நூல்களும் அவற்றின் அமைப்பும்:
| வரிசை எண் | வினா | விடை |
|---|---|---|
| 1 | தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள் எத்தனை? | 27 இயல்கள் |
| 2 | மணிமேகலையில் உள்ள மொத்த வரிகள் எத்தனை? | 4755 வரிகள் |
| 3 | கந்தபுராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? | 6 காண்டங்கள் |
| 4 | கந்தபுராணத்தில் உள்ள பாடல்கள் எத்தனை? | 10345 பாடல்கள் |
| 5 | திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? | 3 காண்டங்கள் |
| 6 | திருவிளையாடற் புராணத்தில் உள்ள பாடல்கள் எத்தனை? | 3363 பாடல்கள் |
| 7 | சீறாப்புராணத்தில் உள்ள படலங்கள் எத்தனை? | 92 படலங்கள் |
| 8 | இரட்சணிய யாத்திரிகம் நூலில் உள்ள பருவங்கள் எத்தனை? | 5 பருவங்கள் |
| 9 | இராவண காவியத்தில் உள்ள விருத்தங்கள் எத்தனை? | 3100 விருத்தங்கள் |
| 10 | ஏசு காவியத்தில் உள்ள அகவலடிகள் எத்தனை? | 2346 அகவலடிகள் |
| வரிசை எண் | தமிழ்ப்பெயர் | வடமொழிப்பெயர் |
|---|---|---|
| 11 | எரிசினக் கொற்றவை | ரௌத்திர துர்க்கை |
| 12 | அறம்வளர்த்தாள் | தர்மசம்வர்த்தனி |
| 13 | வாள்நெடுங்கண்ணி | கட்கநேத்ரி |
| 14 | யாழினும் நன்மொழியாள் | வீணாமதுரபாஷிணி |
| 15 | தேன்மொழிப்பாவை | மதுரவசனி |
| 16 | செம்பொன்பள்ளியார் | சொர்ணபுரீச்சுரர் |
| 17 | நீள்நெடுங்கண்ணி | விசாலாட்சி |
| 18 | பழமலைநாதர் | விருத்தகிரீச்சுரர் |
| 19 | திருமறைக்காடு | வேதாரணியம் |
| 20 | திருமுதுகுன்றம் | விருத்தாசலம் |
| வரிசை எண் | சொல் | மொழி |
|---|---|---|
| 21 | கடுதாசி | போர்ச்சுகீசியம் |
| 22 | எக்கச்சக்கம் | தெலுங்கு |
| 23 | இனாம் | உருது |
| 24 | ரூபாய் | இந்துஸ்தானி |
| 25 | அலமாரி | போர்ச்சுகீசியம் |
| 26 | நபர் | அரபி |
| 27 | பேனா | போர்ச்சுகீசியம் |
| 28 | பஜார் | பார்ஸி |
| 29 | குல்லா | பார்ஸி |
| 30 | ரிக்சா | ஜப்பானி |
| வரிசை எண் | சொல் | பொருள் |
|---|---|---|
| 31 | கழை | மூங்கில் |
| 32 | களை | வயலில் களையெடுத்தல் அல்லது முகத்தின் ஒளி |
| 33 | உலை | சமைக்க உலை வைத்தல் |
| 34 | உழை | பாடுபடுதல் (உழைப்பு) |
| 35 | உளை | பிடரிமயிர் அல்லது சேறு |
| 36 | ஒலி | ஓசை |
| 37 | ஒழி | அழித்துவிடு (தொலைத்து விடு) |
| 38 | ஒளி | வெளிச்சம் |
| 39 | தாழி | குடம் (வாயகன்ற பாண்டம்) |
| 40 | தாளி | ஒருவகைப் பனை அல்லது தாளித்தல் |
| வரிசை எண் | திணை | உணவு | தொழில் |
|---|---|---|---|
| 41/46 | குறிஞ்சி | திணை, மலைநெல், மூங்கிலரிசி | தேனெடுத்தல், கிழங்ககழ்தல் |
| 42/47 | முல்லை | வரகு, சாமை, முதிரை | வரகு விதைத்தல், களை பறித்தல் |
| 43/48 | மருதம் | செந்நெல், வெண்ணெலரிசி | நெல்லரிதல், களை பறித்தல் |
| 44/49 | நெய்தல் | மீன், உப்பு விற்றலால் பெறும் பொருள் | மீன் பிடித்தல், உப்பு விற்றல் |
| 45/50 | பாலை | வழிப்பறி செய்த பொருள் | வழிப்பறி செய்தல், நிரை கவர்தல் |
| வரிசை எண் | சொல் | பொருள் |
|---|---|---|
| 51 | மருந்து | அமிழ்தம் |
| 52 | இயம்பலள் | பேச்சொன்றும் பேசினாளல்லள் |
| 53 | எய்த்தமேனி | இளைத்த உடம்பு |
| 54 | வீங்கினள் | பூரித்தாள் |
| 55 | ஆழி | மோதிரம் |
| 56 | விண்டாள் | வெளிப்படுத்தினாள் |
| 57 | வருத்தப்பாடு | துன்பம் |
| 58 | உயிர்ப்பு | பெருமூச்சு |
| 59 | திங்கள் | மாதம் |
| 60 | மாமணிக்கரசு | சூடாமணி |
| 61 | கதுவிடா | கைப்பற்றமுடியாத |
| 62 | மாலி | சூரியன் |
| 63 | கதிர் வகுத்த | ஒளி வீசிய |
| 64 | நாப்பண் | நடுவில் |
| 65 | ஆலி | மழை நீர் |
| 66 | கரிந்து | கருகி |
| 67 | வேய்ந்த | கருமையை அணியாகப் போர்த்திக் கொண்ட |
| 68 | புடை | இடையின் ஒருபக்கம் |
| 69 | நெருங்கி | இறுகக்கட்டி |
| 70 | மாண்ட | சிறந்த |
| 71 | வியன்வட்டம் | அகன்ற கேடயம் |
| 72 | பொறுத்து | சுமந்து கொண்டு |
| 73 | அளித்த | ஒளிமிகுந்த |
| 74 | கீண்டு | கிழித்து |
| 75 | அளாவு | நிறைந்த |
| வரிசை எண் | சொல்/சொற்றொடர் | இலக்கணக் குறிப்பு |
|---|---|---|
| 76 | இனிது இனிது | அடுக்குத்தொடர் |
| 77 | சுமைசுமையாய் | அடுக்குத்தொடர் |
| 78 | துறை துறையாய் | அடுக்குத்தொடர் |
| 79 | உயர் எண்ணம் | வினைத்தொகை |
| 80 | சுவடிச்சாலை | 2-ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
| 81 | செந்தமிழ் | பண்புத்தொகை |
| 82 | தருதல் | தொழிற்பெயர் |
| 83 | வைத்தல் | தொழிற்பெயர் |
| 84 | முட்புதர் | 2-ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
| 85 | உயர்மரம் | வினைத்தொகை |
| 86 | முதிர்மரம் | வினைத்தொகை |
| 87 | வெய்யோன் திங்கள் | உம்மைத்தொகை |
| 88 | கள்ளிப்புதர் | ஆறாம் வேற்றுமைத்தொகை |
| 89 | சட்டதிட்டம் | உம்மைத்தொகை |
| 90 | நீதிநூல் | 2-ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
| 91 | நீருற்று | ஆறாம் வேற்றுமைத்தொகை |
| 92 | விக்கி விக்கி | அடுக்குத்தொடர் |
| 93 | தீராத | எதிர்மறை பெயரெச்சம் |
| 94 | சிந்தித்தேன் | தன்மை ஒருமை வினைமுற்று |
| 95 | கன்றுகுரல் | ஆறாம் வேற்றுமைத்தொகை |
| 96 | தலைகுனிந்து | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
| 97 | பாடுகிறாய் | முன்னிலை ஒருமை வினைமுற்று |
| 98 | வெறுங்கை | பண்புத்தொகை |
| 99 | கருங்கல் | பண்புத்தொகை |
| 100 | தொடுவானம் | வினைத்தொகை |


0 Comments