப்பநிலை குறையும்?
- விடை: 6.5° C.
- இந்தியாவிற்கு 75% மழையை வழங்கும் பருவக்காற்று எது?
- விடை: தென்மேற்கு பருவக்காற்று.
- சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய புவிஈர்ப்பு அணை எது?
- விடை: பக்ரா நங்கல் அணை.
- மகாநதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிக நீளமான அணை எது?
- விடை: ஹிராகுட் அணை.
- 'இந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படுவது எது?
- விடை: மும்பை.
- காவிரி ஆற்றின் நீளம் என்ன?
- விடை: 416 கி.மீ.
- மேட்டூர் அணை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
- விடை: சேலம் மாவட்டம்.
- கரிசல் மண் எதன் சிதைவால் உருவாகிறது?
- விடை: தீப்பாறைகள் சிதைவால்.
- தேயிலை உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் எத்தனையாவது இடம் வகிக்கிறது?
- விடை: இரண்டாமிடம்.
- பழுப்பு நிலக்கரி தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கிறது?
- விடை: கடலூர் - நெய்வேலி.
- காபி உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் எந்த இடத்தில் உள்ளது?
- விடை: இரண்டாமிடம்.
- தாமிரபரணி ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
- விடை: பொதிகை மலை.
- நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி எது?
- விடை: கோயம்புத்தூர் பீடபூமி.
- தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
- விடை: நீலகிரி வரையாடு.
- இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என Dr. B.R. அம்பேத்கர் எதை விவரிக்கிறார்?
- விடை: அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வுகாணும் உரிமை (சட்டப்பிரிவு 32).
- அடிப்படை கடமைகளை நாம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெற்றோம்?
- விடை: ரஷ்யா அரசியலமைப்பு.
- எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
- விடை: சட்டப்பிரிவு 360.
- நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் யார்?
- விடை: குடியரசுத் தலைவர்.
- மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச வயது என்ன?
- விடை: 25 வயது.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
- விடை: குடியரசுத் தலைவர்.
- மேலவை (மாநிலங்களவை) உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது என்ன?
- விடை: 30 வயது.
- இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள் எவை?
- விடை: கல்கத்தா, பம்பாய், சென்னை.
- பஞ்சசீல ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டது?
- விடை: இந்தியா மற்றும் சீனா.
- இந்திய வெளியுறவுக் கொள்கையை வழிநடத்தும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
- விடை: சட்டப் பிரிவு 51.
- 'மக்மகான் எல்லைக் கோடு' எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ளது?
- விடை: இந்தியா - சீனா.
- இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?
- விடை: வங்காள தேசம்.
- சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர் யார்?
- விடை: சர் சிரில் ராட்க்ளிஃப்.
- தேசிய அவசர நிலையை அறிவிக்கப் பயன்படும் சட்டப்பிரிவு எது?
- விடை: சட்டப்பிரிவு 352.
- மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான குறைந்தபட்ச வயது என்ன?
- விடை: 35 வயது.
- சார்க் (SAARC) அமைப்பில் எத்தனை உறுப்பு நாடுகள் உள்ளன?
- விடை: 8 நாடுகள்.
- பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகள் எவை?
- விடை: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா.
- உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் எத்தனை வகையான நீதிப்பேராணைகளை வெளியிடுகின்றன?
- விடை: 5 வகையான நீதிப்பேராணைகள்.
- மாநிலத்தின் உண்மையான தலைவர் யார்?
- விடை: முதலமைச்சர்.
- அரசியலமைப்பு என்ற கருத்து முதன்முதலில் எந்த நாட்டில் தோன்றியது?
- விடை: அமெரிக்கா.
- அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
- விடை: சச்சிதானந்த சின்ஹா.
- நாட்டு வருமானம் எதனை அளவிடுகிறது?
- விடை: ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு.
- முதன்மைத் துறை எதனை உள்ளடக்கியது?
- விடை: வேளாண்மை.
- உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
- விடை: தலைமை இயக்குநர்.
- காட் (GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் எது?
- விடை: ஜெனீவா.
- உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்த புரட்சி எது?
- விடை: பசுமைப் புரட்சி.
- உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் எது?
- விடை: தமிழ்நாடு.
- 'ஆசியாவின் டெட்ராய்ட்' என அழைக்கப்படும் நகரம் எது?
- விடை: சென்னை.
- திருப்பூர் எந்தத் தொழிலுக்குப் பெயர் பெற்றது?
- விடை: பின்னலாடை தயாரித்தல்.
- தனி நபர் வருமானத்தை எவ்வாறு கணக்கிடலாம்?
- விடை: நாட்டு வருமானம் / மக்கள் தொகை.
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) எப்போது நடைமுறைக்கு வந்தது?
- விடை: ஜூலை 1, 2017.
- குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) யாருடைய பாதுகாப்பிற்காக நிர்ணயிக்கப்படுகிறது?
- விடை: விவசாயிகளின் பாதுகாப்பிற்காக.
- இந்தியாவில் விவசாயம் எத்தனையாவது துறையாகக் கருதப்படுகிறது?
- விடை: முதன்மைத் துறை.
- கருப்புப் பணம் என்றால் என்ன?
- விடை: சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் கணக்கில் காட்டப்படாத, வரி செலுத்தப்படாத பணமாகும்.
- உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைமையிடம் எங்குள்ளது?
- விடை: ஜெனீவா (சுவிட்சர்லாந்து).
- GST இன் முக்கியக் குறிக்கோள் என்ன?
- விடை: ஒரு நாடு - ஒரு அங்காடி - ஒரு வரி.
- தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (NFA) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
* விடை: 2013.


0 Comments