TNPSC TRB TET TAMIL | தமிழ் 100 வினா விடைகள் - PART 4


அறிஞர்கள் மற்றும் சிறப்புப் பெயர்கள்
எண்கேள்விவிடை
316'கிறித்தவக் கம்பர்' எனப் புகழப்படுபவர் யார்?எச்.ஏ. கிருட்டினனார்
319பாரதிதாசனார் எந்தச் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?புரட்சிக் கவிஞர்
329'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்ற கூற்றை முன்வைத்தவர் யார்?திருமூலர்
330'என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது' என்று கூறியவர் யார்?காந்தியடிகள்
331இந்திய நாட்டை மொழிகளின் 'காட்சிச்சாலை' எனக் குறிப்பிட்டவர் யார்?ச. அகத்தியலிங்கம்
333"நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்" என்றவர் யார்?இரசூல் கம்சதேவ்
334'கண்ணுள் வினைஞர்' என்று அழைக்கப்பட்டவர் யார்?ஓவியர்
335"இரட்டைக் கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை" என்றவர் யார்?சுரதா
339'என்றுமுள தென்தமிழ்' என்றவர் யார்?கம்பர்
352வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர் யார்?கடுவெளிச் சித்தர்
354'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ' எனப் பாராட்டப்பட்டவர் யார்?சேக்கிழார்
355"எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே" என்று கூறியவர் யார்?பேரறிஞர் அண்ணா
358'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று பாடியவர் யார்?பாரதியார்
370'திராவிட' எனும் சொல்லே 'தமிழ்' எனும் சொல்லிலிருந்து உருவானது என்று கூறியவர் யார்?கால்டுவெல்
372தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?வாணிதாசன்
373'நாடகச்சாலையொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ நிகழ்ந்து' என்ற கூற்று யாருடையது?கவிமணி
376ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதியவர் யார்?உ.வே. சாமிநாதையர்
380"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறிய அறிஞர் யார்?கால்டுவெல்
385"வயிரமுடைய நெஞ்சு வேணும்" எனக் கூறிய கவிஞர் யார்?பாரதியார்
386'பாம்பினைப் பற்றி ஆட்டாதே - உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக்காட்டாதே' எனப் பாடிய சித்தர் யார்?பாம்பாட்டிச் சித்தர்
388தமிழக மக்களால் 'காந்தியக் கவிஞர்' என வழங்கப்படுபவர் யார்?வெ. இராமலிங்கனார்
389காந்தியடிகளை 'அரை நிருவாணப் பக்கிரி' என்று ஏளனம் செய்தவர் யார்?சர்ச்சில்
390கீழ்ச்சாதி, மேல்சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல எல்லோருக்கும் கல்வி தேவை என்று கூறியவர் யார்?பெரியார்
392"நோய்க்கு மருந்து இலக்கியம்" என்று கூறியவர் யார்?மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
393காந்தியடிகள் யாரைத் 'தென்னாட்டின் ஜான்சிராணி' என்று அழைத்தார்?அஞ்சலையம்மாள்
398உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர் யார்?சூலியல் வின்சோன்
400தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?கவிஞர் வெ. இராமலிங்கனார்
இலக்கியம் மற்றும் இலக்கணம்
எண்கேள்விவிடை
301'உம், என்று, கொல், அம்ம' என்பன எவ்வகைச் சொற்கள்?இடைச்சொற்கள்
302'கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்' - இதில் பயின்று வந்துள்ள எச்சம் எது?குறிப்பு வினையெச்சம்
303'பண்ணொடு தமிழொப்பாய்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது?தேவாரம்
305"மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ?" என வினவும் வினா எவ்வகை வினா?கொடை வினா
306'கோழி கூவும்' என்பது எவ்வகைத் தொடர்?மரபுப் பிழையான தொடர் (சேவல் கூவும்)
307திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?658 (அறுநூற்று ஐம்பத்தெட்டு)
308'தழீஇ' என்பது எவ்வகை அளபெடை?சொல்லிசை அளபெடை
314சங்க நூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?பதினெண் கீழ்க்கணக்கு
315ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?பரணி
317நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
318திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?133
320'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என வழங்கப்படும் காப்பியம் எது?சிலப்பதிகாரம்
322சைவத்திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாகும்?பத்தாவது
323'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது எந்த நூலின் புகழ்மிக்கத் தொடர்?திருமந்திரம்
324'முக்கூடற்பள்ளு' நூலைக் கற்பதால் அறியும் பயன் என்ன?உழவுத் தொழில் பற்றி அறியலாம்
325'சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே' என்ற வரிகள் இடம்பெற்றுள்ள காப்பியம் எது?சீவகசிந்தாமணி
327திருவிளையாடற் புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை எத்தனை?3363 (மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று)
328மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?பத்து
337'தமிழ் வேலி' என்று மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைப் பற்றிக் கூறிய நூல் எது?பரிபாடல்
341'நானிலம்' என்ற தொகைச் சொல்லை விரித்தெழுதுக.குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
342தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை உள்ளன?நாற்பத்திரண்டு
344"என்னே, தமிழின் இனிமை!" - என்பது எவ்வகைத் தொடர்?உணர்ச்சித் தொடர்
346குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் யார்?பாரதம் பாடிய பெருந்தேவனார்
347தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா எது?இன்னிசை வெண்பா
348மாலதி திருக்குறள் கற்றாள் - எவ்வகை வாக்கியம்?தன்வினை வாக்கியம்
349ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது எவ்வகை அணி?உயர்வு நவிற்சி அணி
350குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?401
356திருக்குறளுக்குப் பதின்மர் எழுதிய உரைகளுள் சிறந்த உரை எழுதியவர் யார்?பரிமேலழகர்
357ஏலாதி எந்த வகை நூல்களுள் ஒன்று?பதினெண் கீழ்க்கணக்கு
359சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?மாணிக்கவாசகர்
360மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள் எவை?திரிகடுகம், ஏலாதி
361அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி எது?களிற்றியானை நிரை
362வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் எது?பாஞ்சாலி சபதம்
363'செரு அடுதோள் நல்லாதன்' எனப் பாராட்டும் நூல் எது?பாயிரம்
364திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?ந.மு. வேங்கடசாமி நாட்டார்
396"பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு" என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?பாஞ்சாலி சபதம்
397'உரைநடைக்காலம்' என அழைக்கப்படும் நூற்றாண்டு எது?இருபதாம் நூற்றாண்டு
399உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறும் நூல் எது?திருவாசகம்
சொல் பொருள், பிரித்தெழுதுக மற்றும் தமிழாக்கம்
எண்கேள்விவிடை
304'4' என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?
309'வெவ்விருப்பாணி' என்பதைப் பிரித்தெழுதுக.வெம்மை + இரும்பு + ஆணி
310'பையுள்' என்பதன் பொருள் என்ன?துன்பம்
311'நன்கணியர்' என்பதைப் பிரித்தெழுதுக.நன்கு + அணியர்
312'விளம்பி' என்பது எவ்வகைப் பெயர்?ஊர்ப்பெயர்
321'மேதி' என்பதன் பொருள் என்ன?எருமை
326'மயரி' என்பதன் பொருள் தருக.மயக்கம்
340'அந்தமான்' என்பது எவ்வகை மொழி?பொது மொழி
343"Indian Succession Act" என்பதன் தமிழாக்கம் என்ன?இந்திய வாரிசுரிமைச் சட்டம்
345"திருத்தப்படாத அச்சுப்படி" என்பதற்கு இணையான ஆங்கில சொல் என்ன?Green proof
365'வாயினீர்' என்பதைப் பிரித்தெழுதுக.வாயின் + நீர்
384'ஏற்பாடு' - என்னும் சொல்லில் 'பாடு' என்பதன் பொருள் என்ன?மறையும் நேரம்
391'அவல்' என்பதன் எதிர்ச்சொல் என்ன?மேடு
395'விசும்பு' என்னும் சொல்லின் பொருள் என்ன?ஆகாயம்
வரலாறு மற்றும் பொது அறிவு
எண்கேள்விவிடை
313'அற்புதப் பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்' என்று பாடியவர் யார்?சுந்தரர்
338முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த மங்கை யார்?தில்லையாடி வள்ளியம்மை
351வையை நாடவன் யார்?பாண்டியன்
353ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
366நடுவணரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்த வருடம் எது?2004
367நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?பேச்சுக்கலை
368'என்னுடைய நாடு' - என்னும் பாடல் பாரதியார் கவிதைகளில் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?தேசிய மலர்
369அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம் எது?சென்னை
371நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை எது?பூநாரை
374ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?1830
375தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?பிள்ளையார்ப்பட்டி
377'சண்பக பாண்டியன்' என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன் யார்?சூடாமணி பாண்டியன்
378'சம்புவின் கனி' எனக் குறிக்கப்படுவது எது?நாவல் பழம்
379திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?ஞானப்பிரகாசன்
381தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?பூங்கொடி
382"நற்கலை" என்று அழைக்கப்படும் கலை எது?கட்டடக் கலை
383"கால்டுவெல்" தமிழகத்தில் வாழ்ந்த இடம் எது?இடையன்குடி
387அம்மானை என்பது யார் விளையாடும் விளையாட்டு?பெண்கள்
394முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு எது?கிரீஸ்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement