TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-81
சொற்பொருள் (3001 - 3010)| எண் | சொல் | பொருள் |
|---|
| 3001 | அகழ்வார் | அகழ் (வேர்ச்சொல்) |
| 3002 | மறத்தல் ('தல்') | தொழிற்பெயர் விகுதி |
| 3003 | பொதிந்து வைப்பர் | மனத்துள் வைத்துக் கொள்வர் |
| 3004 | பொன்றும் துணையும் | உலகம் உள்ளவரை |
| 3005 | திறனல்ல | செய்யத்தகாத |
| 3006 | மிகுதியான் | மனச்செருக்கால் |
| 3007 | தகுதியான் | பொறுமையால் |
| 3008 | இறந்தார் | வரம்பு கடந்தவர் |
| 3009 | இன்னா | தீய |
| 3010 | நோற்கிற்பவர் | பொறுப்பவர் |
இலக்கணக் குறிப்புகள் (3011 - 3020)| எண் | சொல் | இலக்கணக் குறிப்பு |
|---|
| 3011 | உண்ணாது | வினையெச்சம் |
| 3012 | பொறுத்தல் | தொழிற்பெயர் |
| 3013 | அகழ்வார், இகழ்வார் | வினையாலணையும் பெயர்கள் |
| 3014 | நன்று | குறிப்பு வினைமுற்று |
| 3015 | விருந்து | பண்பாகுபெயர் |
| 3016 | நீங்காமை | எதிர்மறைத் தொழிற்பெயர் |
| 3017 | போற்றி, பொதிந்து | வினையெச்சம் |
| 3018 | தற்பிறர் | ஏழாம் வேற்றுமைத்தொகை |
| 3019 | அறன், திறன் | ஈற்றுப் போலிகள் |
| 3020 | இன்னாச்சொல் | ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
| 3021 | மாநகர் | உரிச்சொற்றொடர் |
தொகை மற்றும் அணியியல் (3022 - 3027)| எண் | சொல்/விளக்கம் | வகை/பொருள் |
|---|
| 3022 | உருவகம் | உவமானமும் உவமேயமும் வேறு அல்ல, இரண்டும் ஒன்றே எனத் தோன்றும்படி கூறுவது |
| 3023 | கயல்விழி | உவமைத்தொகை |
| 3024 | பவளவாய் பேசினாள் | அன்மொழித்தொகை |
| 3025 | ஆடுகொடி | வினைத்தொகை |
| 3026 | பாய்புலி | வினைத்தொகை |
| 3027 | அலைகடல் | வினைத்தொகை |
வேற்றுமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (3028 - 3059)வடமொழிச் சொற்கள்:| எண் | வேற்றுமொழிச் சொல் | தமிழ்ச் சொல் |
|---|
| 3028 | அபிப்பிராயம் (சமஸ்கிருதம்) | கருத்து |
| 3029 | ஆனந்தம் | மகிழ்ச்சி |
| 3030 | தினசரி | நாள்தோறும் |
| 3031 | தைரியம் | துணிவு |
| 3032 | பூஜை | வழிபாடு |
உருதுச் சொற்கள்:| எண் | வேற்றுமொழிச் சொல் | தமிழ்ச் சொல் |
|---|
| 3033 | பதில் | விடை |
| 3034 | பலே | நன்று |
| 3035 | பேட்டி | நேர்காணல் |
| 3036 | பைசா | காசு |
| 3037 | அசல் | முதல் |
| 3038 | குஷி | மகிழ்ச்சி |
அரபிச் சொற்கள்:| எண் | வேற்றுமொழிச் சொல் | தமிழ்ச் சொல் |
|---|
| 3039 | வக்கில் | வழக்குரைஞர் |
| 3040 | மக்கர் | இடைஞ்சல் |
| 3041 | மாமூல் | பழையபடி |
பிற மொழிச் சொற்கள்:| எண் | வேற்றுமொழிச் சொல் | தமிழ்ச் சொல் |
|---|
| 3042 | கில்லாடி (மராத்தி) | கொடியோன் |
| 3043 | அபாண்டம் | வீண்பழிக்கூற்று |
| 3044 | பேட்டை | புறநகர் |
| 3045 | மாலுமி (பாரசீகம்) | நாவாயோட்டி |
ஆங்கிலச் சொற்கள்:| எண் | ஆங்கிலச் சொல் | தமிழ்ச் சொல் |
|---|
| 3046 | Document | ஆவணம் |
| 3047 | Index | அகரவரிசை (சுட்டி) |
| 3048 | Jurisdiction | அதிகார எல்லை |
| 3049 | Passport | கடவுச்சீட்டு |
| 3050 | Visa | நுழைவு இசைவு |
| 3051 | Toll gate | சுங்கச் சாவடி |
| 3052 | E-mail | மின்னஞ்சல் |
| 3053 | Website | இணையத்தளம் |
| 3054 | Bulletin | சிறப்புச் செய்தி இதழ் |
| 3055 | Deadline | குறித்தகாலம் |
| 3056 | Editorial | தலையங்கம் |
| 3057 | Fake News | பொய்ச்செய்தி |
| 3058 | Layout | செய்தித்தாள் வடிவமைப்பு |
| 3059 | Green Proof | திருத்தப்படாத அச்சுப்படி |
இளமைப் பெயர்கள் (3060 - 3066)| எண் | விலங்கு | இளமைப் பெயர் |
|---|
| 3060 | யானை | யானைக்கன்று |
| 3061 | குரங்கு | குரங்குக்குட்டி |
| 3062 | சிங்கம் | சிங்கக்குருளை |
| 3063 | புலி | புலிப்பறழ் |
| 3064 | எருமை | எருமைக்கன்று |
| 3065 | பன்றி | பன்றிக்குட்டி |
| 3066 | மான் | மான்கன்று |
வாழிடப் பெயர்கள் (3067 - 3070)| எண் | விலங்கு | வாழிடம் |
|---|
| 3067 | ஆடு | ஆட்டுப்பட்டி |
| 3068 | குதிரை | குதிரைக்கொட்டில் |
| 3069 | மாடு | மாட்டுத்தொழுவம் |
| 3070 | கோழி | கோழிப்பண்ணை |
ஒலி மரபுகள் (3071 - 3074)| எண் | விலங்கு/பறவை | ஒலி மரபு |
|---|
| 3071 | நரி | ஊளையிடும் |
| 3072 | குயில் | கூவும் |
| 3073 | மயில் | அகவும் |
| 3074 | கோழி | கொக்கரிக்கும் |
தாவரங்களின் பகுதிகள் (3075 - 3078)| எண் | தாவரம் | இலை/பகுதிப் பெயர் |
|---|
| 3075 | ஈச்ச மரம் | ஈச்ச ஓலை |
| 3076 | பனை | பனையோலை |
| 3077 | கமுகு (பாக்கு) | கமுகங்கூந்தல் |
| 3078 | நெல் | நெற்றாள் |
பிஞ்சு வகைகள் (3079 - 3084)| எண் | தாவரம் | இளநிலை (பிஞ்சு) |
|---|
| 3079 | அவரைக்காய் | அவரைப்பிஞ்சு |
| 3080 | வாழை | வாழைக்கச்சல் |
| 3081 | வெள்ளரி | வெள்ளரிப்பிஞ்சு |
| 3082 | தென்னை | தென்னங்குரும்பை |
| 3083 | முருங்கை | முருங்கைப்பிஞ்சு |
| 3084 | மாமரம் | மாவடு |
இடப்பெயர்கள் மற்றும் கூட்டப் பெயர்கள் (3085 - 3092)| எண் | தொகுப்பு | பெயர் |
|---|
| 3085 | கம்புகள் நிறைந்த பகுதி | கம்பங்கொல்லை |
| 3086 | சவுக்கு மரங்கள் நிறைந்த பகுதி | சவுக்குத்தோப்பு |
| 3087 | தேயிலைச் செடிகள் நிறைந்த பகுதி | தேயிலைத்தோட்டம் |
| 3088 | ஆடுகளின் கூட்டம் | ஆட்டு மந்தை |
| 3089 | திராட்சையின் கூட்டம் | திராட்சைக்குலை |
| 3090 | வைக்கோலின் தொகுப்பு | வைக்கோற்போர் |
| 3091 | பசுக்களின் தொகுப்பு | பசுநிரை |
| 3092 | யானைகளின் கூட்டம் | யானைக்கூட்டம் |
வினை மரபுச் சொற்கள் (3093 - 3099)| எண் | பொருள் | வினை மரபுச் சொல் |
|---|
| 3093 | சோறு | சோறு உண் |
| 3094 | நீர் | நீர் குடி |
| 3095 | பால் | பால் பருகு |
| 3096 | தயிர் | தயிர் கடை |
| 3097 | கூரை | கூரை வேய் |
| 3098 | விளக்கு | விளக்கை ஏற்று |
| 3099 | கவிதை | கவிதை இயற்று |
பழமொழி (3100)| எண் | ஆங்கிலப் பழமொழி | தமிழ்ப் பழமொழி |
|---|
| 3100 | In a fiddler's house all are dancers | கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் |
0 Comments