படைப்புகள் மற்றும் ஆசிரியர்கள் (நூல் - ஆசிரியர்)
- "அறிவுகுறி எண் தொடர்கள்" நூலின் ஆசிரியர் - பெ.நா.அப்புசாமி
- "வீரை நவநீதகிருஷ்ண சுவாமி பதிகம்" நூலின் ஆசிரியர் - சென்னிகுளம் அண்ணாமலையார்
- "திருக்கோவையார்" நூலின் ஆசிரியர் - மாணிக்கவாசகர்
- "நரசிம்மவர்மன்" என்ற வரலாற்று நூலின் ஆசிரியர் - மயிலை சீனி.வேங்கடசாமி
- "கடைசிக் கதை" நூலின் ஆசிரியர் - புதுமைப்பித்தன்
- "இந்தியாவும் விடுதலையும்" நூலின் ஆசிரியர் - திரு.வி.க
- "திருக்குறள் விரிவுரை" நூலின் ஆசிரியர் - திரு.வி.க
- "தெய்வமணிமாலை" நூலின் ஆசிரியர் - வள்ளலார்
- "கந்தர் சரணப்பத்து" நூலின் ஆசிரியர் - வள்ளலார்
- "மறைந்து போன மருங்காப்பட்டிணம்" நூலின் ஆசிரியர் - மயிலை சீனி.வேங்கடசாமி
- "கொங்கு நாட்டு வரலாறு" நூலின் ஆசிரியர் - மயிலை சீனி.வேங்கடசாமி
- "துளு நாட்டு வரலாறு" நூலின் ஆசிரியர் - மயிலை சீனி.வேங்கடசாமி
- "முதுமொழிமாலை" நூலின் ஆசிரியர் - உமறுப்புலவர்
- "ஆனந்தரங்கன் கோவை" நூலின் ஆசிரியர் - தியாகராய தேசிகர்
- "ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ்" நூலின் ஆசிரியர் - புலவரேறு அரிமதி தென்னகன்
- "பாரதியைப் பற்றி நண்பர்கள்" நூலின் ஆசிரியர் - ரா.அ.பத்மநாபன்
- "கண்ணம்மா என் காதலி" நூலின் ஆசிரியர் - பாரதியார்
- "கட்டளைக்கலித்துறை" நூலின் ஆசிரியர் - சி.வை.தாமோதரனார்
- "நட்சத்திர மாலை" நூலின் ஆசிரியர் - சி.வை.தாமோதரனார்
- "சூளாமணி வசனம்" நூலின் ஆசிரியர் - சி.வை.தாமோதரனார்
- "ஜீவனாம்சம்" நூலின் ஆசிரியர் - சி.சு.செல்லப்பா
- "பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி" நூலின் ஆசிரியர் - சி.சு.செல்லப்பா
- "கருவை மும்மணிக் கோவை" நூலின் ஆசிரியர் - சென்னிகுளம் அண்ணாமலையார்
- "கோமதி அந்தாதி" நூலின் ஆசிரியர் - சென்னிகுளம் அண்ணாமலையார்
- "சங்கரன்கோவில் திரிபந்தாதி" நூலின் ஆசிரியர் - சென்னிகுளம் அண்ணாமலையார்
- "பனைமரமே பனைமரமே" நூலின் ஆசிரியர் - ஆ.சிவசுப்பிரமணியன்
- "பறவை உலகம்" நூலின் ஆசிரியர் - சலீம் அலி
- "யானை டாக்டர்" சிறுகதை ஆசிரியர் - ஜெயமோகன்
- "பிரமிள் கவிதைகள்" நூலின் ஆசிரியர் - பிரமிள்
- "ஒற்றை வைக்கோல் புரட்சி" நூலின் ஆசிரியர் - மசானபு ஃபுகோகா
- "முப்பட்டை நகரம்" நூலின் ஆசிரியர் - இந்திரன்
- "சாம்பல் வார்த்தைகள்" நூலின் ஆசிரியர் - இந்திரன்
- "செம்மீன்" நூலை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் - சுந்தர ராமசாமி
- "தோட்டியின் மகன்" நூலை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் - சுந்தர ராமசாமி
- "யானைகள் அழியும் பேருயிர்" நூலின் ஆசிரியர்கள் - ச.அகமது அலி, க.யோகானந்த்
- "ஊமைச்செந்நாய்" - கதை
- "அறம்" - சிறுகதைத் தொகுப்பு
- "லங்காபுரி ராஜா" - சிறுகதை தொகுப்பு
- "நட்சத்திரவாசி" - நாடகம்
- "வெயிலும் நிழலும்" - கட்டுரைத் தொகுப்பு
- "குறடு", "நெரிகட்டு" - சிறுகதைத் தொகுப்புகள்
- "உனக்கும் எனக்குமான சொல்" - கவிதைத் தொகுப்பு
- "அரூப நஞ்சு" - கவிதைத் தொகுப்பு
- "மீள்கோணம்", "பெருகும் வேட்கை" - கட்டுரைத் தொகுப்புகள்
- பசுவைய்யா - சுந்தர ராமசாமி
- இளசை சுப்பிரமணியன் - மகாகவி பாரதியார்
- வேதாந்தி - மகாகவி பாரதியார்
- ரிஷி குமாரன் - மகாகவி பாரதியார்
- சரஸ்வதி - மகாகவி பாரதியார்
- கிருஷ்ணன் - மகாகவி பாரதியார்
- செல்லம்மாள் - மகாகவி பாரதியார்
- பேனா - பெ.நா.அப்புசாமி
- இராசேந்திரன் - இந்திரன்
- வைத்தியலிங்கம் - பிரபஞ்சன்
- மதுசூதனன் - ஆத்மநாம்
- ஆதி சித்தர் என்று அழைக்கப்படுபவர் - திருமூலர்
- "திருமலை முருகன் பள்ளு" நூலின் வேறு பெயர்கள் - பள்ளிசை, திருமலை அதிபர் பள்ளு
- "அகநானூறு" நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர் - நெடுந்தொகை
- "நீலகேசி" நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர் - நீலகேசித் தெருட்டு
- நற்றிணையில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 400
- சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப் பாடல்களின் எண்ணிக்கை - 5027
- திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்களின் எண்ணிக்கை - 51
- வில்லிபாரதத்தில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 4351
- மனோன்மணீயம் எத்தனை அங்கங்களைக் கொண்டுள்ளது - 5 அங்கங்கள்
- மனோன்மணீயம் எத்தனை களங்களைக் கொண்டுள்ளது - 20 களங்கள்
- நன்னூல் எழுத்ததிகாரம் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது - 5 பகுதிகள்
- நன்னூல் சொல்லதிகாரம் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது - 5 பகுதிகள்
- அகநானூற்றின் முதல் பகுதியின் பெயர் - களிற்றியானை நிரை
- அகநானூற்றின் இரண்டாம் பகுதியின் பெயர் - மணிமிடை பவளம்
- அகநானூற்றின் மூன்றாம் பகுதியின் பெயர் - நித்திலக்கோவை
- பாலைத் திணைப் பாடல்களின் வரிசை எண் முறை - 1, 3, 5, 7, 9 (ஒற்றைப்படை எண்கள்)
- குறிஞ்சித் திணைப் பாடல்களின் வரிசை எண் முறை - 2, 8, 12, 18
- முல்லைத் திணைப் பாடல்களின் வரிசை எண் முறை - 4, 14, 24, 34
- மருதத் திணைப் பாடல்களின் வரிசை எண் முறை - 6, 16, 26, 36
- நெய்தல் திணைப் பாடல்களின் வரிசை எண் முறை - 10, 20, 30, 40
- பாலைத் திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை - 200
- குறிஞ்சித் திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை - 80
- முல்லைத் திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை - 40
- மருதத் திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை - 40
- நெய்தல் திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை - 40
- மருதத் திணைப் பாடல்களைப் பாடியவர் - ஓரம்போகியார்
- நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் - அம்மூவனார்
- பாலைத் திணைப் பாடல்களைப் பாடியவர் - ஓதலாந்தையார்
- குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியவர் - கபிலர்
- "களிறு கவுள் அடுத்த எறிகல் போல" என்று பாடியவர் - உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (புறநானூறு)
- "தொலைவிலாப் பெரும்புகழ் படைத்த தொன்னகர்" என்று சீறாப்புராணம் குறிப்பிடும் நகரம் - மக்கா
- "தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும்" என்று பாடியவர் - வள்ளலார்
- "ஒன்றிய படிநின் புண்ணியம் அனைத்தும் உதவுக" என்று கர்ணனிடம் கூறியவர் - கிருஷ்ணன்
- "பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி நிரையம் ஒரீஇய" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் - பதிற்றுப்பத்து
- வில்லிபாரதத்தை இயற்றிய வில்லிபுத்தூராரை ஆதரித்த மன்னர் - வக்கபாகை மன்னனான வரபதி
- சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவரை ஆதரித்தவர் - வள்ளல் சீதக்காதி (அபுல் காசிம் மரைக்காயர்)
- மல்லார்மே எந்த நாட்டைச் சார்ந்த கவிஞர் - பிரான்ஸ்
- சு.வில்வரத்தினம் எந்த ஊரைச் சார்ந்தவர் - புங்குடுதீவு (யாழ்ப்பாணம்)
- பிரபஞ்சன் எந்த ஊரைச் சார்ந்தவர் - புதுச்சேரி
- இளையராஜா எந்த ஊரைச் சார்ந்தவர் - பண்ணைப்புரம்
- மௌலானா ரூமி எந்த நாட்டைச் சார்ந்தவர் - ஆப்கானிஸ்தான்
- மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனார் பிறந்த ஊர் - ஆலப்புழை (திருவிதாங்கூர்)
- அ.முத்துலிங்கம் பிறந்த ஊர் - கொக்குவில் (யாழ்ப்பாணம்)
- "எழுத்து" இதழின் தொகுப்பாசிரியர் - கி.அ.சச்சிதானந்தன்
- பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துப் பாடல்களைப் பாடியவர் - குமட்டூர் கண்ணனார்


0 Comments