TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-80
தலைப்பு: பொது அறிவு வினா-விடைத் தொகுப்பு (2901 - 3000)
இலக்கியம், மொழியியல், கவிஞர்கள்:
- 2901. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை எழுதியவர்: கால்டுவெல்.
- 2902. கால்டுவெல் எந்த நாட்டைச் சேர்ந்தவர்: அயர்லாந்து.
- 2903. "தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்று பாடியவர்: நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கனார்.
- 2904. "காந்தியக் கவிஞர்" என்று அழைக்கப்படுபவர்: வே. இராமலிங்கனார்.
- 2905. "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்ற பாடலை இயற்றியவர்: வே. இராமலிங்கனார்.
- 2906. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக இருந்தவர்: வே. இராமலிங்கனார்.
- 2907. "மலைக்கள்ளன்", "நாமக்கல் கவிஞர் பாடல்கள்", "என் கதை", "சங்கொலி" ஆகிய நூல்களை எழுதியவர்: வே. இராமலிங்கனார்.
- 2908. "பகுத்தறிவுக்கவிராயர்" என்று புகழப்படுபவர்: உடுமலை நாராயணகவி.
- 2909. உடுமலை நாராயணகவி புகழ் பெற்ற துறை: திரைப்படப் பாடல் மற்றும் நாடக ஆசிரியர்.
- 2910. "ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல" என்ற பாடலை எழுதியவர்: உடுமலை நாராயணகவி.
- 2911. பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்: பரணி.
- 2912. தமிழில் தோன்றிய முதல் பரணி நூல்: கலிங்கத்துப் பரணி.
- 2913. கலிங்கத்துப் பரணியை இயற்றியவர்: சயங்கொண்டார்.
- 2914. சயங்கொண்டார் யாருடைய அவைப்புலவர்: முதலாம் குலோத்துங்கச் சோழன்.
- 2915. "பரணிக்கோர் சயங்கொண்டார்" என்று சயங்கொண்டாரைப் புகழ்ந்தவர்: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.
- 2916. கலிங்கத்துப் பரணி கொண்டுள்ள தாழிசைகளின் எண்ணிக்கை: 599 தாழிசைகள்.
- 2917. "தென்தமிழ்த் தெய்வப்பரணி" என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர்: ஒட்டக்கூத்தர்.
- 2918. "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படுபவர்: வ.உ.சிதம்பரனார்.
- 2919. வ.உ.சிதம்பரனார் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய ஆண்டு: 1906 (அக்டோபர் 16).
- 2920. வ.உ.சிதம்பரனார் தொடங்கிய கப்பல் நிறுவனத்தின் பெயர்: சுதேசி நாவாய்ச் சங்கம்.
- 2921. வ.உ.சிதம்பரனார் வாங்கிய இரண்டு கப்பல்களின் பெயர்கள்: காலியா, லாவோ.
- 2922. சுதேசிக் கப்பல் இயக்கப்பட்ட இரு நகரங்கள்: தூத்துக்குடி - கொழும்பு.
- 2925. "சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும்" என்று கூறியவர்: பின்கே (ஆங்கிலேய நீதிபதி).
- 2926. வ.உ.சி சிறையில் இழுத்த செக்கு தற்போது பாதுகாக்கப்படும் இடம்: சென்னை காந்தி மண்டபம்.
- 2927. "மெய்யறம்", "மெய்யறிவு" ஆகிய நூல்களை இயற்றியவர்: வ.உ.சிதம்பரனார்.
- 2928. வ.உ.சிதம்பரனார் ஆலன் என்பவரின் எந்த நூலை "மனம்போல் வாழ்வு" என்று மொழிபெயர்த்தார்.
- 2923. "வந்தே மாதரம்" என்ற சுதேசி மந்திரத்தை வங்கத்தில் முழங்கியவர்: பங்கிம் சந்திர சட்டர்ஜி.
- 2924. "சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்" என்று கூறியவர்: பாலகங்காதர திலகர்.
- 2929. "சுதேசிமித்திரன்" என்ற இதழைத் தொடங்கியவர்: ஜி. சுப்பிரமணிய ஐயர்.
- 2930. "வீரபாண்டிய கட்டபொம்மன்" ஆண்ட பகுதி: பாஞ்சாலங்குறிச்சி.
- 2931. பாஞ்சாலங்குறிச்சியில் யாருடைய நாயைக் கண்டு முயல் விரட்டும் என்று கூறுவர்: வேட்டை நாய்.
- 2932. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஆண்டு: 1908 அக்டோபர் 30.
- 2933. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர்: பசும்பொன் (இராமநாதபுரம் மாவட்டம்).
- 2934. முத்துராமலிங்கத் தேவரின் பெற்றோர்கள்: உக்கிரபாண்டித் தேவர், இந்திராணி அம்மையார்.
- 2935. முத்துராமலிங்கத் தேவருக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்: குறைவற வாசித்தான் பிள்ளை.
- 2936. முத்துராமலிங்கத் தேவர் சொற்பொழிவாற்றும் திறன் பெற்ற இரு மொழிகள்: தமிழ், ஆங்கிலம்.
- 2937. முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
- 2938. "நேதாஜி" என்னும் பெயரில் வார இதழைத் தொடங்கியவர்: முத்துராமலிங்கத் தேவர்.
- 2939. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வருகை தந்த ஆண்டு: 1939 (செப்டம்பர் 6).
- 2940. "தேசியம் உடல், தெய்வீகம் உயிர்" எனக் கருதி வாழ்ந்தவர்: முத்துராமலிங்கத் தேவர்.
- 2941. "தென்னாநாட்டுச் சிங்கம்" என்று தேவரைப் புகழ்ந்தவர்: அறிஞர் அண்ணா.
- 2942. முத்துராமலிங்கத் தேவர் பேசத் தொடங்கியதும் "சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது" என்று புகழ்ந்தவர்: அறிஞர் அண்ணா.
- 2943. "சுத்தத் தியாகி" என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்: முத்துராமலிங்கத் தேவர்.
- 2944. முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உறையாற்றிய இடம்: சாயல்குடி.
- 2945. சாயல்குடியில் தேவர் யாருடைய பெருமையைக் குறித்து மூன்று மணி நேரம் பேசினார்: விவேகானந்தர்.
- 2946. தேவரின் பேச்சைக் கேட்ட பெருந்தலைவர்: காமராசர்.
- 2947. குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை தேவர் நடத்திய இடம் மற்றும் ஆண்டு: கமுதி (1934).
- 2948. குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு: 1948.
- 2949. ஜமீன்தார் ஒழிப்பு மாநாட்டை தேவர் நடத்திய இடம்: மதுரை.
- 2950. பாரத மாதா கூட்டுறவுப் பண்ணையை நிறுவியவர்: முத்துராமலிங்கத் தேவர்.
- 2951. முத்துராமலிங்கத் தேவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகள்: 1937, 1946, 1952, 1957, 1962.
- 2952. முத்துராமலிங்கத் தேவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகள்: 1952, 1957.
- 2953. முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த நாள்கள்: 20075 நாள்கள்.
- 2954. முத்துராமலிங்கத் தேவர் சிறையில் கழித்த நாள்கள்: 4000 நாள்கள்.
- 2955. முத்துராமலிங்கத் தேவர் மறைந்த ஆண்டு: 1963 அக்டோபர் 30.
- 2956. "கப்பலோட்டிய தமிழன்" நூலை எழுதியவர்: ம.பொ. சிவஞானம்.
- 2957. "சிலம்புச் செல்வர்" என்று போற்றப்படுபவர்: ம.பொ. சிவஞானம்.
- 2958. "ஜீவகாருண்ய ஒழுக்கம்", "மனுமுறை கண்ட வாசகம்" ஆகிய நூல்களை எழுதியவர்: இராமலிங்க அடிகளார்.
- 2959. இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ள தலைப்பு: திருவருட்பா.
- 2960. "கற்றார் முன் கல்விக் கரை கண்டார்" என்ற பழமொழி நானூற்றுப் பாடலை இயற்றியவர்: முன்றுறை அரையனார்.
- 2961. முன்றுறை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்: கி.பி. நான்காம் நூற்றாண்டு.
- 2962. பழமொழி நானூறு நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை: 400 பாடல்கள்.
- 2963. "ஆற்றுணா வேண்டுவது இல்" என்பதன் பொருள்: கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்.
- 2964. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று திருநெல்வேலியைப் புகழ்ந்தவர்: திருஞானசம்பந்தர்.
- 2965. "தண்பொருநைப் புனல்நாடு" என்று திருநெல்வேலியைப் புகழ்ந்தவர்: சேக்கிழார்.
- 2966. திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்புப் பெயர்: வேணுவனம் (மூங்கில் காடு).
- 2967. திருநெல்வேலிப் பகுதியை ஆண்ட மன்னர்கள்: பாண்டிய மன்னர்கள்.
- 2968. திருநெல்வேலி எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது: தாமிரபரணி.
- 2969. தாமிரபரணி நதியின் பழைய பெயர்: தண்பொருநை.
- 2970. தாமிரபரணி ஆற்றின் கிளை நதிகள்: பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி.
- 2971. திருநெல்வேலி மாவட்டத்தின் பொருளாதாரம் எதனை அடிப்படையாகக் கொண்டது: உழவுத்தொழில் (வேளாண்மை).
- 2972. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் நகரம்: பாளையங்கோட்டை.
- 2973. இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுபவை: திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை.
- 2974. பொதிகை மலையில் வாழ்ந்ததாகக் கருதப்படும் முனிவர்: அகத்தியர்.
- 2975. "திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்" என்ற பாடலை எழுதியவர்: பாரதிதாசன்.
- 2976. பாரதிதாசனின் "தமிழ் இலக்கணம்" குறித்த நூல்: தமிழியக்கம்.
- 2977. முத்துக்கமலம், செங்கழுநீர், தாமரை என்பன தொடர்புடையவை: நீர்நிலைப் பூக்கள்.
- 2978. "கவிஞாயிறு" என்று சிறப்பிக்கப்படுபவர்: தாராபாரதி.
- 2979. தாராபாரதியின் இயற்பெயர்: ராதாகிருஷ்ணன்.
- 2980. "புதிய விடியல்கள்", "இது எங்கள் கிழக்கு" ஆகிய நூல்களின் ஆசிரியர்: தாராபாரதி.
- 2981. "விரல்நுனி வெளிச்சங்கள்" என்ற நூலின் ஆசிரியர்: தாராபாரதி.
- 2982. காந்தியடிகள் முதன்முதலாகச் சென்னை வந்த ஆண்டு: 1919 (பிப்ரவரி).
- 2983. ரௌலட் சட்டத்திற்கு எதிராகக் காந்தியடிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய இடம்: இராஜாஜியின் வீட்டில்.
- 2984. காந்தியடிகள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆண்டு: 1921 (செப்டம்பர்).
- 2985. காந்தியடிகள் எந்த நகரத்திலிருந்து மதுரைக்குச் செல்லும்போது தனது உடையை மாற்றிக்கொண்டார்: திருச்சியிலிருந்து மதுரைக்கு.
- 2986. கானாடுகாத்தான் என்ற ஊர் உள்ள மாவட்டம்: சிவகங்கை மாவட்டம்.
- 2987. காந்தியடிகளை மிகவும் கவர்ந்த தமிழ் நூல்: திருக்குறள்.
- 2988. காந்தியடிகளைக் கவர்ந்த ஆங்கில நூல்: லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்'.
- 2989. காந்தியடிகள் ஜி.யு.போப் எழுதிய எந்த நூலைப் படித்து மகிழ்ந்தார்: தமிழ்க் கையேடு.
- 2990. 1937 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர்: காந்தியடிகள்.
- 2991. அந்த இலக்கிய மாநாட்டிற்கு வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தவர்: உ.வே. சாமிநாதர்.
- 2992. "இந்தப் பெரியவரின் அடிநிழலிலிருந்து தமிழ் கற்க வேண்டும்" என்று காந்தியடிகள் யாரைக் குறிப்பிட்டார்: உ.வே. சாமிநாதர்.
- 2993. வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு: 1730.
- 2994. வேலுநாச்சியாரின் தந்தையார்: இராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி.
- 2995. வேலுநாச்சியாரின் கணவர்: சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர்.
- 2996. முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட போர்: காளையார்கோவில் போர்.
- 2997. வேலுநாச்சியார் படையைத் திரட்ட தங்கியிருந்த கோட்டை: திண்டுக்கல் கோட்டை.
- 2998. வேலுநாச்சியாருக்கு உதவிய மைசூர் மன்னர்: ஐதர் அலி.
- 2999. வேலுநாச்சியாரின் தளபதிகள்: மருது சகோதரர்கள்.
- 3000. வேலுநாச்சியாரின் அமைச்சர்: தாண்டவராயர்.


0 Comments