வினா தொகுப்பு 33
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 3201 | "அம்மா" என்று அழைக்கப்படும் உயிரினம் எது? | பசு |
| 3202 | சிலப்பதிகாரத்தில் கோவலன் மதுரையில் தங்குவதற்கு இடம் கொடுத்தவள் யார்? | மாதரி |
| 3203 | "முப்பது பாட்டும் முடிக்கும் முதற்பொருளே" என்று போற்றப்படும் நூல்? | திருப்பாவை |
| 3204 | "உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்" - இப்பாடல் வரியில் பயின்று வந்துள்ள நயம்? | மோனை |
| 3205 | "காசியும் கடலும்" எனச் சிலேடையாகப் பாடியவர் யார்? | காலமேகப் புலவர் |
| 3206 | "நெற்றி" என்னும் சொல்லின் பொருள் யாது? | நுதல் |
| 3207 | பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? | ஆறு |
| 3208 | பகாப்பதம் எத்தனை வகைப்படும்? | நான்கு |
| 3209 | விகாரம் என்பது எதனைக் குறிக்கும்? | உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் |
| 3210 | "நன்னூல்" என்ற இலக்கண நூலின் ஆசிரியர் யார்? | பவணந்தி முனிவர் |
| 3211 | தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது? | மூன்று |
| 3212 | எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களுக்குப் பின் வல்லினம் ______? | மிகும் |
| 3213 | "விசும்பில் ஊழி" என்று தொடங்கும் பரிபாடல் அடியை எழுதியவர்? | கீரந்தையார் |
| 3214 | ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் புகழ்பெற்ற ஆராய்ச்சி எது? | கருந்துளை (Black Hole) |
| 3215 | "இலா" (ELA) என்னும் மென்பொருளை உருவாக்கிய வங்கி எது? | பாரத ஸ்டேட் வங்கி |
| 3216 | "பெப்பர்" (Pepper) இயந்திர மனிதன் எந்த நாட்டைச் சேர்ந்தது? | ஜப்பான் |
| 3217 | முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர்? | குமரகுருபரர் |
| 3218 | திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? | மூன்று |
| 3219 | "பூத்தொடுத்தல்" என்ற கவிதையை எழுதியவர் யார்? | உமாமகேஸ்வரி |
| 3220 | சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? | இளங்கோவடிகள் |
| 3221 | ம.பொ. சிவஞானம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன? | சிலம்புச் செல்வர் |
| 3222 | தேம்பாவணி நூலின் ஆசிரியர் யார்? | வீரமாமுனிவர் |
| 3223 | "ஒருவன் இருக்கிறான்" என்ற சிறுகதையை எழுதியவர் யார்? | கு. அழகிரிசாமி |
| 3224 | "சித்தாளு" என்ற கவிதையின் ஆசிரியர் யார்? | நாகூர் ரூமி |
| 3225 | "தண்ணீர் தண்ணீர்" என்ற நூலின் ஆசிரியர் யார்? | கோமல் சுவாமிநாதன் |
| 3226 | "வாய்க்கால் மீன்கள்" நூலின் ஆசிரியர் யார்? | வே. இறையன்பு |
| 3227 | "மழைக்காலமும் குயிலோசையும்" நூலின் ஆசிரியர்? | மா. கிருஷ்ணன் |
| 3228 | "வெள்ளைப்பசு" என்ற பாடலை எழுதியவர் யார்? | கவிமணி தேசிக விநாயகனார் |
| 3229 | வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருட்களில் வரும் வினைமுற்று? | வியங்கோள் வினைமுற்று |
| 3230 | சென்னையில் உள்ள மிகப்பெரிய நூலகம் எது? | அண்ணா நூற்றாண்டு நூலகம் |
| 3231 | இந்திய நூலகவியலின் தந்தை எனப்படுபவர்? | இரா. அரங்கநாதன் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 3232 | சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்? | பத்து |
| 3233 | உயிரளபெடை எத்தனை வகைப்படும்? | மூன்று |
| 3234 | ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய் எழுத்துக்கள் எத்தனை? | பத்து |
| 3235 | தனிமொழி என்பது யாது? | ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது |
| 3236 | தொடர்மொழி என்பது யாது? | இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வருவது |
| 3237 | பொதுமொழி என்பது யாது? | ஒரு சொல் தனித்தும் பிரிந்தும் வேறு பொருள் தருவது |
| 3238 | "எட்டு" என்பது எவ்வகை மொழி? | பொதுமொழி |
| 3239 | "வேங்கை" என்பது எவ்வகை மொழி? | பொதுமொழி |
| 3240 | தொழிற்பெயர் எவற்றைக் காட்டாது? | பால், எண், இடம் |
| 3241 | வினையாலணையும் பெயர் எவற்றைக் காட்டும்? | காலம், பால், எண், இடம் |
| 3242 | வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை? | எட்டு |
| 3243 | இரண்டாம் வேற்றுமை உருபு எது? | ஐ |
| 3244 | நான்காம் வேற்றுமை உருபு எது? | கு |
| 3245 | ஆறாம் வேற்றுமை உருபு எது? | அது |
| 3246 | ஏழாம் வேற்றுமை உருபு எது? | கண் |
| 3247 | எழுவாய் வேற்றுமை எத்தனையாவது வேற்றுமை? | முதல் வேற்றுமை |
| 3248 | விளி வேற்றுமை எத்தனையாவது வேற்றுமை? | எட்டாம் வேற்றுமை |
| 3249 | தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? | ஆறு |
| 3250 | தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? | ஒன்பது |
| 3251 | வினைத்தொகை எத்தனை காலங்களைக் காட்டும்? | மூன்று காலங்கள் |
| 3252 | பண்புத்தொகையில் மறைந்து வரும் உருபுகள் யாவை? | மை, ஆகிய, ஆன |
| 3253 | உவமைத்தொகை என்றால் என்ன? | உவம உருபு மறைந்து வருவது |
| 3254 | உம்மைத்தொகை என்றால் என்ன? | 'உம்' மறைந்து வருவது |
| 3255 | அன்மொழித்தொகை என்றால் என்ன? | அல்லாத பிற சொற்கள் மறைந்து வருவது |
| 3256 | செப்பலோசை எந்தப் பாவிற்குரியது? | வெண்பா |
| 3257 | அகவலோசை எந்தப் பாவிற்குரியது? | ஆசிரியப்பா |
| 3258 | துள்ளலோசை எந்தப் பாவிற்குரியது? | கலிப்பா |
| 3259 | தூங்கலோசை எந்தப் பாவிற்குரியது? | வஞ்சிப்பா |
| 3260 | அணி என்பதன் பொருள் என்ன? | அழகு |
| 3261 | உவமையணியில் வரும் உருபு எது? | போல |
| 3262 | உருவக அணி என்றால் என்ன? | உவமையையும் பொருளையும் ஒன்றாகக் கருதுவது |
| 3263 | பிறிது மொழிதல் அணி என்றால் என்ன? | உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது |
| 3264 | வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது யாது? | புகழ்வது போலப் பழிப்பதும் பழிப்பது போலப் புகழ்வதும் |
| 3265 | இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர்? | சிலேடை |
| 3266 | தீவக அணி என்பதன் பொருள் என்ன? | விளக்கு அணி |
| 3267 | நிரல்நிறை அணி என்றால் என்ன? | வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வது |
| 3268 | தன்மை நவிற்சியணி என்பது யாது? | உள்ளதை உள்ளவாறே கூறுவது |
| 3269 | யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது? | ஆறு |
| 3270 | அசை எத்தனை வகைப்படும்? | இரண்டு |
| 3271 | சீர் எத்தனை வகைப்படும்? | நான்கு |
| 3272 | தளை எத்தனை வகைப்படும்? | ஏழு |
| 3273 | அடி எத்தனை வகைப்படும்? | ஐந்து |
| 3274 | தொடை எத்தனை வகைப்படும்? | எட்டு |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 3275 | மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? | தேவநேயப் பாவாணர் |
| 3276 | பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படுபவர்? | தந்தை பெரியார் |
| 3277 | வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் யார்? | தந்தை பெரியார் |
| 3278 | கர்மவீரர் என்று போற்றப்படும் தலைவர் யார்? | காமராசர் |
| 3279 | கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரைப் பாராட்டியவர்? | தந்தை பெரியார் |
| 3280 | தென்னாட்டுச் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்? | முத்துராமலிங்கத் தேவர் |
| 3281 | கண்ணியமிகு தலைவர் என்று அழைக்கப்படுபவர் யார்? | காயிதே மில்லத் |
| 3282 | பாவேந்தர் என்னும் சிறப்புப் பெயர் கொண்டவர் யார்? | பாரதிதாசன் |
| 3283 | புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்? | ந. பிச்சமூர்த்தி |
| 3284 | சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்? | புதுமைப்பித்தன் |
| 3285 | கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படும் புலவர் யார்? | கம்பர் |
| எண் | வினா | விடை |
|---|---|---|
| 3286 | மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் எது? | முத்தொள்ளாயிரம் |
| 3287 | "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடியவர் யார்? | கணியன் பூங்குன்றனார் |
| 3288 | "தீதும் நன்றும் பிறர்தர வாரா" எனக் கூறும் நூல்? | புறநானூறு |
| 3289 | "உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே" எனக் கூறும் நூல்? | மணிமேகலை |
| 3290 | "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றவர்? | வள்ளலார் |
| 3291 | "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக" என்று பாடியவர்? | பூதத்தாழ்வார் |
| 3292 | "வையம் தகளியா வார்கடலே நெய்யாக" என்று பாடியவர்? | பொய்கையாழ்வார் |
| எண் | சொல் | பொருள் |
|---|---|---|
| 3293 | தொன்மை | பழமை |
| 3294 | மிசை | மேல் |
| 3295 | பெற்றம் | பசு |
| 3296 | ஆலயம் | கோவில் |
| 3297 | செஞ்சொல் | திருந்திய சொல் |
| 3298 | விருந்து | புதுமை |
| 3299 | தண்பொருநை | தாமிரபரணி (ஆறு) |
| 3300 | செம்மொழித் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது? | கோயம்புத்தூர் |


0 Comments