6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-71


TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-71
தமிழ் வினாவிடைத் தொகுப்பு (2001 - 2100)

பொருத்தமான பொருள் அறிதல்:
எண்வினாவிடை
2001ஆர்வலர் என்பதன் பொருள் என்ன?அன்புடையவர்
2002புன்கணீர் என்பதன் பொருள் என்ன?துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
2003பூசல்தரும் என்பதன் பொருள் என்ன?வெளிப்பட்டு நிற்கும்
2004என்பு என்பதன் பொருள் என்ன?எலும்பு (இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது)
2005ஈனும் என்பதன் பொருள் என்ன?தரும்
2006வையகம் என்பதன் பொருள் என்ன?உலகம்
2007என்ப என்பதன் பொருள் என்ன?என்பார்கள்
2008மறம் என்பதன் பொருள் என்ன?வீரம்
2009என்பிலது என்பதன் பொருள் என்ன?எலும்பில்லாதது (புழு)
2010அன்பிலது என்பதன் பொருள் என்ன?அன்பில்லாத உயிர்கள்
2011வன்பாற்கண் என்பதன் பொருள் என்ன?பாலைநிலத்தில் (வன்பால் + கண்)
2012தளிர்த்தற்று என்பதன் பொருள் என்ன?தளிர்த்தது போல
2013வற்றல்மரம் என்பதன் பொருள் என்ன?வாடிய மரம்
2014புறத்துறுப்பு என்பதன் பொருள் என்ன?உடல் உறுப்புகள்
2015அகத்துறுப்பு என்பதன் பொருள் என்ன?மனத்தின் உறுப்பு
2016எவன் செய்யும் என்பதன் பொருள் என்ன?என்ன பயன்?
2042அணியர் என்பதன் பொருள் என்ன?நெருங்கி இருப்பவர்
2043என்னாம் என்பதன் பொருள் என்ன?என்ன பயன்
2044சேய் என்பதன் பொருள் என்ன?தூரம்
2045செய் என்பதன் பொருள் என்ன?வயல்
2048தலைசாயுதல் என்பதன் பொருள் என்ன?ஓய்ந்து படுத்தல்
2049வண்மை என்பதன் பொருள் என்ன?கொடை
2050உழுபடை என்பதன் பொருள் என்ன?விவசாயம் செய்யப் பயன்படும் கருவிகள்
2051கோணி என்பதன் பொருள் என்ன?சாக்கு
2052நடை என்பதன் பொருள் என்ன?சாலையில் செல்லும் வண்டிகள்
2053பறப்பு என்பதன் பொருள் என்ன?பறக்கும் விமானம் போன்றவை
2054உவந்து செய்வோம் என்பதன் பொருள் என்ன?விரும்பிச் செய்வோம்
2056மேலவர் என்பதன் பொருள் என்ன?மேலோர்
2057கீழவர் என்பதன் பொருள் என்ன?கீழோர்
2058மற்றோர் என்பதன் பொருள் என்ன?பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர்
2059நெறியினின்று என்பதன் பொருள் என்ன?அறநெறியில் நின்று
2098நான்மணிக்கடிகையில் வரும் 'மடவாள்' என்பதன் பொருள் என்ன?பெண்
2099தகைசால் என்பதன் பொருள் என்ன?பண்பில் சிறந்த
2100காதல் புதல்வர் என்பதன் பொருள் என்ன?அன்புமக்கள்
இலக்கணம் மற்றும் மொழிப் பயன்பாடு:
எண்வினாவிடை
2017ஓலைச்சுவடி எழுத்துக்களில் எந்தெந்த வேறுபாடுகள் இருக்காது?புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்பு வேறுபாடு
2034'அ' என்னும் எழுத்து எதனைக் குறிப்பதாகக் கூறுவர்?மனிதன்
2035'ங்' என்ற எழுத்துக்குப் பின்னால் வரும் இன எழுத்து எது?
2036'மஞ்சள்', 'அஞ்சாதே' என்னும் சொற்களில் எவை நட்பு எழுத்துக்கள்?ஞ், ச
2037'தமக்குரியர்' என்பதனைப் பிரித்து எழுதுக?தமக்கு + உரியர்
2038'அன்பீனும்' என்பதனைப் பிரித்து எழுதுக?அன்பு + ஈனும்
2039'நிழலருமை' என்பதனைப் பிரித்து எழுதுக?நிழல் + அருமை
2041'நன்கணியர்' என்பதனைப் பிரித்து எழுதுக?நன்கு + அணியர்
2082தமிழ் மொழியிலுள்ள உயிர் மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?216
2083தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?247
2084"சிலர் + அழுவார்" என்பதனைச் சேர்த்து எழுதுக?சிலரழுவார்
2085"புகழ் + இழந்தேன்" என்பதனைச் சேர்த்து எழுதுக?புகழிழந்தேன்
2086"இரும்பாணிகள்" என்பதனைப் பிரித்து எழுதுக?இரும்பு + ஆணிகள்
2087"கொல்லருலை" என்பதனைப் பிரித்து எழுதுக?கொல்லர் + உலை
2094தன் எழுத்துடன் மட்டும் சேரும் மெய்யெழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படும்?உடனிலை மெய்ம்மயக்கம்
2095உடனிலை மெய்ம்மயக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக?பக்கம், அச்சம்
2096தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் மெய்யெழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படும்?வேற்று நிலை மெய்ம்மயக்கம்
2097வேற்று நிலை மெய்ம்மயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தருக?சார்பு, வாழ்க்கை
நூல்கள் மற்றும் நூலகங்கள்:
எண்வினாவிடை
2018கீழ்த்திசைக் சுவடிகள் நூலகம் எங்கு அமைந்துள்ளது?சென்னை
2019அரசு ஆவணக் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?சென்னை
2020உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?சென்னை
2021சரசுவதி மகால் நூலகம் எங்கு அமைந்துள்ளது?தஞ்சாவூர்
2046சங்க நூல்கள் எனப்படுபவை எவை?பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்
2047பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை எவ்வகை நூல்கள்?அறநூல்கள்
உ.வே.சா. குறித்த தகவல்கள்:
எண்வினாவிடை
2022உ.வே.சா. பதிப்பித்த எட்டுத்தொகை நூல்கள் எத்தனை?எட்டு (8)
2023உ.வே.சா. பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை?பத்து (10)
2024உ.வே.சா. பதிப்பித்த புராணங்கள் எத்தனை?பன்னிரண்டு (12)
2025உ.வே.சா. பதிப்பித்த உலா நூல்கள் எத்தனை?ஒன்பது (9)
2026உ.வே.சா. பதிப்பித்த கோவை நூல்கள் எத்தனை?ஆறு (6)
2027உ.வே.சா. பதிப்பித்த தூது நூல்கள் எத்தனை?ஆறு (6)
2028உ.வே.சா. பதிப்பித்த வெண்பா நூல்கள் எத்தனை?பதிமூன்று (13)
2029உ.வே.சா. பதிப்பித்த அந்தாதி நூல்கள் எத்தனை?மூன்று (3)
2030உ.வே.சா. பதிப்பித்த பரணி நூல்கள் எத்தனை?இரண்டு (2)
2031உ.வே.சா. பதிப்பித்த மும்மணிக்கோவை நூல்கள் எத்தனை?இரண்டு (2)
2032உ.வே.சா. பதிப்பித்த இரட்டை மணிமாலை நூல்கள் எத்தனை?இரண்டு (2)
2033உ.வே.சா எந்த ஆண்டு இயற்கை எய்தினார்?28.4.1942
2040உ.வே.சா.வின் பெருவெற்றிக்கும் நம்பிக்கைக்குக் காரணம் என்ன?அவருடைய ஆர்வம்
சூழலியல் மற்றும் விலங்குகள்:
எண்வினாவிடை
2060பறவைகளை இடப்பெயர்ச்சி செய்யத் தூண்டும் பருவநிலை மாற்றம் எந்த மாதத்தில் ஏற்படும்?மே மாதம்
2061உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கும் இடத்துக்குப் பெயர் என்ன?பறவைகள் சரணாலயம்
2062இந்தியாவில் ஏறத்தாழ எத்தனை வகையான பறவைகள் உள்ளன?இரண்டாயிரத்து நானூறு
2063பறவைகளை அவற்றின் உணவு மற்றும் வாழ்க்கை அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?ஐந்து வகையாகப் பிரிக்கலாம்
2064சமவெளி மரங்களில் வாழும் பறவைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக?மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக் குயில்
2065நீர்நிலைகளில் வாழும் பறவைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக?கொக்கு, தாழைக்கோழி, பவளக்காலி
2066மலைகளில் வாழும் சில பறவைகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக?இருவாச்சி, செந்தலைப்பூங்குருவி, மின்சிட்டு
2076இந்தியாவில் எத்தனை வகையான பாம்புகள் உள்ளன?இருநூற்று நாற்பத்து நான்கு
2077உலகில் மனித இனம் தோன்றுவதற்குப் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பே பாம்பினம் தோன்றியது?பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே
2078இராஜநாகம் எத்தனை அடி நீளமுடையது?15 அடி
2079பாம்புகள் எதை மென்று தின்பதில்லை?இரையை
2080பாம்பு எதனை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கிறது?தரையின் அதிர்வுகளை
2081பாம்பு தன் நாக்கை அடிக்கடி எதற்காக வெளியே நீட்டுகிறது?சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்துகொள்ள
பறவைகள் சரணாலயங்கள் (மாவட்டம்):
எண்சரணாலயம்மாவட்டம்
2067கரிக்கிளி பறவைகள் சரணாலயம்காஞ்சிபுரம் மாவட்டம்
2068மேல்செல்வனூர் பறவைகள் சரணாலயம்இராமநாதபுரம் மாவட்டம்
2069பழவேற்காடு பறவைகள் சரணாலயம்திருவள்ளூர் மாவட்டம்
2070உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம்திருவாரூர் மாவட்டம்
2071வடுவூர் பறவைகள் சரணாலயம்தஞ்சாவூர் மாவட்டம்
2072கரைவெட்டி பறவைகள் சரணாலயம்பெரம்பலூர் மாவட்டம்
2073வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்சிவகங்கை மாவட்டம்
2074வெள்ளோடு பறவைகள் சரணாலயம்ஈரோடு மாவட்டம்
2075கோடியக்கரை பறவைகள் சரணாலயம்நாகப்பட்டினம் மாவட்டம்
பொது அறிவு மற்றும் பிற தகவல்கள்:
எண்வினாவிடை
2055'தமிழ்மகள்' எனப் பாரதியார் யாரைக் குறிப்பிடுகிறார்?ஒளவையார்
2088ஆற்றின் ஒரு சிறுகிளை எவ்வாறு அழைக்கப்படும்?வாய்க்கால்
2089நன்செய் நிலங்களில் எவை மிகுதியாய் விளையும்?நெல்லும் கரும்பும்
2090மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் என்ன?தந்தம்
2091உலகம் வெப்பமடையக் காரணம் என்ன?வாகனப்புகை
2092ஆறுகள் மாசடையக் காரணம் என்ன?தொழிற்சாலைக் கழிவு
2093மழை குறையக் காரணம் என்ன?காடுகள் அழிப்பு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement