வினா தொகுப்பு 7 - தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம்
அ. ஐந்திணையும் தொடர்புடைய செய்திகள் (1 - 15)
| எண். | திணை | யாழ் | நீர் நிலை | ஊர் பெயர் |
|---|---|---|---|---|
| 1 | குறிஞ்சி | குறிஞ்சி யாழ் | சுனை நீர், அருவி நீர் | சிறுகுடி |
| 2 | முல்லை | முல்லை யாழ் | கான்யாறு | பாடி, சேரி |
| 3 | மருதம் | மருத யாழ் | மனைக் கிணறு, பொய்கை, யாறு | பேரூர், மூதூர் |
| 4 | நெய்தல் | விளரி யாழ் | உவர்நீர்க்கேணி, உவர்க்கழி | பட்டினம், பாக்கம் |
| 5 | பாலை | பாலை யாழ் | நீர் வற்றின சுனை, நீர் வற்றிய கிணறு | குறும்பு |
| எண். | சொல் | பொருள் |
|---|---|---|
| 16 | தூக்கம் | நீட்டித்தல் |
| 17 | உறவரின் | மிகுந்து வருமாயின் |
| 18 | வெய்யோன் | கதிரவன் |
| 19 | ஈர்வளை | அறுத்துச் செய்யப் பெற்ற வளையல் |
| 20 | இலங்கு | ஒளிருகின்ற |
| 21 | தோளி | தோளையுடைய கண்ணகி |
| 22 | முறை | நீதி |
| 23 | நிறை | கற்பு |
| 24 | படுகாலை | மாலைக்காலம் |
| 25 | உறாதது | பிறர் அடையாத துன்பம் |
| 26 | மாதர் | காதல் |
| 27 | தீதறு நல்லுரை | குற்றமற்ற இனிய மொழி |
| 28 | நோதக்க செய்தாள் | வருந்தத்தக்கன செய்தாள் |
| 29 | எள்ளல் | இகழ்க |
| 30 | அல்லலுற்று | வருத்தமுற்று |
| 31 | ஆற்றாது | தாங்கமாட்டாது |
| 32 | மல்லல் | வளம் |
| 33 | கொற்றம் | அரசியல் |
| 34 | வம்பப் பெருந்தெய்வம் | புதியதாக வந்த பெரிய தெய்வம் |
| 35 | ஐஅரி உண்கண் | அழகிய செவ்வரிப்படர்ந்த மையுண்ட கண்கள் |
| 36 | இனைந்து | வருந்தி |
| 37 | கம்பலைமாக்கள் | ஆரவாரித்துத்திரியும் மக்கள் |
| 38 | புல்லென்மருள்மாலை | ஒளிமழுங்கித் தோன்றும் மாலை |
| 39 | கொழுநர் | கணவர் |
| 40 | வைவாள் | கூரிய வாள் |
| 41 | வாண்முகம் | ஒளிபொருந்திய முகம் |
| 42 | தப்பிய | தவறிய |
| 43 | மாற்ற | துடைக்க |
| 44 | பழுது | உடல் |
| 45 | ஏந்தல் | சிறந்தோன் |
| 46 | கழல் | திருவடி |
| 47 | முளரி | தாமரை |
| 48 | தையல் | சீதாப்பிராட்டி |
| 49 | வையகம் | தரை |
| 50 | இறைஞ்சி | வணங்கி |
| 51 | திண்டிறல் | இராமபிரான் |
| 52 | ஓதி | கூந்தல் |
| 53 | மற்று | மேலும் |
| 54 | பன்னுவான் | உரைப்பானாயினான் |
| 55 | திரை | அலை |
| 56 | மன் | தயரதன் |
| 57 | மருகி | மருமகள் |
| 58 | தனயை | மகள் |
| 59 | தடந்தோள் | அகன்றதோள் |
| 60 | இரும்பொறை | வலிய பொறுமை |
| 61 | வீங்கு நீர் | பரந்து பெருகிய கடல் |
| 62 | வெற்பு | மலை |
| 63 | உம்பி | உன் தம்பி |
| 64 | வேலை | கடல் |
| 65 | விண்தோய் | வானளாவிய |
| 66 | களி நடனம் | ஆனந்த நடனம் |
| 67 | கனகம் | பொன் |
| 68 | அணங்கு அன்னாள் | தெய்வம் போல்வாள் |
| 69 | அலங்கு | ஒளிமிகுந்த |
| 70 | கோறல் | கொல்லுதல் |
| 71 | அலங்கல் | மாலை |
| 72 | உறைப்ப | அழுத்தமாக |
| 73 | உன்னினள் | நினைந்தனள் |
| 74 | திருக்கம் | வஞ்சனை |
| 75 | முறிவு | வேறுபாடு |
| எண். | சொல் / தொடர் | இலக்கணக் குறிப்பு |
|---|---|---|
| 76 | கவி புனைந்தோம் | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
| 77 | இருக்கு ஆரணம் | இருபெயரொட்டு பண்புத்தொகை |
| 78 | வேங்கட மாயவன் | ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
| 79 | கயிலாய வெற்பு | இருபெயரொட்டு பண்புத்தொகை |
| 80 | அசலம் | காரணப்பெயர் |
| 81 | முச்சங்கம் | பண்புத்தொகை |
| 82 | துஞ்சுமுகில் | வினைத்தொகை |
| 83 | இரை தேர் குயில் | வினைத்தொகை |
| 84 | வளர்கூடல் | வினைத்தொகை |
| 85 | மதப்பிஞ்சு | ஆறாம் வேற்றுமைத் தொகை |
| 86 | மாமதி | உரிச்சொற்றொடர் |
| 87 | இரைதேர் | இரண்டாம் வேற்றுமைத்தொகை |
| 88 | வெண்தயிர் | பண்புத்தொகை |
| 89 | செந்நெல் | பண்புத்தொகை |
| 90 | நாழிகை வாரம் | உம்மைத்தொகை |
| 91 | தாபதர் உள்ளம் | ஆறாம் வேற்றுமைத்தொகை |
| 92 | சுழி வெள்ளம் | வினைத்தொகை |
| 93 | படர்முகில் | வினைத்தொகை |
| 94 | சுடரொளி | வினைத்தொகை |
| 95 | செழும்பொன் | பண்புத்தொகை |
| 96 | பெரும்பூதம் | பண்புத்தொகை |
| 97 | கருஞ்சிகரம் | பண்புத்தொகை |
| 98 | தங்கத்தீவு | உருவகம் |
| 99 | தங்கத்தோணி | உருவகம் |
| 100 | பொற்கரை | உருவகம் |


0 Comments