TNPSC TRB TET இந்தியா சுதந்திரம் பெற்றது வரை 100 வினா-விடை | History Part-14
ஐரோப்பியரின் வருகை மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் - கேள்விகள் மற்றும் பதில்கள்
துருக்கியர் மற்றும் போர்ச்சுக்கீசியர்
- துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு: கி.பி. 1453
- இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்க மிகவும் ஆர்வமாக இருந்த ஐரோப்பிய நாடு: போர்ச்சுகல்
- 'மாலுமி ஹென்றி' என அழைக்கப்பட்டவர்: போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி
- பார்த்தலோமியா டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த ஆண்டு: 1487
- வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை அடைந்த ஆண்டு: கி.பி. 1498
- கள்ளிக்கோட்டையில் வாஸ்கோடகாமாவை வரவேற்ற மன்னர்: மன்னர் சாமரின்
- 1500 ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையை வந்தடைந்த இரண்டாவது போர்ச்சுக்கீசிய மாலுமி: பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல்
- போர்ச்சுகீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம்: கொச்சின்
- வாஸ்கோடகாமா கொச்சியில் காலமான ஆண்டு: டிசம்பர் 1524
- இந்தியாவில் இருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் ஆளுநர்: பிரான்சிஸ்கோ அல்மெய்டா
- பிரான்சிஸ்கோ அல்மெய்டா பின்பற்றிய கொள்கை: நீலநீர்க் கொள்கை
- இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்: அல்போன்ஸா -டி-அல்புகர்க்
- அல்போன்ஸா -டி-அல்புகர்க் கோவாவைக் கைப்பற்றியவர்: பிஜப்பூர் சுல்தானிடமிருந்து
- போர்ச்சுகீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றியவர்: நினோ-டி-குன்கா
- இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தியவர்கள்: போர்ச்சுக்கீசியர்
- போர்த்துக்கீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்ட ஆண்டு: 1556
- டச்சுக்காரர்கள் தங்களின் வர்த்தக மையத்தை முதலில் நிறுவிய இடம்: மசூலிப்பட்டினம்
- டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் கட்டிய கோட்டை: கெல்டிரியா கோட்டை
- ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்திற்கு வர்த்தகம் செய்ய அனுமதி பட்டயம் வழங்கியவர்: இங்கிலாந்து இராணி எலிசபெத்
- ஜஹாங்கீர் அவைக்கு சலுகைகளைப் பெற வந்த ஆங்கிலேய மாலுமி: வில்லியம் ஹாக்கின்ஸ்
- ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை 1611-ல் நிறுவிய இடம்: மசூலிப்பட்டினம்
- பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் மெட்ராசை யாரிடமிருந்து குத்தகைக்குப் பெற்றார்: சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர்
- சென்னையில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிறுவிய கோட்டை: புனித ஜார்ஜ் கோட்டை
- சுதாநுதி என்ற இடத்தில் வர்த்தகமையத்தை நிறுவியவர்: ஜாப் சார்னாக்
- டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கியவர்: டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன்
- டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாக விளங்கிய பகுதி: செராம்பூர்
- தரங்கம்பாடியை டேனியர்கள் அழைத்த பெயர்: டானஸ்பெர்க்
- தரங்கம்பாடியில் ஒரு அச்சுக் கூடத்தை நிறுவியவர்: சீகன்பால்கு
- பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கியவர்: மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட்
- இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை சூரத் நகரில் நிறுவியவர்: கரோன்
- 1742-ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டவர்: ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே
- நிலையான நில வருவாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்: காரன்வாலிஸ் பிரபு
- இரயத்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர்: தாமஸ் மன்றோ
- மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர்: வில்லியம் பெண்டிங் பிரபு
- சந்தால் கலகம் நடைபெற்ற ஆண்டு: 1855-1856
- இண்டிகோ கலகம் (அவுரி புரட்சி) நடைபெற்ற ஆண்டு: 1859-1860
- தக்காண கலகம் நடைபெற்ற ஆண்டு: 1875
- சம்பரான் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு: 1917-1918
- பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு மற்றும் நாள்: 1757 ஜூன் 23
- பிளாசிப்போரில் வெற்றி பெற்ற படை: ஆங்கிய கிழக்கிந்திய கம்பெனியின் படைகள்
- பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு மற்றும் நாள்: 1764 அக்டோபர் 22
- பக்சார் போர் முடிவுக்கு வரக் காரணமான உடன்படிக்கை: அலகாபாத் உடன்படிக்கை
- வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர்: இராபர்ட் கிளைவ்
- கர்நாடகப் போர்கள் நடைபெற்ற ஆண்டுகள்: 1746 முதல் 1763 வரை
- முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வரக் காரணமான உடன்படிக்கை: அய்-லா-சப்பேல் உடன்படிக்கை
- மூன்றாம் கர்நாடகப் போர் முடிவுக்கு வரக் காரணமான உடன்படிக்கை: பாரிஸ் உடன்படிக்கை
- அடையாறு போர் நடைபெற்ற ஆண்டு: 1746
- ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு மற்றும் நாள்: 1749 ஆகஸ்ட் 3
- வந்தவாசிப் போர் நடைபெற்ற ஆண்டு: 1760
- வந்தவாசிப் போரில் பிரெஞ்சுப் படைக்கு தலைமையேற்றவர்: லாலி
- முதல் ஆங்கிலேய மைசூர் போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை: மதராஸ் உடன்படிக்கை
- இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்ற ஆண்டுகள்: 1780-1784
- மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை: ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை
- நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு: 1799
- முதல் ஆங்கிலேய மராத்திய போர் நடைபெற்ற ஆண்டுகள்: 1775-1782
- சிவில் சர்வீஸ் என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியது: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி
- அரசு ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சியை அறிமுகப்படுத்திய இந்திய கவர்னர் ஜெனரல்: வெல்லெஸ்லி பிரபு
- போட்டித்தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய சட்டம்: 1833-ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
- ஐ.சி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்: சத்தியேந்திரநாத் தாகூர்
- இந்திய ஆட்சிப் பணி சட்டம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஆண்டு: 1861-ஆம் ஆண்டு
- இந்தியாவில் முதன்முதலில் காவல்துறையை உருவாக்கியவர்: காரன்வாலிஸ் பிரபு
- சிவில் நீதிமன்றம் ஆங்கிலேயர் காலத்தில் அழைக்கப்பட்ட பெயர்: திவானி அதாலத்
- கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்ட சட்டம்: 1773-ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டம்
- ஜூரி முறையை வங்காளத்தில் கொண்டு வந்தவர்: வில்லியம் பெண்டிங் பிரபு
- மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி: சர் திருவாரூர் முத்துச்சாமி
- துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்: வெல்லெஸ்லி பிரபு
- துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு: ஹைதராபாத்
- வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்: டல்ஹௌசி பிரபு
- இரட்டை ஆட்சி முறையை ஒழித்தவர்: வாரன் ஹேஸ்டிங்ஸ்
- வங்காளத்தின் தலைநகராக கல்கத்தா மாறிய ஆண்டு: 1772
- ரோஹில்லா போர் நடைபெற்ற ஆண்டு: 1774
- பிட் இந்தியச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு: 1784
- தம்மை "வங்கப்புலி" என்று கூறிக்கொண்டவர்: வெல்லஸ்லிப் பிரபு
- பசீன் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு: 1802
- சகௌலி உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு: 1816
- 1824-ல் பிண்டாரிகளை ஒடுக்கியவர்: ஹேஸ்டிங்ஸ் பிரபு
- பம்பாய் மாகாணத்தை உருவாக்கியவர்: ஹேஸ்டிங்ஸ் பிரபு
- இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர்: வில்லியம் பெண்டிங் பிரபு
- தலைமை ஆளுநரின் ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்ட முதல் சட்ட உறுப்பினர்: டி.பி.மெக்காலே
- சதிமுறையை ஒழித்தவர்: வில்லியம் பெண்டிங் பிரபு
- தக்கர்களை ஒடுக்கும் பணியைத் திறமையுடன் செய்ததால் "தக்கீ சிலீமேன்" என்று அழைக்கப்பட்டவர்: கர்னல் சீலிமேன்
- இந்தியாவின் வரைபடத்தையே மாற்றியமைத்தவர்: டல்ஹௌசி பிரபு
- பம்பாயிலிருந்து தானே வரை செல்லும் முதல் இரயில் பாதை தொடங்கப்பட்ட ஆண்டு: 1853
- தபால் தந்தி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்: டல்ஹௌசி பிரபு
- "இந்தியாவின் அறிவுபட்டயம்" என கருதப்படுவது: சர் சார்லஸ் உட் என்பவரின் 1854-ஆம் ஆண்டு கல்வி அறிக்கை
- மதுரையில் பாளையக்காரர் முறையை ஏற்படுத்தியவர்: விஸ்வநாதர்
- தென்னிந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தைத் துவக்கிய பெருமைக்கு உரியவர்: பூலித்தேவர்
- வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த பாளையத்தைச் சேர்ந்தவர்: பாஞ்சாலங்குறிச்சி
- கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு கட்டவேண்டிய நிலுவை கப்பத்தொகை: 3310 பகோடாக்கள்
- கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கோட்டை: கயத்தாறு கோட்டை
- சிவகங்கையின் இராணி: வேலுநாச்சியார்
- இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் (இந்தியப்) பெண்ணரசி: வேலுநாச்சியார்
- "சிவகங்கை சிங்கம்" என அழைக்கப்பட்டவர்: சின்ன மருது
- திருச்சிராப்பள்ளி பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு: 1801
- மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம்: திருப்பத்தூர் கோட்டை
- தீரன் சின்னமலையின் இயற்பெயர்: தீர்த்தகிரி
- தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட கோட்டை: சங்ககிரி கோட்டை
- வேலூர் கலகம் நடைபெற்ற ஆண்டு: 1806
- வேலூர் கலகத்தின் போது புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்திய இராணுவத் தளபதி: அக்னியூ
- 1806ல் நடந்த வேலூர் கலகத்தை 1857ல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி எனக் குறிப்பிட்டவர்: வி.டி.சவார்க்கர்


0 Comments