Ad Code

Responsive Advertisement

6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-1


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக / கோடிட்ட இடத்தை நிரப்புக:
  1. ஏற்றத் தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும்.
  2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு அசதி ஆக இருக்கும்.
  3. தாய்மொழியில் படித்தால் மேன்மை அடையலாம்.
  4. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் மேதினி (உலகம்) சுருங்கிவிட்டது.
  5. "தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் பாரதியார்.
  6. கழுத்தில் சூடுவது தார் (மாலை).
  7. கதிரவனின் மற்றொரு பெயர் ஞாயிறு.
  8. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் கேணி.
  9. சித்தம் என்பதன் பொருள் உள்ளம்.
  10. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் அடுக்குகள்.
  11. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி துருவப்பகுதி.
  12. ஒருவர்க்குச் சிறந்த அணி இன்சொல்.
  13. உடல் நோய்க்கு ஔடதம் (மருந்து) தேவை.
  14. நண்பர்களுடன் ஒருமித்து விளையாடு.
  15. நுட்பமாகச் சிந்தித்து அறிவது நுண்ணறிவு.
  16. தானே இயங்கும் இயந்திரம் தானியங்கி.
  17. மாணவர்கள் நூல்களை மாசற கற்க வேண்டும்.
  18. மாணவர் பிறர் தூற்றும்படி நடக்கக் கூடாது.
  19. நாம் மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்.
  20. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் ஊரில் பள்ளிக்கூடம் இல்லை.
  21. பிறரிடம் நான் இன்சொல் பேசுவேன்.
  22. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது பொறை ஆகும்.
  23. கதிர் முற்றியதும் அறுவடை செய்வர்.
  24. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் தோரணம் கட்டுவர்.
  25. பழையன கழிதலும் புதியன புகுதலும்.
  26. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண துன்பம் தரும்.
  27. விருந்தினரின் முகம் எப்போது வாடும்? நம் முகம் மாறினால்.
  28. நிலையான செல்வம் எது? ஊக்கம்.
  29. ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்.
  30. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் வீரம்.
பிரித்து எழுதுக:
  1. அமுதென்று = அமுது + என்று
  2. செம்பயிர் = செம்மை + பயிர்
  3. செந்தமிழ் = செம்மை + தமிழ்
  4. பொய்யகற்றும் = பொய் + அகற்றும்
  5. இடப்புறம் = இடது + புறம்
  6. சீரிளமை = சீர் + இளமை
  7. வெண்குடை = வெண்மை + குடை
  8. பொற்கோட்டு = பொன் + கோட்டு
  9. நன்மாடங்கள் = நன்மை + மாடங்கள்
  10. நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே
  11. தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம்
  12. வேதியுரங்கள் = வேதி + உரங்கள்
  13. கண்டறி = கண்டு + அறி
  14. ஓய்வற = ஓய்வு + அற
  15. ஆழக்கடல் = ஆழம் + கடல்
  16. விண்வெளி = விண் + வெளி
  17. நின்றிருந்த = நின்று + இருந்த
  18. அவ்வுருவம் = அ + உருவம்
  19. இடமெல்லாம் = இடம் + எல்லாம்
  20. மாசற = மாசு + அற
  21. கைப்பொருள் = கை + பொருள்
  22. பசியின்றி = பசி + இன்றி
  23. படிப்பறிவு = படிப்பு + அறிவு
  24. நன்றியறிதல் = நன்றி + அறிதல்
  25. பொறையுடைமை = பொறை + உடைமை
  26. பாட்டிசைத்து = பாட்டு + இசைத்து
  27. கண்ணுறங்கு = கண் + உறங்கு
  28. போகிப்பண்டிகை = போகி + பண்டிகை
  29. பொருளுடைமை = பொருள் + உடைமை
  30. கல்லெடுத்து = கல் + எடுத்து
  31. நானிலம் = நான்கு + நிலம்
சேர்த்து எழுதுக:
  1. நிலவு + என்று = நிலவென்று
  2. தமிழ் + எங்கள் = தமிழெங்கள்
  3. பாட்டு + இருக்கும் = பாட்டிருக்கும்
  4. எட்டு + திசை = எட்டுத்திசை
  5. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
  6. கணினி + தமிழ் = கணினித்தமிழ்
  7. கொங்கு + அலர் = கொங்கலர்
  8. அவன் + அளிபோல் = அவனளிபோல்
  9. முத்து + சுடர் = முத்துச்சுடர்
  10. நிலா + ஒளி = நிலாவொளி
  11. தரை + இறங்கும் = தரையிறங்கும்
  12. வழி + தடம் = வழித்தடம்
  13. ஏன் + என்று = ஏனென்று
  14. ஔடதம் + ஆம் = ஔடதமாம்
  15. நீலம் + வான் = நீலவான்
  16. இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்
  17. மருத்துவம் + துறை = மருத்துவத்துறை
  18. செயல் + இழக்க = செயலிழக்க
  19. குற்றம் + இல்லாதவர் = குற்றமில்லாதவர்
  20. சிறப்பு + உடையார் = சிறப்புடையார்
  21. மானம் + இல்லா = மானமில்லா
  22. காடு + ஆறு = காட்டாறு
  23. அறிவு + உடைமை = அறிவுடைமை
  24. இவை + எட்டும் = இவையெட்டும்
  25. வாழை + இலை = வாழையிலை
  26. கை + அமர்த்தி = கையமர்த்தி
  27. பொங்கல் + அன்று = பொங்கலன்று
  28. உள்ளுவது + எல்லாம் = உள்ளுவதெல்லாம்
  29. பயன் + இலா = பயனிலா
பொருள் அறிக:
  1. 'தொன்மை' என்னும் சொல்லின் பொருள்: பழமை
  2. 'மா' என்னும் சொல்லின் பொருள்: விலங்கு
எதிர்ச்சொல் / எதிர்ச்சொல் பொருத்துக:
  1. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்: சேர்த்தல்
  2. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்: அரிது
  3. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்: மறைந்த
  4. எதிர்ச்சொல் பொருத்துக:
    • அணுகு - விலகு
    • ஐயம் - தெளிவு
    • ஊக்கம் - சோர்வு
    • உண்மை - பொய்மை
பொருத்துக:
  1. பொருத்துக:
    • விளைவுக்கு - நீர்
    • அறிவுக்கு - தோள்
    • இளமைக்கு - பால்
    • புலவர்க்கு - வேல்
  2. பொருத்துக:
    • முத்துச்சுடர்போல - நிலாவொளி
    • தூய நிறத்தில் - மாடங்கள்
    • சித்தம் மகிழ்ந்திட - தென்றல்
பிற வினாக்கள்:
  1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல்? கல்வி (மஞ்சள், வந்தான், தம்பி ஆகியவற்றில் இன எழுத்து உள்ளது)
  2. அவன் எப்போதும் உண்மையையே உரைக்கின்றான்.
எண்வினாவிடை
1ஏற்றத் தாழ்வற்ற _ அமைய வேண்டும்?சமூகம்
2நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _ ஆக இருக்கும்?அசதி
3நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?நிலவென்று
4தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?தமிழெங்கள்
5அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?அமுது + என்று
6செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?செம்மை + பயிர்
7பொருத்துக: விளைவுக்கு, அறிவுக்கு, இளமைக்கு, புலவர்க்குநீர், தோள், பால், வேல்
8தாய் மொழியில் படித்தால் _ அடையலாம்?மேன்மை
9தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _ சுருங்கிவிட்டது?மேதினி (உலகம்)
10செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?செம்மை + தமிழ்
11பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?பொய் + அகற்றும்
12பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?பாட்டிருக்கும்
13எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?எட்டுத்திசை
14'தொன்மை' என்னும் சொல்லின் பொருள்?பழமை
15'இடப்புறம்' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?இடது + புறம்
16'சீரிளமை' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?சீர் + இளமை
17சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?சிலப்பதிகாரம்
18கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?கணினித்தமிழ்
19"தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர்?பாரதியார்
20'மா' என்னும் சொல்லின் பொருள்?விலங்கு
21கழுத்தில் சூடுவது?தார் (மாலை)
22கதிரவனின் மற்றொரு பெயர்?ஞாயிறு
23வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?வெண்மை + குடை
24பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?பொன் + கோட்டு
25கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?கொங்கலர்
26அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?அவனளிபோல்
27கிணறு என்பதைக் குறிக்கும் சொல்?கேணி
28சித்தம் என்பதன் பொருள்?உள்ளம்
29மாடங்கள் என்பதன் பொருள்?மாளிகையின் அடுக்குகள்
30நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?நன்மை + மாடங்கள்
31நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?நிலத்தின் + இடையே
32முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?முத்துச்சுடர்
33நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?நிலாவொளி
34பொருத்துக: முத்துச்சுடர்போல, தூய நிறத்தில், சித்தம் மகிழ்ந்திடநிலாவொளி, மாடங்கள், தென்றல்
35தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?தட்பம் + வெப்பம்
36வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்?வேதி + உரங்கள்
37தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?தரையிறங்கும்
38வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?வழித்தடம்
39சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி?துருவப்பகுதி
40ஒருவர்க்குச் சிறந்த அணி எது?இன்சொல்
41உடல் நோய்க்கு _ தேவை?ஔடதம் (மருந்து)
42நண்பர்களுடன் _ விளையாடு?ஒருமித்து
43கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?கண்டு + அறி
44ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?ஓய்வு + அற
45ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?ஏனென்று
46ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?ஔடதமாம்
47எதிர்ச்சொல் பொருத்துக: அணுகு, ஐயம், ஊக்கம், உண்மைவிலகு, தெளிவு, சோர்வு, பொய்மை
48அவன் எப்போதும் உண்மையையே _?உரைக்கின்றான்
49ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?ஆழம் + கடல்
50விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?விண் + வெளி
51நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?நீலவான்
52இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?இல்லாதியங்கும்
53நுட்பமாகச் சிந்தித்து அறிவது?நுண்ணறிவு
54தானே இயங்கும் இயந்திரம்?தானியங்கி
55நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?நின்று + இருந்த
56அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?அ + உருவம்
57மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?மருத்துவத்துறை
58செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?செயலிழக்க
59நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?சேர்த்தல்
60எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?அரிது
61மாணவர்கள் நூல்களை _ கற்க வேண்டும்?மாசற
62இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?இடம் + எல்லாம்
63மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?மாசு + அற
64குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?குற்றமில்லாதவர்
65சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?சிறப்புடையார்
66மாணவர் பிறர் _ நடக்கக் கூடாது?தூற்றும்படி
67நாம் _ சொல்படி நடக்க வேண்டும்?மூத்தோர்
68கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?கை + பொருள்
69மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?மானமில்லா
70பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்?ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
71பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?பசி + இன்றி
72படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?படிப்பு + அறிவு
73காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?காட்டாறு
74மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல்?கல்வி (மஞ்சள், வந்தான், தம்பி ஆகியவற்றில் இன எழுத்து உள்ளது)
75பிறரிடம் நான் _ பேசுவேன்?இன்சொல்
76பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது _ ஆகும்?பொறை
77அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?அறிவுடைமை
78இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?இவையெட்டும்
79நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?நன்றி + அறிதல்
80பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?பொறை + உடைமை
81பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?பாட்டு + இசைத்து
82கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?கண் + உறங்கு
83வாழை + இலை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது?வாழையிலை
84கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?கையமர்த்தி
85உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்?மறைந்த
86கதிர் முற்றியதும் _ செய்வர்?அறுவடை
87விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _ கட்டுவர்?தோரணம்
88பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?பொங்கலன்று
89போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?போகி + பண்டிகை
90பழையன கழிதலும் _ புகுதலும்?புதியன
91பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண _ தரும்?துன்பம்
92விருந்தினரின் முகம் எப்போது வாடும்?நம் முகம் மாறினால்
93நிலையான செல்வம் எது?ஊக்கம்
94ஆராயும் அறிவு உடையவர்கள் _ சொற்களைப் பேசமாட்டார்?பயன்தராத
95பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடக்கும் சொல்?பொருள் + உடைமை
96உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?உள்ளுவதெல்லாம்
97பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?பயனிலா
98போர்க்களத்தில் வெளிப்படும் குணம்?வீரம்
99கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?கல் + எடுத்து
100நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்?நான்கு + நிலம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement