இயல் 7: விதைநெல் (வரலாறு & சாதனையாளர்கள்) - வினா விடை
ம.பொ.சி பற்றிய தகவல்கள்:
- ம.பொ.சிவஞானத்தின் இயற்பெயர்: ஞானப்பிரகாசம்
- ம.பொ.சி-க்கு "சிவஞானம்" என்று பெயரிட்டவர்: சரபையர்
- ம.பொ.சி அமராதி சிறையில் இருந்தபோது அவரது அறையின் மேற்கூரை வேயப்பட்டிருந்த பொருள்: துத்தநாகத் தகடு
- "தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்" என்று ம.பொ.சி முழங்கக் காரணம்: சென்னையை ஆந்திராவுடன் இணைக்க முயற்சித்ததால்
- தமிழக வடவெல்லைப் போராட்டத்தின் போது ராஜமுந்திரி சிறையில் உயிர் துறந்தவர்: திருவாலங்காடு கோவிந்தராசன்
- தமிழக வடவெல்லைப் போராட்டத்தின் போது பழனி சிறையில் உயிர் துறந்தவர்: மாணிக்கம்
- மொழிவாரி ஆணையத்தின் தலைவர்: சர்தார் கே.எம்.பணிக்கர்
- மொழிவாரி ஆணையத்தின் படி ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட மாவட்டம்: சித்தூர்
- குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாள்: 1956 நவம்பர் 1
- மார்ஷல் நேசமணிக்கு சிலையும் மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ள இடம்: நாகர்கோவில்
- சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை: உரைப்பாட்டு மடை
- "மடை" என்பதன் பொருள்: வயலுக்கு நீரைத் திருப்பிவிடுதல்
- சிலப்பதிகாரத்தில் இந்திர விழா ஊரெடுத்த காதை அமைந்துள்ள காண்டம்: புகார் காண்டம்
- சிலப்பதிகாரத்தில் "வண்ணமும் சுண்ணமும்" என்பதில் சுண்ணம் என்பதன் பொருள்: நறுமணப்பொடி
- சிலப்பதிகாரத்தில் "காருகர்" என்று குறிப்பிடப்படுபவர்: நெய்பவர் (சாலியர்)
- எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு "இந்திய மாமணி" (பாரத ரத்னா) விருது வழங்கப்பட்டதா: ஆம்
- எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மிகவும் புகழ்பெற்ற திரைப்படம்: மீரா (1945)
- பாலசரஸ்வதி சிறந்து விளங்கிய கலை: பரதநாட்டியம்
- பாலசரஸ்வதிக்கு இந்திய அரசு வழங்கிய விருது: தாமரைச் செவ்வணி (பத்ம விபூஷன்)
- நீலகிரி படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் குறித்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினம்: குறிஞ்சித்தேன்
- உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினம்: கரிப்பு மணிகள்
- பெண் சிசுக்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல்: மண்ணகத்துப் பூந்துளிகள்
- தீப்பெட்டித் தொழிலில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி ராஜம் கிருஷ்ணன் எழுதிய நூல்: கூட்டுக்குஞ்சுகள்
- சோழர் காலக்கட்ட சிற்பக்கலை நுட்பத்திற்குச் சான்றாகத் திகழும் கோவில்: மூவர் கோவில் (கொடும்பாளூர்)
திணைகள் மற்றும் பூக்கள்:
- வெட்சிப் பூவின் நிறம்: சிவப்பு (இட்லிப்பூ)
- வஞ்சித் திணை குறிப்பது: மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக்கைப்பற்றச் செல்லுதல்
- காஞ்சிப் பூவின் நிறம்: நீல நிறம் (மணமுள்ள பூ)
- உழிஞைத் திணை குறிப்பது: மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்றச் சுற்றுவளைத்தல்
- உழிஞைப் பூவின் வேறு பெயர்: முடக்கத்தான்
- தும்பைத் திணை குறிப்பது: வலிமையை நிலைநாட்டப் போரிடுதல்
- வெற்றி பெற்ற மன்னன் சூடும் பூ: வாகைப் பூ
- பாடண்திணையைப் பிரிக்கும் முறை: பாடு + ஆண் + திணை
- கைக்கிளை என்பது: ஒருதலைக் காமம்
- பெருந்திணை என்பது: பொருந்தாக் காமம்
சங்க இலக்கியத்தில் அறம்:
- சங்க இலக்கியங்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் யாரை முன்னிறுத்தி கூறப்பட்டன: அரசர்களை
- "இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்" - பாடியவர்: ஏணிச்சேரி முடமோசியார்
- "நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும்" - இடம்பெற்ற நூல்: புறநானூறு (மதுரை காஞ்சி)
- "எறியார் எறிதல் யாவணது" - என்று போரறம் பற்றிக் கூறியவர்: ஆவூர் மூலங்கிழார்
- செல்வத்தின் பயன் ஈதல் என்று கூறிய மதுரை கணக்காயனார் மகனார்: நக்கீரர்
- கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் என்று போற்றப்படுவது பற்றி கூறும் நூல்: சிறுபாணாற்றுப்படை
- "ஈயாமையிழிபு" என்று கூறும் நூல்: கலித்தொகை
- தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் புலப்படுத்தப்பட்டுள்ள நூல்: புறநானூறு
- "உதவி செய்தலை உதவியாண்மை" என்று கூறியவர்: ஈழத்துப் பூதன் தேவனார்
- "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி" என்று கூறியவர்: நல்லந்துவனார்
- "உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்" என்று கூறியவர்: நல்வேட்டனார்
- "சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின்" - இடம்பெற்ற நூல்: நற்றிணை
- பிழையா நன்மொழி என்று வாய்மையை குறிப்பிடும் நூல்: நற்றிணை
- போதி தர்மர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்: கி.பி. 6-ம் நூற்றாண்டு
- போதி தர்மர் சீனாவிற்குச் சென்று போதித்த சமயத் தத்துவம்: பௌத்த சமயம் (ஜென் தத்துவம்)
- ஜென் (Zen) தத்துவம் பரவிய நாடு: ஜப்பான்
- ஞானம் என்ற கவிதையின் ஆசிரியர் தி.சொ.வேணுகோபாலன் பணியாற்றிய இடம்: மணிப்பால் பொறியியல் கல்லூரி
- தி.சொ.வேணுகோபாலன் எழுதிய மற்றொரு கவிதைத் தொகுப்பு: மீட்சி விண்ணப்பம்
- கண்ணதாசன் பிறந்த ஊர்: சிறுகூடல்பட்டி
- கண்ணதாசனின் பெற்றோர் பெயர்: சாத்தப்பன் - விசாலாட்சி
- கண்ணதாசன் திரையுலகிற்கு அறிமுகமான ஆண்டு மற்றும் பாடல்: 1949, "கலங்காதிரு மனமே"
- "நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை" என்ற வரிகளை எழுதியவர்: கண்ணதாசன்
யாப்பின் உறுப்புகள் & பா வகைகள்:
- யாப்பின் உறுப்புகள் எத்தனை: ஆறு (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை)
- பா எத்தனை வகைப்படும்: நான்கு (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா)
- செப்பலோசை உரிய பா: வெண்பா
- அகவலோசை உரிய பா: ஆசிரியப்பா
- துள்ளலோசை உரிய பா: கலிப்பா
- தூங்கலோசை உரிய பா: வஞ்சிப்பா
- இரண்டு பேர் உரையாடுவது போன்று அமைந்த ஓசை: செப்பலோசை
- சொற்பொழிவு ஆற்றுவது போன்று அமைந்த ஓசை: அகவலோசை
- வெண்பா எத்தனை வகைப்படும்: ஐந்து
- ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்: நான்கு
- வெண்பாவின் ஈற்றுச்சீர் எவற்றில் ஒன்றாக வரும்: நாள், மலர், காசு, பிறப்பு
ஜெயகாந்தன்:
- ஜெயகாந்தனின் காலம்: 1934 - 2015
- ஜெயகாந்தன் பெற்ற மிக உயரிய இலக்கிய விருது: ஞானபீட விருது
- ஜெயகாந்தன் "வாழ்விக்க வந்த காந்தி" என்று மொழிபெயர்த்த நூல்: பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வரலாறு
- ஜெயகாந்தன் "பாரிசுக்குப் போ!" புதினத்தின் முன்னுரையில் கதையை எவ்வாறு குறிப்பிடுகிறார்: ஒரு வாழ்க்கையின் சாசனம்
- "எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்" என்று ஜெயகாந்தன் யாரைப் பற்றிக் கூறினார்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- ஜெயகாந்தன் எழுதிய "தர்க்கத்திற்கு அப்பால்" என்ற சிறுகதை உள்ள தொகுப்பு: யுகசந்தி
- "சிறுகதை மன்னன்" என்று போற்றப்படுபவர்: ஜெயகாந்தன்
- ஜெயகாந்தன் எழுதிய குறும் புதினங்கள்: பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம், சினிமாவுக்குப் போன சித்தாளு
- ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள்: பாரிசுக்குப் போ, சுந்தரகாண்டம், உன்னைப் போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள்
- "சித்தாளு" என்ற கவிதையை எழுதியவர்: நாகூர் ரூமி
- நாகூர் ரூமியின் இயற்பெயர்: முகமது ரஃபி
- நாகூர் ரூமி எழுதிய நாவல்: கப்பலுக்குப் போன மச்சான்
- நாகூர் ரூமியின் கவிதைத் தொகுதிகள்: நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல்
தேம்பாவணி (வீரமாமுனிவர்):
- கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி: அருளப்பன் (திருமுழுக்கு யோவான்)
- வீரமாமுனிவர் "அருளப்பன்" பாத்திரத்திற்குத் தேம்பாவணியில் இட்ட பெயர்: கருணையன்
- கருணையனின் தாயார் பெயர்: எலிசபெத்
- சந்தாசாகிப் வீரமாமுனிவருக்கு வழங்கிய பட்டம்: இஸ்மத் சன்னியாசி
- "இஸ்மத் சன்னியாசி" என்பதன் பொருள்: தூய துறவி
- தேம்பாவணி எத்தனை காண்டங்களையும் பாடல்களையும் கொண்டது: 3 காண்டங்கள், 3615 பாடல்கள்
- வீரமாமுனிவரின் இயற்பெயர்: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
- வீரமாமுனிவர் இயற்றிய அகராதி நூல்: சதுரகராதி
- "நவமணி வடக்க யில்போல்" என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்: தேம்பாவணி
- கு.அழகிரிசாமியின் "ஒருவன் இருக்கிறான்" சிறுகதை வெளியான இதழ்: கலைமகள் (1966)
- கு.அழகிரிசாமி யாருக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை: கி.ராஜநாராயணன் (கி.ரா)
- கு.அழகிரிசாமி எந்த வரிசையில் மூத்தவர்: கரிசல் எழுத்தாளர்கள்
அணிகள்:
- இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது: தற்குறிப்பேற்ற அணி
- "தீவகம்" என்ற சொல்லின் பொருள்: விளக்கு
- தீவக அணி எத்தனை வகைப்படும்: மூன்று
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள் கொள்வது: நிரல்நிறை அணி
- "அன்பும் அறனும் உடைத்தாயின்" என்ற குறளில் பயின்று வரும் அணி: நிரல்நிறை அணி
- எவ்வகைப் பொருளாக இருந்தாலும் அதன் இயல்புத் தன்மையை உள்ளவாறே கூறுவது: தன்மை நவிற்சி அணி (இயல்பு நவிற்சி அணி)
- தன்மை நவிற்சி அணி எத்தனை வகைப்படும்: நான்கு
- "மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்" என்ற சிலப்பதிகாரப் பாடலில் பயின்று வரும் அணி: தன்மை நவிற்சி அணி


0 Comments