801. முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் எது? விடை: சாயல்குடி
802. முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர் என்ன? விடை: நேதாஜி
803. "தேசத்தைக் காத்தல்" என்ற தலைப்பில் விவேகானந்தரின் பெருமையை சாயல்குடியில் பேசியவர்? விடை: முத்துராமலிங்கத் தேவர்
804. முத்துராமலிங்கத் தேவரின் பேச்சைக் கேட்டு "இது போன்ற பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை" என்று பாராட்டியவர்? விடை: காமராசர்
805. முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு யார்? விடை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
806. நேதாஜி மதுரைக்கு வருகை தந்த ஆண்டு? விடை: 1939 (செப்டம்பர் 6)
807. இந்திய அரசு முத்துராமலிங்கத் தேவருக்குத் தபால் தலை வெளியிட்ட ஆண்டு? விடை: 1995
808. "தென்னாட்டுச் சிங்கம்" என்று தேவரை அழைத்தவர்? விடை: அறிஞர் அண்ணா
809. "தேசியம் உடல், தெய்வீகம் உயிர்" எனக் கருதி மக்கள் தொண்டாற்றியவர்? விடை: முத்துராமலிங்கத் தேவர்
810. தேவர் எந்த நோயின் காரணமாகத் தன் கல்வியைத் தொடர முடியவில்லை? விடை: பிளேக் நோய்
811. தேவர் 1934-ஆம் ஆண்டு குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து எங்கு மாநாடு நடத்தினார்? விடை: கமுதி
812. வாய்பூட்டுச் சட்டத்தால் மேடையில் பேசத் தடை விதிக்கப்பட்ட வடநாட்டுத் தலைவர் யார்? விடை: பாலகங்காதர திலகர்
813. வாய்பூட்டுச் சட்டத்தால் மேடையில் பேசத் தடை விதிக்கப்பட்ட தென்னாட்டுத் தலைவர் யார்? விடை: முத்துராமலிங்கத் தேவர்
814. தேவர் பர்மா சென்றிருந்த போது அங்கு யாருக்காகப் போராடினார்? விடை: புத்த பிட்சுகள்
815. முத்துராமலிங்கத் தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் எத்தனை? விடை: 20075
816. தேவர் சிறையில் கழித்த நாட்கள் எத்தனை? விடை: 4000
817. "சித்தாலு" என்ற கவிதையின் ஆசிரியர் யார்? விடை: நாகூர் ரூமி
818. நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன? விடை: முகம்மது ரஃபி
819. நாகூர் ரூமி பிறந்த மாவட்டம் எது? விடை: தஞ்சாவூர்
820. நாகூர் ரூமி 80-களில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்? விடை: கணையாழி
821. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகள் யாவை? விடை: நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல்
822. "கப்பலுக்குப் போன மச்சான்" என்ற நாவலை எழுதியவர்? விடை: நாகூர் ரூமி
823. "செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும்" என்று யாரைக் குறிப்பிடுகிறார் நாகூர் ரூமி? விடை: சித்தாள்
824. தாவோ தே ஜிங் என்ற நூலின் ஆசிரியர்? விடை: லாவோட்சு (Lao Tzu)
825. லாவோட்சு எந்த நாட்டைச் சேர்ந்தவர்? விடை: சீனா
826. லாவோட்சு எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? விடை: கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
827. "வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது" என்று லாவோட்சு எதனைக் கூறுகிறார்? விடை: சிரிப்பு
828. "அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன்" என்று கூறியவர்? விடை: ஐன்ஸ்டீன்
829. "எந்த ஒன்றும் உருவாக வேண்டுமென்றால் உண்டும் வேண்டும் இல்லையும் வேண்டும்" என்றவர்? விடை: லாவோட்சு
830. சீனா ஞானி கன்பூசியஸின் சமகாலத்தவர் யார்? விடை: லாவோட்சு
831. ஜூல்ஸ் வெர்ன் எழுதிய அறிவியல் புனைகதை நூல்? விடை: 80 நாளில் உலகத்தைச் சுற்றி
832. ஜூல்ஸ் வெர்ன் எழுதிய மற்றொரு நூல்? விடை: பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்
833. "ஆழ்கடலின் அடியில்" என்ற கதையில் வரும் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர்? விடை: நாட்லஸ்
834. நாட்லஸ் கப்பலின் தலைவர் யார்? விடை: நெமோ
835. நெமோவின் கப்பலில் இருந்த திமிங்கல வேட்டைக்காரர் யார்? விடை: நெட்
836. "சிப்பாய்" என்னும் சொல்லின் பொருள்? விடை: போர்வீரன்
837. "சலாம்" என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்? விடை: வணக்கம்
838. "பந்தர்" என்பது எவ்வகைப் போலி? விடை: ஈற்றுப்போலி (பந்தல் - பந்தர்)
839. "மைஞ்சு" என்பது எவ்வகைப் போலி? விடை: முதற்போலி (மஞ்சு - மைஞ்சு)
840. "அஞ்சு" என்பது எவ்வகைப் போலி? விடை: முற்றுப்போலி (ஐந்து - அஞ்சு)
841. "அரையர்" என்பது எவ்வகைப் போலி? விடை: இடைப்போலி (அரசர் - அரையர்)
842. "இடர் ஆழி நீங்குவே" - இதில் இடர் என்பதன் பொருள்? விடை: துன்பம்
843. "ஞானச்சுடர்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: ஞானம் + சுடர்
844. அன்பு = நெய், ஆர்வம் = தகளி, சிந்தை = இடுதிரி, ஞானம் = விளக்கு - இது யாருடைய பாடல்? விடை: பூதத்தாழ்வார்
845. காந்தியடிகள் எப்போதும் எதைப் பேசினார்? விடை: வாய்மையை
846. அறக்கதிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: அறம் + கதிர்
847. "இளமை" என்னும் சொல்லின் எதிர்ச்சொல்? விடை: முதுமை
848. விளைநிலம் என்று முனைப்பாடியார் எதனை உருவகிக்கிறார்? விடை: இனிய சொல்
849. விதை என்று முனைப்பாடியார் எதனை உருவகிக்கிறார்? விடை: ஈகை
850. கலை என்று முனைப்பாடியார் எதனை உருவகிக்கிறார்? விடை: வன்சொல்
851. உரம் என்று முனைப்பாடியார் எதனை உருவகிக்கிறார்? விடை: உண்மை
852. "கல்லலை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: கல் + அலை
853. "தலையசைத்து" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: தலை + அசைத்து
854. "இல்லாது இயங்கும்" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? விடை: இல்லாதியங்கும்
855. "செயல் இழக்க" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? விடை: செயலிழக்க
856. நுட்பமாகச் சிந்தித்து அறிவது? விடை: நுண்ணறிவு
857. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்? விடை: சேர்த்தல்
858. "இடமெல்லாம்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: இடம் + எல்லாம்
859. "மாசற" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: மாசு + அற
860. "குற்றம் இல்லாதவர்" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது? விடை: குற்றமில்லாதவர்
861. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: பசி + இன்றி
862. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: படிப்பு + அறிவு
863. காட்டாறு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? விடை: காடு + ஆறு
864. "வண்டு" - இச்சொல்லில் அமைந்துள்ள மெல்லினத்திற்கான இன எழுத்து? விடை: ண (ட் - ண இன எழுத்துகள்)
865. "பள்ளி மறுதிறப்பு" கதையை எழுதியவர்? விடை: சுப்ரபாரதிமணியன்
866. சுப்ரபாரதிமணியன் நடத்தும் இதழ்? விடை: கனவு
867. வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு? விடை: 1780
868. ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்? விடை: வேலு நாச்சியார்
869. வேலு நாச்சியாரின் அமைச்சர் யார்? விடை: தாண்டவராயர்
870. வேலு நாச்சியாரின் தளபதிகள் யார்? விடை: பெரிய மருது, சின்ன மருது
871. வேலு நாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுத் தலைவி யார்? விடை: குயிலி
872. உடையாள் என்பவருக்கு நடுகல் நட்டு வழிபட்டவர்? விடை: வேலு நாச்சியார்
873. தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் எதிலிருந்து தோன்றியது? விடை: சிலம்பு (ஒலிக்கும் மலை)
874. சிலப்பதிகாரத்தில் வரும் "சிலம்புகழி நோன்பு" எதைக் குறிக்கிறது? விடை: திருமணத்திற்குப் பின் சிலம்பை நீக்குதல்
875. வில்லுப்பாட்டு என்பது எவ்வகை இலக்கியம்? விடை: வாய்மொழி இலக்கியம்
876. உழவர் சேற்று வயலில் நாற்று நடும்போது பாடும் பாட்டு? விடை: நடவுப்பாட்டு
877. "தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர்? விடை: மறைமலை அடிகள்
878. "தமிழ் வாழ்க" என்பது எவ்வகை வாக்கியம்? விடை: விழைவுத் தொடர்
879. "நேற்று மழை பெய்தது" என்பது எவ்வகை வாக்கியம்? விடை: செய்தித் தொடர்
880. "எவ்வளவு உயரமான மரம்!" என்பது எவ்வகை வாக்கியம்? விடை: உணர்ச்சித் தொடர்
881. "உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்?" என்பது எவ்வகை வாக்கியம்? விடை: வினாத் தொடர்
882. "பூக்களைப் பறிக்காதீர்" என்பது எவ்வகை வாக்கியம்? விடை: கட்டளைத் தொடர்
883. சிலப்பதிகாரத்தில் வரும் "வண்ணமும் சுண்ணமும்" என்பது எவ்வகைத் தொடர்? விடை: எண்ணும்மை
884. "வெறுக்கை" என்பதன் பொருள்? விடை: செல்வம்
885. "பாசவர்" என்பதன் பொருள்? விடை: வெற்றிலை விற்போர்
886. "ஓசுநர்" என்பதன் பொருள்? விடை: எண்ணெய் விற்போர்
887. "கண்ணுள் வினைஞர்" என்பதன் பொருள்? விடை: ஓவியர்
888. "மண்ணீட்டாளர்" என்பதன் பொருள்? விடை: சிற்பி
889. "கிழி" என்பதன் பொருள்? விடை: துணி
890. "துகில்" என்பதன் பொருள்? விடை: பட்டு
891. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன்? விடை: நெடுஞ்செழியன்
892. பத்துப்பாட்டு நூல்களுள் அடி அளவில் பெரியது எது? விடை: மதுரைக்காஞ்சி
893. "கூலம்" என்பதன் பொருள்? விடை: தானியம்
894. "மறுமை" என்பதன் பொருள்? விடை: மறுபிறவி
895. "தமக்கை" என்பதன் பொருள்? விடை: அக்கா
896. "நவ்வி" என்பதன் பொருள்? விடை: மான்
897. "முகமன்" என்பதன் பொருள்? விடை: ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்
898. "பண்" என்பதன் பொருள்? விடை: இசை
899. "வள்" என்பதன் பொருள்? விடை: கூர்மை
900. "கனகச்சுனை" என்பதன் பொருள்? விடை: பொன்வண்ண நீர்நிலை


0 Comments