ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 19
வாழ்த்து, திருக்குறள் மற்றும் திராவிட மொழிகள்
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | கம்பர் இயற்றிய அந்தாதி நூல்கள் யாவை? | சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி. |
| 2. | திருக்குறள் பாடப்பட்டுள்ள வெண்பா வகை என்ன? | ஈரடி வெண்பா. |
| 3. | திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் 'த' வரிசையில் தொடங்கும் பெயர்கள் யாவை? | தருமர், தாமத்தர். |
| 4. | திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் 'ப' வரிசையில் தொடங்கும் பெயர்கள் யாவை? | பரிதி, பரிப்பெருமாள், பரிமேலழகர். |
| 5. | விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல் எது? | திருக்குறள். |
| 6. | இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்களுள் மூன்றாவது மற்றும் நான்காவதாகக் குறிப்பிடப்படுபவை எவை? | ஆஸ்திரோ ஆசிய மொழிகள் மற்றும் சீன திபெத்திய மொழிகள். |
| 7. | நடுத்திராவிட மொழிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக. | தெலுங்கு, கோண்டி. |
| 8. | 'திராவிட இனம்', 'திராவிட நாகரிகம்' ஆகிய சொற்றொடர்களில் 'திராவிடம்' என்னும் சொல் எவ்வகையாக வந்துள்ளது? | பெயரடையாக. |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | ""அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளிவும் வாய்ந்தோர்" எனப் பாரதியாரைப் புகழ்ந்தவர் யார்? | பாரதிதாசன். |
| 2. | சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் காரியாசான், உடன் பயின்றவர் கணிமேதாவியர். இவர்களின் ஆசிரியர் யார்? | மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார். |
| 3. | சிறுபஞ்சமூலத்தில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து மொத்தம் எத்தனை வெண்பாக்கள் உள்ளன? | 97 வெண்பாக்கள். |
| 4. | சிறுபஞ்சமூலம் காலுக்கு அழகு என எதனைக் கூறுகிறது? | பிறரிடம் இரந்து செல்லாமை. |
| 5. | சிறுபஞ்சமூலம் ஆராய்ச்சிக்கு அழகு என எதனைக் கூறுகிறது? | முடிவை துணிந்துரைத்தல். |
| 6. | பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள் எத்தனை? | 5. |
| 7. | பாஞ்சாலி சபதத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன? | 412. |
| 8. | திருதராட்டிரனின் புதல்வர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? | கௌரவர்கள். |
| 9. | பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது? | தூத்துக்குடி மாவட்டம். |
| 10. | பாரதியாரின் பெற்றோர் யார்? | சின்னசாமி மற்றும் இலக்குமி அம்மையார். |
| 11. | பாரதியார் இயற்கை எய்திய நாள் எது? | 11.09.1921. |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | ""எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற இந்தவையம்" - இப்பாடல் வரியின் ஆசிரியர் யார்? | பாரதிதாசன். |
| 2. | ""பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்" என்ற பாடலைப் பாடிய காந்தியக் கவிஞர் யார்? | நாமக்கல் கவிஞர். |
| 3. | 'மணிக்கொடி' இதழில் புதுக்கவிதை எழுதியவர்களுள் கு.ப.இராசகோபாலன் அல்லாத மற்றவர்கள் யார்? | ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன். |
| 4. | 'எழுத்து' என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்களுள் சி.சு.செல்லப்பா அல்லாத மற்றவர்கள் யாவர்? | எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி. |
| 5. | கோவை வானம்பாடி குழுவினர் இலக்கியத்தில் எதற்காகப் பாடுபட்டனர்? | புதுக்கவிதையைப் பரவலாக்க. |
| 6. | இருபதாம் நூற்றாண்டின் கவிதை வளர்ச்சியில் மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தவை எவை? | பாரதியின் கவிதைகள். |
| 7. | பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம்பித்துக் காட்டுவதில் சிறந்து விளங்குபவர் யார்? | வாணிதாசன். |
| 8. | ""கதிர் வெடித்துப் பிழம்புவிழக் கடல் கொதித்துச் சூடேற்ற" எனத் தமிழ்தாயின் பழைமையைப் பறை சாற்றுபவர் யார்? | கண்ணதாசன். |
| 9. | கண்ணதாசன் இயற்றிய புதினங்களுள் 'ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி' தவிர மற்றொன்று எது? | வேலங்குடித் திருவிழா. |
| 10. | கண்ணதாசன் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்களுள் 'தென்றல்', 'முல்லை' தவிர வேறு இரண்டினைக் கூறுக. | கண்ணதாசன், கடிதம், தமிழ்மலர். |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | "இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் கருதிக் காய்வனோ" - மனோன்மணியம் பெ.சுந்தரனார் பாடலில் இரவி என்பது எதைக் குறிக்கிறது? | சூரியன். |
| 2. | மனோன்மணியம் பெ.சுந்தரனார் பாடலில் 'சிறை' என்பதன் பொருள் என்ன? | இறக்கை. |
| 3. | ""வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும் போரில் சிறந்து பொலிவாகும்" எனப் பாடியவர் யார்? | காளமேகப்புலவர். |
| 4. | பத்துப்பாட்டில் நக்கீரனார் இயற்றிய நூல்கள் எவை? | திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை. |
| 5. | எட்டுத்தொகை நூல்களுள் அகப்பொருள் பற்றியது குறுந்தொகை எனில், புறப்பொருள் பற்றியது எது? | புறநானூறு. |
| 6. | குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார், வேறெதனைப் பாடியுள்ளார்? | பாரதம். |
| 7. | குறுந்தொகையின் அடிவரையறை என்ன? | 4-8. |
| 8. | வங்கிய சூடாமணி பாண்டியன் இறைவனுக்கு எதனைச் சாத்தி வழிபட நந்தவனத்தை ஏற்படுத்தினான்? | சண்பகமாலை. |
| 9. | பாண்டிய மன்னரின் குலத்தெய்வம் எது? | சொக்கநாதன் (அ) சுந்தர பாண்டியன். |
| 10. | திருவிளையாடற் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவரின் தந்தையார் பெயர் என்ன? | மீனாட்சி சுந்தர தேசிகர். |
| 11. | வேதாரண்ய புராணம் எனப்படும் திருமறைக்காட்டுப்புராணம் எவ்வகை நூல்? | மொழிப்பெயர்ப்பு நூல். |
| 12. | கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாகிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் எது? | திருவிளையாடற்புராணம். |
| 13. | திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதிய பண்டிதமணி யார்? | ந.மு.வேங்கடசாமி. |
| 14. | ""காமம் செப்பாது கண்டது மொழியுமோ" எனத் தொடங்கும் பாடல் யாருக்காக இறைவனால் பாடப்பட்டது? | தருமிக்காக. |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | பொருளீட்டச் செல்லும் பயணத்தை தொல்காப்பியர் இருவகையாகப் பிரிக்கிறார். அவை யாவை? | காலில் (தரைவழிப் பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு. |
| 2. | கடலைக் குறிக்கும் பெயர்களுள் 'ஆழி', 'ஆர்கலி', 'முந்நீர்' தவிர மற்றவை எவை? | வாரணம், பௌவம், பரவை, புணரி. |
| 3. | நாவாய், படகு, பரிசில், திமில், வங்கம், பஃறி என்பன எதனைக் குறிக்கும் பெயர்கள்? | மரக்கலத்தைக் குறிக்கும் பெயர்கள். |
| 4. | காவிரிப்பூம்பட்டினத்தில் சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் யாருடைய காலத்தில் இருந்தன? | அதியமானின் முன்னோர் காலத்தில். |
| 5. | "அரிசி" என்ற தமிழ்ச்சொல் கிரேக்கத்தில் எவ்வாறு வழங்கப்பட்டது? | ஒரைஸா. |
| 6. | "முசிறி" என்ற தமிழ்ச்சொல் கிரேக்கத்தில் எவ்வாறு வழங்கப்பட்டது? | முசிரில். |
| 7. | "கருவூர்" என்ற தமிழ்ச்சொல் கிரேக்கத்தில் எவ்வாறு வழங்கப்பட்டது? | கரோரா. |
| 8. | "காவிரி" என்ற தமிழ்ச்சொல் கிரேக்கத்தில் எவ்வாறு வழங்கப்பட்டது? | கபிரில். |
| 9. | ""திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று கூறியவர் யார்? | ஔவையார். |
| 10. | மருதநில அரசனது கோட்டையைப் புறநானூறு எதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறது? | நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு. |
| 11. | புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்களின் கொடி அசைவதைப் பற்றிக் குறிப்பிடும் சங்க நூல் எது? | பட்டினப்பாலை. |
| 12. | காற்றின் துணைகொண்டு இயங்கிய பெரிய நாவாய்க்கு வழங்கப்பட்ட பெயர் என்ன? | பாய்மரக்கப்பல். |
| 13. | பொன்னைச் சுமந்து வந்த யவனர்கள், அதற்கு ஈடாக எதனைப் பெற்றுச் சென்ற செய்தியை அகநானூறு கூறுகிறது? | மிளகைப் பெற்றுச் சென்ற. |
| 14. | கெலன் கெல்லர் படித்த பெர்கின்ஸ் பள்ளி எங்கு அமைந்துள்ளது? | அமெரிக்காவில் பாஸ்டன் நகரில். |
| 15. | பாஸ்டன் நகரில் உள்ள காதுகேளாதோருக்கான பள்ளி எது? | ஹோரஸ்மான். |
| 16. | கெலன் கெல்லருக்கு அலெக்சாண்டர் கிரகாம்பெல் எதற்கு உதவினார்? | பள்ளியில் சேர. |
| 17. | கெலன் கெல்லர் பயின்ற கல்லூரியின் பெயர் என்ன? | கேம்பிரிட்ஜ் ரெட்கிளிப். |
| 18. | திருக்குறளில் 'ஏழு' என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது? | எட்டுக் குறட்பாக்களில். |
| 19. | ""ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத்(து)..." எனத் தொடங்கும் சீட்டுக்கவிப் பாடலை எழுதியவர் யார்? | அந்தகக்கவி வீரராகவர். |
| 20. | குதிரையைக் குறிக்கும் பெயர்களுள் 'கந்துகம்', 'கோணம்', 'கொக்கு' தவிர மற்றவை எவை? | கோடை, குந்தம், பாடலம், மா, சடிலம், கிள்ளை. |
| 21. | அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் காஞ்சி மாவட்டம் பூதூர் எனில், அவர் வாழ்ந்த ஊர் எது? | பொன்விளைந்த களத்தூர். |
| 22. | அந்தகக்கவி வீரராகவருக்கு யானை, பொற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசாக அளித்தவர் யார்? | இலங்கை மன்னன் பரராசசேகரபாடி. |
| 23. | தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் உள்ள 1113 பாடல்களில், வீரராகவர் இயற்றிய பாடல்கள் எத்தனை? | 39. |
| 24. | 'கந்துகம்' என்பதன் பொருள் பந்து, 'பாடலம்' என்பதன் பொருள் என்ன? | பாதிரிப்பூ. |
| 25. | 'குந்தகம்' என்பதன் பொருள் சூலம், 'சடிலம்' என்பதன் பொருள் என்ன? | சடை. |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | ஆனந்தரங்கரின் தந்தை பெயர் திருவேங்கடம். அவர் எங்கு கல்வி பயின்றார்? | எம்பார் என்பவரிடம். |
| 2. | ஆனந்தரங்கர் புதுவையில் எப்பதவி வகித்தார்? | திவானாகப் பதவி வகித்தார். |
| 3. | 'சொஸ்த லிகிதம்' என்பதில் 'சொஸ்த' என்பதன் பொருள் தெளிந்த/உரிமையுடைய எனில், 'லிகிதம்' என்பதன் பொருள் என்ன? | கடிதம் அல்லது ஆவணம். |
| 4. | சுங்குசேஷாசல செட்டியாரின் பெண்கள் இருவருக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட ஆளுநர் யார் என ஆனந்தரங்கர் நாட்குறிப்பு கூறுகிறது? | ஆளுநர் முசே துய்ப்ளே. |
| 5. | செங்கற்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாகவும், செங்கற்பட்டு மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாரராகவும் நியமிக்கப்பட்டவர் யார்? | ஆனந்தரங்கர். |
| 6. | ஆனந்தரங்கருக்கு 'மன்சுபேதார்' என்னும் பட்டத்தையும், மூவாயிரம் குதிரைகளையும் வழங்கியவர் யார்? | முசபர்சங். |
| 7. | ஆனந்தரங்கர் நாட்குறிப்பை "யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி" என்று கூறியவர் யார்? | கே.கே.பிள்ளை. |
| 8. | ஆனந்தரங்கர் கோவை இயற்றியவர் தியாகராச தேசிகர் எனில், ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் இயற்றியவர் யார்? | அரிமதி தென்னகன். |
| 9. | மு.வரதராசனாரின் தம்பி எழில் எதைப்பற்றி வகுத்து அனுப்புமாறு மு.வ.விற்கு கடிதம் எழுதியிருந்தார்? | ஆக்கவேலை முறை பற்றி. |
| 10. | ""தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து" என்று கடிதம் மூலம் தம்பிக்கு அறிவுரை கூறியவர் யார்? | மு.வரதராசனார். |
| 11. | முத்தொள்ளாயிரத்தின் 108 வெண்பாக்கள் எந்த நூல்வாயிலாகக் கிடைத்துள்ளன? | புறத்திரட்டு. |
| 12. | பாண்டிய மன்னனின் யானை தன் தந்தங்களை எதனைக் கொண்டு மார்போலை எழுதும் என முத்தொள்ளாயிரம் கூறுகிறது? | எழுத்தாணியாக. |
| 13. | 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் எது? | கலிங்கத்துப் பரணி. |
| 14. | ""ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி" என்று கூறும் நூல் எது? | பன்னிரு பாட்டியல். |
| 15. | கலிங்கத்துப் பரணியைத் "தென்தமிழ்த் தெய்வபரணி” எனப் புகழ்ந்தவர் யார்? | ஒட்டக்கூத்தர். |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | திருவிழாக்களில் காவடி, தேர் இழுப்பது இன்னும் எந்த தீவில் நடைபெற்று வருகின்றன? | ரியூனியன் தீவில். |
| 2. | சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பை கூறும் ஐம்பெருங்காப்பிய நூல் எது? | மணிமேகலை. |
| 3. | தேம்பாவணி, பரமார்த்த குரு கதை ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? | வீரமாமுனிவர். |
| 4. | திரு.வி.க. அவர்களின் மனைவியின் பெயர் என்ன? | கமலாம்பிகை. |
| 5. | திரு.வி.க இயற்கை எய்திய நாள் எது? | 17.9.1953. |
| 6. | உமர்கய்யாம் பாடல்கள் தமிழில் மொழிபெயர்த்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம் என்ன? | 1876 - 1954. |
| 7. | கவிமணியின் உமர்கய்யாம் பாடல்கள் தொகுப்பில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை யாது? | 115. |
| 8. | மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் வழங்கிய மூன்று மந்திரங்கள் எவை? | பசியற்றிருக்கவும், விரும்பும் உருவம் எடுக்கவும், வான்வழிச் செல்லவும். |
| 9. | கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை எச்சமயத்தை சார்ந்த காப்பியம்? | பௌத்தம். |
| 10. | மணிமேகலையில் ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனையாவது காதையாக அமைந்துள்ளது? | 24வது காதை. |
| 11. | ""உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று கூறும் நூல்கள் எவை? | புறநானூறு, மணிமேகலை. |
| 12. | தொண்டைக் கட்டைத் தொலைப்பது மிளகு எனில், வயிற்றுச் சூட்டைத் தணிப்பது எது? | சீரகம். |
| 13. | குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்துவது வெங்காயம் எனில், நீர்க்கோவையை நீக்குவது எது? | தேங்காய். |
| 14. | ""பசிப்பிணி என்னும் பாவி” என்று கூறும் நூல் எது? | மணிமேகலை. |
| 15. | தூதுவளையை 'ஞானப்பச்சிலை' என்று கூறியவர் யார்? | வள்ளலார். |
| 16. | 'குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு' என்பதில் குமரி என்பது எந்த மூலிகையைக் குறிக்கும்? | கற்றாழை. |
| 17. | "அறிவியல் ஆய்வு செவ்வாய் நீ அன்றாடச் செய்தி படிப்பாய்!" என்று பாடிய பாவலரேறு யார்? | பெருஞ்சித்திரனார். |


0 Comments