TNPSC TRB TET TAMIL | தமிழ் 100 வினா விடைகள் - PART 7


புறத்திணை விளக்கங்கள்:
  • தும்பைத் திணை: இரு திறத்துப் படைகளும் நேருக்கு நேர் நின்று போரிடுதல்.
  • வாகைத் திணை: போரில் வெற்றி பெற்ற மன்னனைப் புகழ்ந்து பாடுதல்.
  • பாடாண் திணை: ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடுதல்.
  • பொதுவியல் திணை: வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளுக்குப் பொதுவானவற்றைக் கூறுதல்.
  • கைக்கிளை: ஒருதலைக் காமம் (ஒரு வகையாகக் குறிக்கப்படும்).
புறநானூற்றுச் செய்திகள்:
  • கூறும் பொருள்: தமிழகத்தின் பழங்கால நிலை மற்றும் போர் வீரம்.
  • அதிக பாடல்களைப் பாடிய பெண்பாற் புலவர்: ஔவையார்.
  • அதியமானின் தூதுவர்: ஔவையார் (தொண்டைமானிடம் சென்றவர்).
  • ஔவையார் பாடல்: 'சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கி' என்று அதியமானைப் பாடியவர்.
  • கணியன் பூங்குன்றனார் பாடல்: 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
  • ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடல்: 'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே'.
  • ஔவையார் பாடல்: 'நாடா கொன்றோ காடா கொன்றோ... எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே'.
  • மோசிகீரனார் பாடல்: 'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்'.
பத்துப்பாட்டு நூல்கள்:
நூல்இயற்றியவர்பாட்டுடைத் தலைவன்/பொருள்சிறப்பு
திருமுருகாற்றுப்படைநக்கீரர்முருகன் (ஆற்றுப்படை - வழிப்படுத்துதல்)-
பொருநராற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்--
சிறுபாணாற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்நல்லியக்கோடன்கடையெழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்தொண்டைமான் இளந்திரையன்-
மலைபடுகடாம்பெருங்கௌசிகனார்நன்னன் சேய் நன்னன்வேறு பெயர்: கூத்தராற்றுப்படை
முல்லைப்பாட்டுநப்பூதனார்-மிகக் குறைந்த அடிகள் (103 அடிகள்) கொண்டது.
மதுரைக்காஞ்சிமாங்குடி மருதனார்-மிக அதிக அடிகள் (782 அடிகள்) கொண்டது.
நெடுநல்வாடைநக்கீரர்பாண்டியன் நெடுஞ்செழியன்-
குறிஞ்சிப்பாட்டுகபிலர்-ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிக்க வேண்டி எழுதப்பட்டது.
பட்டினப்பாலைகடியலூர் உருத்திரங்கண்ணனார்சோழ அரசன் கரிகால் பெருவளத்தான்-
எட்டுத்தொகை நூல்கள்:
நூல்அடைமொழி/சிறப்புஅடிவரையறைதொகுத்தவர்தொகுப்பித்த மன்னன்
நற்றிணைமுதலாவதாக வைத்து எண்ணப்படும்9 முதல் 12 அடிகள்-பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை'நல்ல' என்ற அடைமொழி கொண்டது4 முதல் 8 அடிகள்பூரிக்கோ-
ஐங்குறுநூறு--புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுப்பத்து'ஒத்த' என்ற அடைமொழி கொண்டது--சேர நாட்டு மன்னர்களின் வரலாற்றைக் கூறுகிறது (முதலாம் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை)
பரிபாடல்'ஓங்கு' என்ற அடைமொழி கொண்டது25 முதல் 400 அடிகள்-அகம், புறம் இரண்டும் கலந்த நூல்
கலித்தொகை'கற்றறிந்தார் ஏத்தும் கலி' என்று புகழப்படும்-நல்லந்துவனார்150 பாடல்கள் கொண்டது
அகநானூறுவேறு பெயர்: நெடுந்தொகை13 முதல் 31 அடிகள்உருத்திரசன்மர்பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
  • அகநானூறு பிரிவுகள்:
    • களிற்றியானை நிரை - 120 பாடல்கள்
    • மணிமிடை பவளம் - 180 பாடல்கள்
    • நித்திலக்கோவை - 100 பாடல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
நூல்இயற்றியவர்சிறப்பு
திருக்குறள்-பதினெண் கீழ்க்கணக்கு நூற்பிரிவைச் சார்ந்தது.
நாலடியார்சமண முனிவர்கள்தொகுத்தவர்: பதுமனார், 'வேளாண் வேதம்' என்று அழைக்கப்படுகிறது. 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி'யில் 'நாலு' என்பது இதனைக் குறிக்கும்.
நான்மணிக்கடிகைவிளம்பிநாகனார்-
இன்னா நாற்பதுகபிலர்-
இனியவை நாற்பதுபூதஞ்சேந்தனார்-
திரிகடுகம்நல்லாதனார்சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கிறது.
ஆசாரக்கோவைபெருவாயின் முள்ளியார்100 வெண்பாக்களைக் கொண்டது.
பழமொழி நானூறுமுன்றுறை அரையனார்-
சிறுபஞ்சமூலம்காரியாசான்கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து வேர்களைக் குறிப்பிடுகிறது.
ஏலாதிகணிமேதாவியார்-
முதுமொழிக்காஞ்சிமதுரைக்கூடலூர் கிழார்-
ஐம்பெருங்காப்பியங்கள்:
நூல்ஆசிரியர்/தலைவன்/விவரம்சிறப்புச் செய்திகள்
சிலப்பதிகாரம்-புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் ஆகிய மூன்று காண்டங்களையும், 30 காதைகளையும் கொண்டது. கவுந்தியடிகள் சமண சமயத் துறவி. மாதவியின் நடன அரங்கேற்றம் 12 வயதில் நடந்தது. மாதவி பெற்ற பட்டம்: தலைக்கோல் அறிவை. கோவலன், கண்ணகி ஆகியோர் காவிரிப்பூம்பட்டினம், திருவரங்கம், உறையூர் வழியாக மதுரை சென்றனர். கண்ணகியின் சிலம்பு மாணிக்கப் பரல் கொண்டது. கோப்பெருந்தேவியின் சிலம்பு முத்துப் பரல் கொண்டது. 'தேரா மன்னா செப்புவது உடையேன்' என்று கண்ணகி பாண்டிய மன்னனிடம் கூறினாள். 'யானோ அரசன் யானே கள்வன்' என்று கூறி உயிர்நீத்த பாண்டிய மன்னன்: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். கண்ணகி திருச்செங்குன்றில் சேரன் செங்குட்டுவனைச் சந்தித்தாள். கண்ணகிக்குச் சிலையெடுக்க இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்த சேர மன்னன்: சேரன் செங்குட்டுவன். புகழுரை: 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' - பாரதியார். வேறு பெயர்: 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்'.
மணிமேகலைதந்தை: கோவலன், தாய்: மாதவிசிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. மணிமேகலைக்கு அமுதசுரபியை அளித்த தெய்வம்: தீவதிலகை. மணிபல்லவத் தீவுக்குக் கொண்டு சென்ற தெய்வம்: மணிமேகலா தெய்வம். 30 காதைகளைக் கொண்டது. இது பௌத்த சமயத்தைச் சார்ந்த காப்பியம். சிறந்த வரி: 'அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள்'.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement