வரலாறு (History)
- பதுங்குக்குழிப்போர்முறைக்காக நினைவு கூறப்படும் போர் எது? - மார்ன் போர்.
- பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச்சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது? - ரஷ்யா.
- மெக்சிகோ நாகரிகம் யாருடைய ஆக்கிரமிப்பால் நிலைகுலைந்தது? - ஹெர்மன் கோர்ட்ஸ்.
- பெரு நாட்டைத் தங்கள் பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டவர்கள் யார்? - ஸ்பானியர்.
- டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பாத பகுதி எது? - லத்தீன் அமெரிக்கா.
- அமெரிக்க கப்பற்படையால் ஜப்பானியக் கப்பற்படை தோற்கடிக்கப்பட்ட இடம் எது? - மிட்வே போர்.
- ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்? - சேம்பர்லின்.
- பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்? - ட்ருமென்.
- சோவியத் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து ஏற்படுத்திய அமைப்பு எது? - நேட்டோ.
- பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்? - யாசர் அராபத்.
- 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியவர் யார்? - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.
- வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்? - கல்கத்தா.
- 'நிலம் கடவுளுக்குச் சொந்தம்' என்று அறிவித்தவர் யார்? - டுடுமியான்.
- அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்? - சைஃபுதீன் கிச்லு.
- இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது? - நாக்பூர்.
- 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது? - கோவில் நுழைவு நாள்.
- "அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" எனக்கூறியவர் யார்? - அன்னிபெசன்ட்.
- சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? - எம்.சி. ராஜா.
- மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக. - இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா.
- லண்டன் உடன்படிக்கையின்படி (1913) உருவாக்கப்பட்ட புதிய நாடு எது? - அல்பேனியா.
- நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமை ஏற்றவர் யார்? - ஜோசப் கோயபெல்ஸ்.
- சன் யாட் சென் எவ்வாறு அழைக்கப்பட்டார்? - நவீன சீனாவின் தந்தை.
- குலாம்கிரி என்ற நூலை எழுதியவர் யார்? - ஜோதிபா பூலே.
- ஒரு பைசா தமிழன் பத்திரிகையைத் துவக்கியவர் யார்? - அயோத்தி தாசர்.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தியவர் யார்? - உஷா மேத்தா.
- மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - தீபகற்பம்.
- பழவேற்காடு ஏரி எந்த மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது? - தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்.
- மேற்கத்திய இடையூறுகளால் மழைப் பொழிவைப் பெறும் பகுதி எது? - பஞ்சாப்.
- கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவும் காற்றுகள் எவை? - மாஞ்சாரல்.
- பருவக்காற்று காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - இலையுதிர்க்காடுகள்.
- இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படும் மண் எது? - செம்மண்.
- இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ள நிறுவனம் எது? - இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்.
- ஆறுகளின் மூலம் உருவாகும் மண் எது? - வண்டல் மண்.
- மாங்கனீசு முக்கியமாக எதில் பயன்படுத்தப்படுகிறது? - எஃகு தயாரிப்பு.
- பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் எவை? - ஹைட்ரஜன் மற்றும் கார்பன்.
- மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம் எது? - சூரியன்.
- சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்குக் கருவாக இருப்பது எது? - கனிமப்படிவுகள்.
- எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்குப் பயன்படும் போக்குவரத்து எது? - வான்வழிப்போக்குவரத்து.
- ஹெலிகாப்டர் சேவையுடன் தொடர்புடைய நிறுவனம் எது? - பவன்ஹான்ஸ்.
- இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் எது? - பெட்ரோலியம்.
- அரபிக் கடலில் கலக்கும் தமிழ்நாட்டு ஆறு எது? - பெரியார்.
- தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் எது? - தர்மபுரி.
- தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை என்ன? - 3 மற்றும் 15.
- இலட்சத்தீவின் நிர்வாகத் தலைநகரம் எது? - காவராத்தி.
- வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - ஜெட் காற்றுகள்.
- நிலக்கரியின் வகைகளில் பிட்டுமினஸ் எவ்வளவு கரிம அளவுகளைக் கொண்டுள்ளது? - 60 முதல் 80%.
- தேசிய நீர்வழி போக்குவரத்து எண் 1 எந்த இரு இடங்களை இணைக்கிறது? - ஹால்தியா - அலகாபாத்.
- 'தேரி' எனப்படும் மணல் குன்றுகள் எந்த மாவட்டங்களில் காணப்படும்? - இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி.
- பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) தமிழ்நாட்டில் எங்கு செயல்படுகிறது? - சென்னை.
- சாத்தனூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? - தென் பெண்ணை ஆறு.
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது? - ஒருமுறை.
- அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்? - தேசிய அவசரநிலையின் போது குடியரசுதலைவரின் ஆணையினால்.
- ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்? - லோக் சபாவின் சபாநாயகர்.
- அமைச்சர்கள் குழு ஒட்டு மொத்தமாக எதற்குப் பொறுப்புடையவர்களாவர்? - மக்களவை.
- ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்? - ஆளுநர்.
- ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை? - உயர் நீதிமன்ற நீதிபதிகள்.
- இந்தியா மற்றும் சீனாவால் 1954இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது? - ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல் (பஞ்சசீலம்).
- அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது? - பாகிஸ்தான்.
- அணிசேராமை என்பதன் உண்மையான பொருள் என்ன? - தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்.
- இராணுவம் சாராத பிரச்சனைகளுக்கு எடுத்துக்காட்டு தருக. - ஆற்றல் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, தொற்று நோய்கள்.
- எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன? - 7 நாடுகள்.
- எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது? - சிக்கிம்.
- எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன? - ஐந்து மாநிலங்கள்.
- சிட்டிசன் எனும் சொல் எந்த மொழிச் சொல்லில் இருந்து வந்தது? - இலத்தீன் மொழி ('சிவிஸ்').
- இந்தியாவின் செம்மொழிகள் எத்தனை? - 6 மொழிகள்.
- மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் எத்தனை தலைப்புகளில் பட்டியலிடப்பட்டுள்ளன? - 3 தலைப்புகளில்.
- இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? - ஒற்றை மாற்று வாக்கு மூலம்.
- நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின்படி எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்? - 3 வகையாக.
- அணிசேரா இயக்கத்தில் தற்போது எத்தனை உறுப்பு நாடுகள் உள்ளன? - 120 நாடுகள்.
- அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது? - அயர்லாந்து.
- இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது? - நவம்பர் 26, 1949.
- மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர் யார்? - ஆளுநர்.
- இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் எது? - போக்ரான்.
- 'இடிமின்னல் நிலம்' என்று அறியப்படும் அண்டை நாடு எது? - பூடான்.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி யார்? - T.முத்துசாமி.
- இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்? - 65 ஆண்டுகள்.
- வர்த்தக கொள்கை என்பது கீழ்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது? - இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை.
- ஆங்கிலேயர்களுக்கு "கோல்டன் ஃபயர்மான்" (1632) வழங்கியவர் யார்? - கோல்கொண்ட சுல்தான்.
- வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவிக்கப்பட்ட ஆண்டு எது? - ஜூலை - ஆகஸ்ட் 1991.
- உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசியை அரசாங்கம் எந்த நிறுவனம் மூலம் கொள்முதல் செய்கிறது? - FCI (இந்திய உணவுக் கழகம்).
- உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ஊட்டச்சத்து.
- இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி எது? - வருமான வரி.
- குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது எங்கு? - கோயம்புத்தூர்.
- முற்றிலும் தமிழ்நாட்டால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட தொழில்துறை தொகுப்பு எது? - ஒசூர்.
- உலகமயமாக்கலின் மூன்று வகைகள் யாவை? - தொன்மையான, இடைப்பட்ட, நவீன உலகமயமாக்கல்.
- உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை? - உணவு கிடைத்தல், உணவுக்கான அணுகல், உணவினை உறிஞ்சுதல்.
- நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் எந்தப் பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன? - தரமான பொருட்களை வழங்குவதில்.
- நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன? - வேலூர்.
- சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? - ஏப்ரல் 2000.
- GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? - செலவின முறை, வருமான முறை, மதிப்பு கூட்டு முறை.
- MNC என்பதன் விரிவாக்கம் என்ன? - பன்னாட்டு நிறுவனங்கள்.
- உலக வர்த்தக அமைப்பில் (WTO) எத்தனை உறுப்பு நாடுகள் உள்ளன? - 164 உறுப்பு நாடுகள்.
- GST ல் உள்ள நான்கு முக்கிய வரி விகிதங்கள் எவை? - 5%, 12%, 18%, 28%.
- எந்தப் பொருட்களுக்கு GST வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது? - காய்கறிகள், உணவு தானியங்களுக்கு.
- உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் எப்போது முதல் நடைமுறைக்கு வந்தது? - ஜனவரி 1, 1995.
- ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகக் கருதப்படுவது எது? - தொழில்.
- நியாயமான வர்த்தகம் யாருக்கு அதிகாரம் அளிக்கிறது? - நுகர்வோருக்கு.
- வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு என்ன? - பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை, பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்.
- உள்நாட்டு வணிகத்தில் பயன்படுத்தப்படுவது எது? - உள்நாட்டு நாணயம்.
- பன்னாட்டு வணிகத்தில் பயன்படுத்தப்படுவது எது? - அயல்நாட்டு பணம் (டாலர், யூரோ).


0 Comments