TNPSC TRB TET 6 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-3
வினா விடை தொகுப்பு 3
அறிவியல் அடிப்படைகள்
- 1 கிலோகிராம் என்பதற்கான பிளாட்டினம்-இரிடியம் உலோகத் தண்டு எங்கு வைக்கப்பட்டுள்ளது?
விடை: ஃபிரான்ஸில் உள்ள செவ்வெரஸ் என்ற இடத்தில். - 1 கிலோகிராம் எடையைக் குறிக்கும் உலோகத் தண்டு எந்த உலோகக் கலவையால் ஆனது?
விடை: பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையால். - ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகரும் பொருளின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: அலைவு இயக்கம்.
- திரவம் அது உள்ள கொள்கலனின் எதைப் பெறுகிறது?
விடை: வடிவத்தைப் பெறுகிறது. - துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி எந்த நிலையில் மிக அதிகமாக உள்ளது?
விடை: வாயுவில். - துகள்கள் ஒன்றையொன்று அதிக அளவில் ஈர்க்கும் பருப்பொருள் நிலை எது?
விடை: திண்மம். - திண்மப் பொருளைவிட துகள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை எதில் குறைவாக உள்ளது?
விடை: திரவத்தின் துகள்களுக்கு இடையே. - எளிதில் நகராத துகள்களைக் கொண்ட பருப்பொருள் எது?
விடை: திண்மம்.
- ஆஞ்சியோஸ்பெர்ம்கள் என்பதன் பொருள் என்ன?
விடை: மூடிய விதைத் தாவரங்கள். - விதைகள் கனிகளில் புதைந்திருக்காத தாவரங்கள் எவை?
விடை: ஜிம்னோஸ்பெர்ம்கள். - அமீபாவின் போலிக்கால்கள் எதற்காகப் பயன்படுகின்றன?
விடை: இடப்பெயர்ச்சி செய்வதற்காக. - ஒரு விலங்கு பருவமாறுபாட்டின் காரணமாக இடப்பெயர்ச்சி செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: வலசை போதல். - சிங்கப்பூரில் ஜீராங் பூங்காவில் பென்குவின் பறவைகள் எந்த வெப்பநிலையில் பராமரிக்கப்படுகின்றன?
விடை: 0°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில்.
- குவாஷியோர்கர் நோயின் அறிகுறிகள் யாவை?
விடை: வளர்ச்சி குறைபாடு, முகம் கால்களில் வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு, மூளை வளர்ச்சி குறைபாடு. - மராஸ்மஸ் நோயில் உடல் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்?
விடை: மெதுவான உடல் வளர்ச்சி காணப்படும். - நெல்லிக்கனிகளில் எந்தப் பழங்களைவிட அதிக வைட்டமின்-C காணப்படுகிறது?
விடை: ஆரஞ்சு பழங்களைவிட. - ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகச் செயல்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்ட இலை எது?
விடை: முருங்கை இலை.
- பருமனில் வெப்பத்தால் ஏற்படும் அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: பருமவிரிவு. - போரோசிலிகேட் கண்ணாடி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: பைரக்ஸ் கண்ணாடி. - வெப்பப்படுத்தும்போது மிகமிகக் குறைவாகவே விரிவடையும் கண்ணாடி எது?
விடை: போரோசிலிகேட் கண்ணாடி (பைரக்ஸ் கண்ணாடி). - மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாத மின்கலன்கள் எதில் பயன்படுத்தப்படுகின்றன?
விடை: சுவர் கடிகாரம், கைக் கடிகாரம் மற்றும் ரோபோ பொம்மைகளில். - பலமுறை மின்னேற்றம் செய்து பயன்படுத்தக்கூடிய மின்கலன்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை: துணை மின்கலன்கள்.
- பொருள்களின் வேதிப்பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது எவ்வகை மாற்றம்?
விடை: வேதியியல் மாற்றம். - தற்காலிக மாற்றம் என அழைக்கப்படுவது எவ்வகை மாற்றம்?
விடை: இயற்பியல் மாற்றம்.
- அடிவளி மண்டலம் புவி மேற்பரப்பிலிருந்து எவ்வளவு உயரம் வரை பரவியுள்ளது?
விடை: 16 கி.மீ. உயரம் வரையிலானது. - காற்றின் இயக்கம் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நடைபெறும்?
விடை: அடிவளி மண்டலம் (Troposphere). - வளிமண்டலத்தில் ஓசோன் படலம் எதற்கு மேல் அமைந்துள்ளது?
விடை: அடிவளி மண்டலத்தின் மேல். - "காற்று என்பது ஒரு அடிப்படைப் பொருள் அல்ல" என்று நிரூபித்தவர் யார்?
விடை: ஜோசப் பிரிஸ்ட்லி. - ஜோசப் பிரிஸ்ட்லி கண்டறிந்த அதிக வினைதிறன் கொண்ட வாயு எது?
விடை: ஆக்சிஜன். - டேனியல் ரூதர்ஃபோர்டு எந்த நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர்?
விடை: ஸ்காட்லாந்து. - காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடின் சதவீதம் என்ன?
விடை: 0.03%. - காற்றில் உள்ள ஆர்கான் மற்றும் நீராவி ஆகியவற்றின் சதவீதம் என்ன?
விடை: 1%. - இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்தப் பயன்படும் பனிக்கட்டி எது?
விடை: உலர்பனிக்கட்டி.
- ராபர்ட் ஹூக் எந்த நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்?
விடை: இங்கிலாந்து நாடு. - 'மைக்ரோகிராபியா' நூலை ராபர்ட் ஹூக் எதன் அடிப்படையில் வெளியிட்டார்?
விடை: ஒரு கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கி அதன் அடிப்படையில். - திசுக்களின் அமைப்பை விளக்க முதன்முதலில் 'செல்' என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் யார்?
விடை: ராபர்ட் ஹூக். - பாக்டீரியா எவ்வகை செல்லைக் கொண்டுள்ளது?
விடை: புரோகேரியோட்டிக் செல். - அளவில் பெரியவை மற்றும் கடினத்தன்மை மிக்க செல்கள் எவை?
விடை: தாவர செல்கள். - தாவர செல்களில் செல்சுவரை அடுத்து காணப்படுவது எது?
விடை: செல்சவ்வு. - பசுங்கணிகங்களில் காணப்படும் நிறமி எது?
விடை: பச்சை நிறமி (பச்சையம்). - தாவர செல்களை விட அளவில் சிறியவை மற்றும் கடினத்தன்மை அற்ற செல்கள் எவை?
விடை: விலங்கு செல்கள். - விலங்கு செல்களில் நுண்குமிழ்கள் எவ்வாறு காணப்படும்?
விடை: சிறிய நுண்குமிழ்களாகக் காணப்படுகின்றன. - தாவர செல்களில் சென்டிரியோல்கள் காணப்படுமா?
விடை: காணப்படுவதில்லை. - செல்லின் கதவு என்று எந்த உறுப்பு அழைக்கப்படுகிறது?
விடை: செல்சவ்வு. - செல்லிற்குத் தேவையான அதிக சக்தியை உருவாக்கித் தருவது எது?
விடை: மைட்டோகாண்டிரியா. - செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது?
விடை: உட்கரு (நியூக்ளியஸ்). - உட்கரு கதவு என அழைக்கப்படுவது எது?
விடை: உட்கரு உறை (நியூக்ளியஸ் உறை). - செல்லின் அனைத்துச் செயல்களையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்துவது எது?
விடை: உட்கரு.
- எலும்பு மண்டலமானது எவற்றால் ஆக்கப்பட்டுள்ளது?
விடை: எலும்புகள், குருத்தெலும்புகள் மற்றும் மூட்டுகளால். - மனிதனின் இணையுறுப்புச் சட்டகத்தில் எவை அடங்கும்?
விடை: மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள், கை கால் எலும்புகள். - விலா எலும்புக்கூடு எவ்வகையான எலும்புகளைக் கொண்டுள்ளது?
விடை: வளைந்த தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது. - முன்னங்கையை மேலும், கீழும் அசைவிக்க எவை தேவைப்படுகின்றன?
விடை: இருதலைத் தசை, முத்தலைத் தசை. - கையை மேலே உயர்த்தும்போது முத்தலை தசை என்னவாகிறது?
விடை: விரிந்து கையை மேலே உயர்த்த உதவுகிறது. - எலும்புத் தசைகள் உடலில் உள்ள எவற்றுடன் இணைந்து செயல்படுகின்றன?
விடை: எலும்புகளுடன். - உணவுக்குழுல், சிறுநீர்ப்பை, தமனிகளின் சுவர்களில் காணப்படும் தசைகள் எவை?
விடை: மென்தசைகள். - இதயத்தை சீராகவும், தொடர்ச்சியாகவும் துடிக்க வைக்கும் தசைகள் எவை?
விடை: இதயத் தசைகள். - செரிமான மண்டலத்தில் உணவுக் குழாயின் நீளம் என்ன?
விடை: சுமார் 9 மீட்டர். - செரிமான மண்டலத்தில் பெரும்பகுதி வேதிய செரிமானம் எங்கு நடைபெறுகிறது?
விடை: சிறுகுடலில். - உமிழ்நீரில் உள்ள பாக்டீரியாக்களைக் கொன்று கரைக்கக்கூடிய காரணிகள் எங்கு உள்ளன?
விடை: உமிழ்நீரில். - உணவை சேமித்து வைக்கும் பகுதியாகவும், செரிமானம் நடைபெறும் இடமாகவும் உள்ளது எது?
விடை: இரைப்பை. - இரைப்பை நொதியானது எவற்றைக் கொண்டுள்ளது?
விடை: கோழை நொதிகள் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம். - மார்பு அறையினுள் நுழைந்தவுடன் மூச்சுக்குழல் எவ்வாறு பிரிகிறது?
விடை: மூச்சுக்கிளைக் குழல்களாகப் பிரிகிறது. - மூச்சுக்கிளைக் குழல்கள் முடிவில் எதில் திறக்கின்றன?
விடை: நுண் காற்றுப்பைகளில் (ஆல்வியோலைகளில்). - நுரையீரல்களைச் சுற்றியுள்ள ப்ளூரா (Pleura) படலம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?
விடை: இரு அடுக்குகளை. - இரத்தம் என்ற திரவ இணைப்புத் திசு எவற்றைக் கொண்டுள்ளது?
விடை: பிளாஸ்மா மற்றும் இரத்த அணுக்களைக் கொண்டுள்ளது. - இரத்த வெள்ளையணுக்களின் சுருக்கம் என்ன?
விடை: WBC. - இரத்த தட்டுக்களின் ஆங்கிலச் சுருக்கப் பெயர் என்ன?
விடை: Platelets. - எலும்பு மஞ்சையில் உற்பத்தியாகும் இரத்த அணுக்கள் எவை?
விடை: இரத்த சிகப்பு அணுக்கள் (RBC). - நரம்பு மண்டலம் எத்தனை உறைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது?
விடை: திசுக்களாலான மூன்று உறைகளால். - நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் மூளை உறைகளின் ஆங்கிலப் பெயர் என்ன?
விடை: Meaninges. - நாளமில்லா சுரப்பிகள் எவற்றை உற்பத்தி செய்கின்றன?
விடை: ஹார்மோன்கள் என்னும் வேதிப் பொருட்களை. - நாளமில்லா சுரப்பிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
விடை: பிட்யூட்டரி, தைராய்டு, அட்ரினல், கணையம். - ஆண்களில் உள்ள இனப்பெருக்க உறுப்பு எது?
விடை: ஓரிணை விந்தகம். - பெண்களில் உள்ள இனப்பெருக்க உறுப்பு எது?
விடை: ஓரிணை அண்டகம். - சிறுநீரகங்கள் எந்த வடிவத்தில் அமைந்துள்ளன?
விடை: அவரை விதை வடிவத்தில். - சிறுநீரகங்கள் எங்கு அமைந்துள்ளன?
விடை: அடிவயிற்றுக் குழியில். - செவியின் மூன்று முக்கியப் பகுதிகள் யாவை?
விடை: புறச்செவி, நடுச்செவி மற்றும் உட்செவி.
- காந்தத்தின் எந்தப் பண்பை சீனர்கள் கண்டறிந்தனர்?
விடை: திசைக் காட்டும் பண்பை. - இயற்கையில் நீரானது எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?
விடை: மூன்று நிலைகளில் (திண்மம், நீர்மம் மற்றும் வாயு). - புவியில் காணப்படும் நீரில் உப்பு நீரின் சதவீதம் எவ்வளவு?
விடை: 97%. - நன்னீரில் மற்ற நீர் ஆதாரங்களின் சதவீதம் எவ்வளவு?
விடை: 0.9%. - நன்னீரில் மேற்பரப்பு நீரின் சதவீதம் எவ்வளவு?
விடை: 0.3%. - மேற்பரப்பு நீரில் ஏரிகளின் பங்கு எவ்வளவு சதவீதம்?
விடை: 87%. - மேற்பரப்பு நீரில் ஆறுகளின் பங்கு எவ்வளவு சதவீதம்?
விடை: 2%. - மேற்பரப்பு நீரில் சதுப்பு நில நீரின் பங்கு எவ்வளவு சதவீதம்?
விடை: 11%. - நீரின் மூலக்கூறு எவற்றால் உருவாகின்றது?
விடை: இரு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஓர் ஆக்ஸிஜன் அணுவுடன் இணைந்து. - உவர்ப்பு நீரில் அதிகபட்சமாக எவ்வளவு சதவீதம் வரையில் உப்புகள் கரைந்திருக்கும்?
விடை: 3% வரையில். - நீரின் கனஅளவை அளக்கப் பயன்படும் அலகுகள் யாவை?
விடை: லிட்டர், மில்லி லிட்டர் மற்றும் காலன். - கியூசக் என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை: கன அடி / விநாடி. - பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் காணப்படுவது யாவை?
விடை: சதுப்பு நிலக்காடுகள்.
- சோப்பு தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள் எது?
விடை: சோடியம் ஹைட்ராக்சைடு. - மண்புழு உரம், தொழு உரம் ஆகியவை எவ்வகை உரங்கள்?
விடை: கரிம உரங்கள். - சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் ஆகியவை எவ்வகை உரங்கள்?
விடை: கனிம உரங்கள். - வில்லியம் ஆஸ்பிடின் சிமெண்டை எதனுடன் ஒப்பிட்டு போர்ட்லேண்ட் சிமெண்ட் என அழைத்தார்?
விடை: இங்கிலாந்தில் உள்ள போர்ட்லேண்ட் என்னும் இடத்தில் கிடைக்கும் சுண்ணாம்பு கல்லுடன். - காரை என்பதில் அடங்கியுள்ள பொருள்கள் யாவை?
விடை: சிமெண்ட் + மணல் + நீர். - கற்காரை என்பதில் அடங்கியுள்ள பொருள்கள் யாவை?
விடை: சிமெண்ட் + மணல் + ஜல்லிக்கற்கள் + நீர். - விவசாயத்தில் தாவரங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படும் உப்பு எது?
விடை: எப்சம். - பாரிஸ் சாந்துவின் வேதியியல் பெயர் என்ன?
விடை: கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட். - அறுவை சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படும் பொருள் எது?
விடை: பாரிஸ் சாந்து. - வாய்கொப்பளிப்பானாகவும், கிருமிநாசினியாகவும் வீடுகளில் பயன்படும் கரைசல் எது?
விடை: குறைந்த அடர்வுடைய பீனால் கரைசல்.


0 Comments