TNPSC TRB TET இந்தியா சுதந்திரம் பெற்றது வரை 100 வினா-விடை | History Part-19


TNPSC TRB TET இந்தியா சுதந்திரம் பெற்றது வரை 100 வினா-விடை | History Part-19
ஐரோப்பியரின் வருகையும் ஆதிக்கமும்

பொதுவான தகவல்கள்
  1. புதிய கடல்வழித் தேடல்: துருக்கியர்களால் நிலவழி மூடப்பட்ட பிறகு, ஐரோப்பிய நாடுகள் புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்க முற்பட்டன.
  2. பார்த்தலோமியா டயஸ்: 1487 ஆம் ஆண்டு கடற்பயணத்தின் மூலம் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார்.
  3. வாஸ்கோடகாமா: தென்னாப்பிரிக்காவிலிருந்து மொசாம்பிக் பகுதிக்குத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
  4. பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல்: வாஸ்கோடகாமாவின் வழியைப் பின்பற்றி 1500 ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.
போர்ச்சுக்கீசிய ஆதிக்கம்
5.  பிரான்சிஸ்கோ அல்மெய்டா: இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையைப் பலப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்.
6.  அல்போன்ஸா-டி-அல்புகர்க்: 1510 நவம்பரில் கோவாவைக் கைப்பற்றினார்.
7.  போர்ச்சுக்கீசிய ஆதிக்க வீழ்ச்சி: 17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் போர்ச்சுக்கீசிய அதிகாரம் வீழ்ச்சியடைந்தது.
8.  டச்சுக்காரர்கள்: இந்தியாவில் தங்களின் ஆதிக்கத்தை போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து நிலைநாட்டினர்.

ஆங்கிலேயரின் வருகை
9.  அனுமதிப் பட்டயம்: இங்கிலாந்து இராணி எலிசபெத் கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு அனுமதிப் பட்டயம் வழங்கினார்.
10. முதல் வணிக மையம்: ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.
11. புனித ஜார்ஜ் கோட்டை: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்டது.

மற்ற ஐரோப்பிய நிறுவனங்கள்
12. டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம்: டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் வெளியிட்ட பட்டயத்தால் உருவாக்கப்பட்டது.
13. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்: 1664-ல் உருவாக்கப்பட்டது.-----கிராம சமூகம், வாழ்க்கை முறை மற்றும் விவசாயிகள் புரட்சிகள்
  1. காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய பொருளாதாரம்: இந்தியப் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்திருந்தது.
  2. மகல்வாரி திட்டம்: வில்லியம் பெண்டிங் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  3. சந்தால் கலகம்: 1855-1956 காலகட்டத்தில் நடைபெற்றது.
  4. அவுரி புரட்சி (இண்டிகோ கலகம்): அவுரி புரட்சியின் மற்றொரு பெயர் இண்டிகோ கலகம்.
  5. பஞ்சாப் விவசாயிகள் இயக்கம்: 1890-1900 காலகட்டத்தில் நடைபெற்றது.
வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
  1. புதிய கடல்வழி கண்டுபிடிப்பு: 1498-ல் புதிய கடல் வழியைக் கண்டுபிடித்த மாலுமி போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் (வாஸ்கோடகாமா).
  2. பிளாசிப் போருக்குப் பின் ஆங்கிலேயர் ஆதிக்கம்: பிளாசிப் போரின் வெற்றிக்குப் பின் ஆங்கிலேயரின் ஆதிக்கம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
  3. பக்சார் போரின் முடிவு: 1765 பிப்ரவரி 20-ல் நடந்த அலகாபாத் உடன்படிக்கையின் மூலம் பக்சார் போர் முடிவுக்கு வந்தது.
  4. அலகாபாத் உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள்: இராபர்ட் கிளைவ், சுஜா-உத்-தௌலா மற்றும் இரண்டாம் ஷா-ஆலம்.
  5. வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறை: இராபர்ட் கிளைவ் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்தார்.
கர்நாடகப் போர்கள் & மைசூர் போர்கள்

கர்நாடகப் போர்கள்
  1. போர்களின் விளைவு: கர்நாடகப் போர்களின் விளைவாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் அதிகாரம் வலுப்பெற்றது.
  2. முதல் கர்நாடகப் போர் காரணம்: ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்.
  3. இரண்டாம் கர்நாடகப் போர் காரணம்: கர்நாடகம் மற்றும் ஐதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமைப் பிரச்சனை.
  4. மூன்றாம் கர்நாடகப் போர் காரணம்: ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப் போர்.
  5. அடையாறு போர்: சாந்தோம் என்ற இடத்தில் நடைபெற்றது.
  6. அடையாறு போரில் வெற்றி: நன்கு பயிற்சி பெற்ற ஐரோப்பிய படை இந்தியப் படையை வென்றது.
  7. ஆம்பூர் போர்: இப்போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட கர்நாடக நவாப் அன்வர்தீன் ஆவார்.
  8. வந்தவாசிப் போர்: ஜெனரல் அயர் கூட் தலைமையிலான ஆங்கிலேயத் தளபதி பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்தார்.
மைசூர் போர்கள்
9.  முதல் ஆங்கிலேய மைசூர் போர்: மதராஸ் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
10. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர்: மங்களூர் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
11. மூன்றாம் மைசூர் போர்: ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
12. நான்காம் மைசூர் போர்: திப்பு சுல்தான் மரணமடைந்தார்.
13. முதல் ஆங்கிலேய மராத்திய போர்: 1775-1782 காலகட்டத்தில் நடைபெற்றது.-----இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு

நிர்வாக அமைப்பு
  1. நிர்வாக நிறுவனங்கள்: ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு நான்கு முதன்மை நிறுவனங்களாக இயங்கியது.
அரசு ஊழியர் நியமனம் (ஐ.சி.எஸ்)
2.  வில்லியம் கோட்டையில் கல்லூரி: 1800-இல் வெல்லெஸ்லி பிரபுவால் நிறுவப்பட்டது.
3.  கிழக்கிந்தியக் கல்லூரி: 1806-இல் இங்கிலாந்தில் உள்ள ஹெய்லிபரி என்ற இடத்தில் நிறுவப்பட்டது.
4.  போட்டித்தேர்வு கருத்து: 1833 பட்டயச் சட்டம் போட்டித்தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது.
5.  திறந்த முறையிலான போட்டித்தேர்வு: 1853-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
6.  போட்டித்தேர்வு உறுதி: 1858-ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் திறந்த முறையிலான போட்டித்தேர்வு முறையை உறுதி செய்தது.
7.  இந்திய ஆட்சிப் பணி சட்டம்: பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் 1861-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
8.  வயது வரம்பு குறைப்பு: 1876-இல் ஐ.சி.எஸ் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 19 ஆகக் குறைக்கப்பட்டது.
9.  முதல் இந்திய வெற்றியாளர்: 1863-இல் ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் சத்தியேந்திரநாத் தாகூர்.
10. ராயல் கமிஷன்: இஸ்லிங்டன் பிரபு தலைமையிலான ராயல் கமிஷன் 1912-இல் நிறுவப்பட்டது.
11. அரசு பணியாளர் தேர்வாணையம்: லீ தலைமையிலான குழு இதனை நிறுவப் பரிந்துரைத்தது.
12. தேர்வாணையங்கள் உருவாக்கம்: 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி மற்றும் மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் உருவாக வழிவகை செய்தது.

இராணுவம் மற்றும் காவல்துறை
13. சிப்பாய் இராணுவம்: கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது.
14. மாவட்ட கண்காணிப்பாளர் பதவி: 1808-இல் நியமிக்கப்பட்டது.

நீதித்துறை
15. நீதி வழங்கும் அதிகாரம்: 1772-இல் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு நீதி வழங்கும் அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனிக்கு வந்தது.
16. குற்றவியல் நீதிமன்றம்: பௌஜ்தாரி அதாலத் என்று அழைக்கப்பட்டது.
17. உச்சநீதிமன்றங்கள்:
*   கல்கத்தா: 1773-ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின்படி அமைக்கப்பட்டது.
*   மதராஸ்: 1801-இல் நிறுவப்பட்டது.
*   பம்பாய்: 1823-இல் நிறுவப்பட்டது.
18. வில்லியம் கோட்டையின் முதல் நீதிபதி: சர் எலிஜா இம்பே.

வாரிசு இழப்புக் கொள்கை
19. அறிமுகம்: டல்ஹௌசி பிரபுவால் 1848-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
20. ஜான்சி இணைப்பு: 1853-இல் வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் ஜான்சி இணைக்கப்பட்டது.

வெற்றிக்கு உதவியவை
21. வெற்றிக்குக் காரணம்: மிகப்பெரிய கடல் வலிமை மற்றும் நெசவுத் தொழில் வளர்ச்சி இந்தியாவில் ஆங்கிலேயர் வெற்றி பெற உதவியது.-----தலைமை ஆளுநர்களின் சீர்திருத்தங்கள்

வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-ல் ஆளுநர்)
  1. பதவியேற்பு: வணிகக்குழு இவரை 1772-ஆம் ஆண்டு வில்லியம் கோட்டையின் ஆளுநராக நியமித்தது.
  2. கருவூல மாற்றம்: கருவூலத்தை மூர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றியவர்.
  3. ஒழுங்குமுறை சட்டம் (1773): தலைமை ஆளுநருக்குப் போதிய அதிகாரம் அளிக்கவில்லை.
  4. ரோஹில்லா போர்: ரோகில்கண்ட் ஆட்சியாளர் ஹபிஸ் ரகமத் கான் இப்போரில் ஈடுபட்டார்.
  5. பிட் இந்தியச் சட்டம்: 1784-ல் ஏற்படுத்தப்பட்டது.
காரன் வாலிஸ் பிரபு (1786-ல் தலைமை ஆளுநர்)
6.  நீதித்துறையைச் சீரமைக்க உதவியவர்: சர் வில்லயம்ஸ் ஜோன்ஸ்.
7.  முழுமையான சட்டம்: ஜார்ஜ் பார்லோவின் உதவியுடன் உருவாக்கினார்.

வெல்லஸ்லி பிரபு
8.  தன்னை அழைத்துக் கொண்டது: "வங்கப்புலி" என்று.
9.  துணைப்படைத் திட்டத்தின் மணிமகுடம்: பசீன் உடன்படிக்கை.
10. கல்வி நிறுவனம்: 1800-இல் வில்லியம் கோட்டையில் கல்லூரி நிறுவினார்.

ஹேஸ்டிங்ஸ் பிரபு
11. பிண்டாரிகளை ஒடுக்கியவர்: 1824-ல்.
12. பம்பாய் மாகாணம்: உருவாக்கியவர்.

வில்லியம் பெண்டிங் பிரபு
13. சென்னையின் ஆளுநர்: 1803-ஆம் ஆண்டு.
14. இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர்: இவரே ஆவார்.
15. ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினர்: டி.பி.மெக்காலே.
16. சதிமுறை ஒழிப்பு: சதிமுறையை ஒழித்த ஆளுநர்.
17. சமூக சீர்திருத்தம்: பெண் சிசு கொலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
18. மகல்வாரி திட்டம்: அறிமுகப்படுத்தினார்.

டல்ஹௌசி பிரபு
19. இரயில்வே அறிக்கை: இவரது காலத்தில் தயாரிக்கப்பட்டது.
20. சென்னை - அரக்கோணம் இரயில் பாதை: 1856-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
21. தந்தி துறை: ஓ ஷாகன்னசே 1852-ஆம் ஆண்டு முக்கிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
22. அஞ்சல்தலைகள்: முதல் முறையாக இவரது காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
23. வாரிசு இழப்புக் கொள்கை: 1848-இல் அறிமுகப்படுத்தினார்.

இதர தகவல்கள்
24. மத்திய மாகாணங்கள் நிர்வாகம்: 1861-இல் முதன்மை ஆணையரின் தலைமையில் நிர்வகிக்கப்பட்டன.
25. "இந்தியாவின் அறிவுபட்டயம்": சர் சார்லஸ் உட் என்பவரின் 1854-ஆம் ஆண்டு கல்வி அறிக்கை.-----பாளையங்களின் தோற்றம் & தென்னிந்திய கிளர்ச்சிகள்
  1. நாயக்கர்களின் நியமனம்: விஜயநகர ஆட்சியாளர்கள் மாகாணங்களில் நிர்வாகத்திற்காக நாயக்கர்களை நியமித்தனர்.
  2. பாளையங்களின் எண்ணிக்கை: நாடு தொடக்கத்தில் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
  3. முக்கிய முகாம்கள்: கிழக்கு பாளையம் மற்றும் மேற்கு பாளையம்.
  4. பூலித்தேவர்: நெல்கட்டும் செவல் பாளையத்தின் தலைவர்.
  5. பூலித்தேவர் கைப்பற்றிய பகுதி: மாபெஸ்கானிடமிருந்து மதுரையை.
  6. வரி வசூலிக்கும் உரிமை: 1792 கர்நாடக உடன்படிக்கையின்படி ஆற்காடு நவாப் ஆங்கிலேயருக்கு வரி வசூலிக்கும் உரிமையைக் கொடுத்தார்.
  7. கட்டபொம்மனுக்கு எதிராகப் படை: வெல்லெஸ்லி பிரபு திருநெல்வேலிக்குப் படையை அனுப்ப உத்தரவிட்டார்.
  8. கட்டபொம்மனைக் கைது செய்தவர்: புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் கம்பெனியிடம் ஒப்படைத்தார்.
  9. திருச்சிராப்பள்ளி பிரகடனம்: மருது சகோதரர்கள் 1801 சூன் மாதம் வெளியிட்டனர்.
  10. மருது சகோதரர்கள் தூக்கிலிடுதல்: திருப்பத்தூர் கோட்டையில்.
  11. தீரன் சின்னமலை இயற்பெயர்: கொங்கு நாட்டுப் பாளையக்காரரான இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி.
  12. தீரன் சின்னமலை தூக்கிலிடுதல்: சங்ககிரி கோட்டையில்.
வேலூர் கலகம் (1806)
  1. சென்னை மாகாண கவர்னர்: வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் 1803-ல் பொறுப்பேற்றார்.
  2. புதிய தலைப்பாகை அறிமுகம்: இராணுவத் தளபதி அக்னியூ அறிமுகப்படுத்தினார்.
  3. கலகத்தை ஒடுக்கிய அதிகாரி: கர்னல் கில்லெஸ்பி.
  4. வரலாற்றுச் சிறப்பு: வி.டி.சவார்க்கர் வேலூர் கலகத்தை "முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி" என்று கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement