அறிவியல் மற்றும் பொது அறிவு
- 3714. ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் புகழ்பெற்ற ஆராய்ச்சி எது?
- விடை: கருந்துளை (Black Hole)
- 3715. இலா (ELA) என்னும் மென்பொருளை உருவாக்கிய வங்கி எது?
- விடை: பாரத ஸ்டேட் வங்கி
- 3716. பெப்பர் (Pepper) இயந்திர மனிதன் எந்த நாட்டைச் சேர்ந்தது?
- விடை: ஜப்பான்
- 3702. சிலப்பதிகாரத்தில் கோவலன் மதுரையில் தங்குவதற்கு இடம் கொடுத்தவள் யார்?
- விடை: மாதரி
- 3717. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர்?
- விடை: குமரகுருபரர்
- 3718. திருவிளையாடற் புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
- விடை: மூன்று
- 3719. பூத்தொடுத்தல் என்ற கவிதையை எழுதியவர் யார்?
- விடை: உமாமகேஸ்வரி
- 3720. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?
- விடை: இளங்கோவடிகள்
- 3722. தேம்பாவணி நூலின் ஆசிரியர் யார்?
- விடை: வீரமாமுனிவர்
- 3723. ஒருவன் இருக்கிறான் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
- விடை: கு. அழகிரிசாமி
- 3724. சித்தாளு என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
- விடை: நாகூர் ரூமி
- 3725. தண்ணீர் தண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
- விடை: கோமல் சுவாமிநாதன்
- 3726. வாய்க்கால் மீன்கள் நூலின் ஆசிரியர் யார்?
- விடை: வே. இறையன்பு
- 3727. மழைக்காலமும் குயிலோசையும் நூலின் ஆசிரியர்?
- விடை: மா. கிருஷ்ணன்
- 3728. வெள்ளைப்பசு என்ற பாடலை எழுதியவர் யார்?
- விடை: கவிமணி தேசிக விநாயகனார்
- 3786. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் எது?
- விடை: முத்தொள்ளாயிரம்
- 3788. தீதும் நன்றும் பிறர்தர வாரா எனக் கூறும் நூல்?
- விடை: புறநானூறு
- 3789. உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே எனக் கூறும் நூல்?
- விடை: மணிமேகலை
- 3707. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
- விடை: ஆறு
- 3708. பகாப்பதம் எத்தனை வகைப்படும்?
- விடை: நான்கு
- 3709. விகாரம் என்பது எதனைக் குறிக்கும்?
- விடை: உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்
- 3710. நன்னூல் என்ற இலக்கண நூலின் ஆசிரியர் யார்?
- விடை: பவணந்தி முனிவர்
- 3711. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
- விடை: மூன்று
- 3712. எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களுக்குப் பின் வல்லினம் _____?
- விடை: மிகும்
- 3729. வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருட்களில் வரும் வினைமுற்று?
- விடை: வியங்கோள் வினைமுற்று
- 3732. சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
- விடை: பத்து
- 3733. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
- விடை: மூன்று
- 3734. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய் எழுத்துக்கள் எத்தனை?
- விடை: பத்து
- 3735. தனிமொழி என்பது யாது?
- விடை: ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது
- 3736. தொடர்மொழி என்பது யாது?
- விடை: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வருவது
- 3737. பொதுமொழி என்பது யாது?
- விடை: ஒரு சொல் தனித்தும் பிரிந்தும் வேறு பொருள் தருவது
- 3738. 'எட்டு' என்பது எவ்வகை மொழி?
- விடை: பொதுமொழி
- 3739. 'வேங்கை' என்பது எவ்வகை மொழி?
- விடை: பொதுமொழி
- 3740. தொழிற்பெயர் எவற்றைக் காட்டாது?
- விடை: பால், எண், இடம்
- 3741. வினையாலணையும் பெயர் எவற்றைக் காட்டும்?
- விடை: காலம், பால், எண், இடம்
- 3742. வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை?
- விடை: எட்டு
- 3743. இரண்டாம் வேற்றுமை உருபு எது?
- விடை: ஐ
- 3744. நான்காம் வேற்றுமை உருபு எது?
- விடை: கு
- 3745. ஆறாம் வேற்றுமை உருபு எது?
- விடை: அது
- 3746. ஏழாம் வேற்றுமை உருபு எது?
- விடை: கண்
- 3747. எழுவாய் வேற்றுமை எத்தனையாவது வேற்றுமை?
- விடை: முதல் வேற்றுமை
- 3748. விளி வேற்றுமை எத்தனையாவது வேற்றுமை?
- விடை: எட்டாம் வேற்றுமை
- 3749. தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?
- விடை: ஆறு
- 3750. தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?
- விடை: ஒன்பது
- 3751. வினைத்தொகை எத்தனை காலங்களைக் காட்டும்?
- விடை: மூன்று காலங்கள்
- 3752. பண்புத்தொகையில் மறைந்து வரும் உருபுகள் யாவை?
- விடை: மை, ஆகிய, ஆன
- 3753. உவமைத்தொகை என்றால் என்ன?
- விடை: உவம உருபு மறைந்து வருவது
- 3754. உம்மைத்தொகை என்றால் என்ன?
- விடை: 'உம்' மறைந்து வருவது
- 3755. அன்மொழித்தொகை என்றால் என்ன?
- விடை: அல்லாத பிற சொற்கள் மறைந்து வருவது
- 3756. செப்பலோசை எந்தப் பாவிற்குரியது?
- விடை: வெண்பா
- 3757. அகவலோசை எந்தப் பாவிற்குரியது?
- விடை: ஆசிரியப்பா
- 3758. துள்ளலோசை எந்தப் பாவிற்குரியது?
- விடை: கலிப்பா
- 3759. தூங்கலோசை எந்தப் பாவிற்குரியது?
- விடை: வஞ்சிப்பா
- 3760. அணி என்பதன் பொருள் என்ன?
- விடை: அழகு
- 3761. உவமையணியில் வரும் உருபு எது?
- விடை: போல
- 3762. உருவக அணி என்றால் என்ன?
- விடை: உவமையையும் பொருளையும் ஒன்றாகக் கருதுவது
- 3763. பிறிது மொழிதல் அணி என்றால் என்ன?
- விடை: உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது
- 3764. வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது யாது?
- விடை: புகழ்வது போலப் பழிப்பதும் பழிப்பது போலப் புகழ்வதும்
- 3765. இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர்?
- விடை: சிலேடை
- 3766. தீவக அணி என்பதன் பொருள் என்ன?
- விடை: விளக்கு அணி
- 3767. நிரல்நிறை அணி என்றால் என்ன?
- விடை: வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வது
- 3768. தன்மை நவிற்சியணி என்பது யாது?
- விடை: உள்ளதை உள்ளவாறே கூறுவது
- 3769. யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது?
- விடை: ஆறு
- 3770. அசை எத்தனை வகைப்படும்?
- விடை: இரண்டு
- 3771. சீர் எத்தனை வகைப்படும்?
- விடை: நான்கு
- 3772. தளை எத்தனை வகைப்படும்?
- விடை: ஏழு
- 3773. அடி எத்தனை வகைப்படும்?
- விடை: ஐந்து
- 3774. தொடை எத்தனை வகைப்படும்?
- விடை: எட்டு
- 3703. "முப்பது பாட்டும் முடிக்கும் முதற்பொருளே" என்று போற்றப்படும் நூல்?
- விடை: திருப்பாவை
- 3704. "உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்" - இப்பாடல் வரியில் பயின்று வந்துள்ள நயம்?
- விடை: மோனை
- 3705. "காசியும் கடலும்" எனச் சிலேடையாகப் பாடியவர் யார்?
- விடை: காலமேகப் புலவர்
- 3713. "விசும்பில் ஊழி" என்று தொடங்கும் பரிபாடல் அடியை எழுதியவர்?
- விடை: கீரந்தையார்
- 3775. "மொழிஞாயிறு" என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: தேவநேயப் பாவாணர்
- 3776. "பகுத்தறிவுப் பகலவன்" என்று போற்றப்படுபவர்?
- விடை: தந்தை பெரியார்
- 3777. "வைக்கம் வீரர்" என அழைக்கப்படுபவர் யார்?
- விடை: தந்தை பெரியார்
- 3778. "கர்மவீரர்" என்று போற்றப்படும் தலைவர் யார்?
- விடை: காமராசர்
- 3779. "கல்விக்கண் திறந்தவர்" என்று காமராசரைப் பாராட்டியவர்?
- விடை: தந்தை பெரியார்
- 3780. "தென்னாட்டுச் சிங்கம்" என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: முத்துராமலிங்கத் தேவர்
- 3781. "கண்ணியமிகு தலைவர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: காயிதே மில்லத்
- 3782. "பாவேந்தர்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டவர் யார்?
- விடை: பாரதிதாசன்
- 3783. "புதுக்கவிதையின் தந்தை" என்று போற்றப்படுபவர் யார்?
- விடை: ந. பிச்சமூர்த்தி
- 3784. "சிறுகதை மன்னன்" என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: புதுமைப்பித்தன்
- 3785. "கவிச்சக்கரவர்த்தி" என்று போற்றப்படும் புலவர் யார்?
- விடை: கம்பர்
- 3787. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடியவர் யார்?
- விடை: கணியன் பூங்குன்றனார்
- 3790. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றவர்?
- விடை: வள்ளலார்
- 3791. "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக" என்று பாடியவர்?
- விடை: பூதத்தாழ்வார்
- 3792. "வையம் தகளியா வார்கடலே நெய்யாக" என்று பாடியவர்?
- விடை: பொய்கையாழ்வார்
- 3706. "நெற்றி" என்னும் சொல்லின் பொருள் யாது?
- விடை: நுதல்
- 3793. "தொன்மை" என்பதன் பொருள் என்ன?
- விடை: பழமை
- 3794. "மிசை" என்பதன் பொருள் என்ன?
- விடை: மேல்
- 3795. "பெற்றம்" என்பதன் பொருள் என்ன?
- விடை: பசு
- 3796. "ஆலயம்" என்பதன் பொருள் என்ன?
- விடை: கோவில்
- 3797. "செஞ்சொல்" என்பதன் பொருள் என்ன?
- விடை: திருந்திய சொல்
- 3798. "விருந்து" என்பதன் பொருள் என்ன?
- விடை: புதுமை
- 3701. "அம்மா" என்று அழைக்கப்படும் உயிரினம் எது?
- விடை: பசு
- 3721. ம.பொ. சிவஞானம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன?
- விடை: சிலம்புச் செல்வர்
- 3730. சென்னையில் உள்ள மிகப்பெரிய நூலகம் எது?
- விடை: அண்ணா நூற்றாண்டு நூலகம்
- 3731. இந்திய நூலகவியலின் தந்தை எனப்படுபவர்?
- விடை: இரா. அரங்கநாதன்
- 3799. தண்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?
- விடை: தாமிரபரணி
- 3800. செம்மொழித் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
- விடை: கோயம்புத்தூர்


0 Comments