குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல் சார்ந்த வினா விடைகள்
உடல் மற்றும் மூளை வளர்ச்சி
- மனித உடலில் உள்ள செல்களும் திசுக்களும் ஏற்படுத்தும் உயரம் மற்றும் எடை பெருக்கமே உடல் வளர்ச்சி எனப்படுகிறது.
- மனிதனின் வளர்ச்சி உடல் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.
- மனித வளர்ச்சி 8 பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
- குழந்தையின் உடல் வளர்ச்சி முதலில் தலையிலிருந்து தொடங்கி பாதங்களை நோக்கி வருகின்றது.
- பிறக்கும் பொழுது குழந்தை மூளையின் நிறை 350 கிராம் ஆகும்.
- மூளை வளர்ச்சி குழந்தை பிறந்த பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாகவும், பின்னர் மெதுவாகவும் நடைபெறுகிறது.
- பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1,260 கிராம் முதல் 1400 கிராம் வரை உள்ளது.
- மூளையின் வளர்ச்சி 6 வயதில் 90 சதவீதம் அடைகிறது.
- பிறக்கும் போது மூளையின் நிறை உடலின் எடையில் 1/8 பங்கு இருக்கும்.
- தொடக்க கல்வி பயில பள்ளிக்கு வரும் போது குழந்தையின் மூளை 90 சதவீதம் வளர்ச்சி அடைந்துவிடுகிறது.
- குழந்தையின் உயரம் பிறக்கும் போது ஏறத்தாழ 52 செ.மீ. இருக்கும்.
- சமூக மற்றும் பொருளாதார பின்னணிக்கு ஏற்ப குழந்தைகளின் வளர்ச்சி வேறுபடுகின்றது.
- 5 முதல் 8 வயது வரை, செயல்பாடுகள் அனைத்தும் உடல் சார்ந்ததாக இருக்கும் மற்றும் தசைகளின் இயக்கம் விரைவாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருக்கும்.
- பள்ளி முன் பருவம் என்பது 3-6 ஆண்டுகள்.
- பள்ளிப்பருவம் என்பது 6-10 ஆண்டுகள்.
- குமரப் பருவம் என்பது 10-20 ஆண்டுகள். (குழந்தையின் இரண்டாம் பிறப்பு எனவும் அழைக்கப்படுகிறது)
- மத்திய அரசும் மாநில அரசும் 14 ஆண்டுகள் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வழிவகை செய்துள்ளது.
- பிள்ளை பருவம் கற்றலுக்கு ஏற்ற பருவமாகும்.
- ஆசிரியர்கள் கற்கும் குழந்தையை நன்கு புரிந்து கொள்ள, உடல், உள்ளம், மனவெழுச்சி மற்றும் சமூக மனப்பான்மை வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
- மூன்று AAA-யை ஆசிரியர் அறிந்து கடைப்பிடிக்க வேண்டும்.
- அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர், மகிழ்ச்சியான கற்றல் சூழல் மற்றும் ஆரோக்கியமான வகுப்பறை உறவுகள் ஆகியவை மாணவர்களிடம் உணர்வுச் சமநிலையைத் தோற்றுவிக்கும் காரணிகள் ஆகும்.
- பள்ளிக்குள் நுழையும் குழந்தைகளை முதலில் தன் அன்பையும் ஆதரவையும் காட்டி ஏற்றுக் கொள்ளுவது ஆசிரியர் குழு ஆகும்.
- சிந்தித்தல் என்பது ஒரு அறிவார்ந்த செயல்.
- குறியீட்டுச் சிந்தனையில் தொடர்புடையது வார்த்தைகள், எண்கள் மற்றும் உருவங்கள்.
- குழந்தைகளின் குறியீட்டுச் சிந்தனைக்கு அவசியமானது எண்ணுருக்கள் மற்றும் எழுத்துகள்.
- குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் பின்பற்றிச் செய்தல், பாவனை விளையாட்டு மற்றும் மொழியால் கருத்துப் பரிமாற்றம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
- வரிசைப்படுத்துதல், பொதுமை படுத்துதல், பகுத்தல், தொகுத்தல், சிந்தித்தல் மற்றும் காரண காரியம் அறிதல் ஆகியவற்றின் மூலம் அறிதல் திறன் வளர்ச்சியடைகிறது.
- பழைய அனுபவங்களைச் சிந்தித்து அவற்றுடன் புதிய அனுபவத்தை பொருத்திப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது குவி சிந்தனை.
- மொழி சிந்திப்பதற்கும், பிறர் கருத்துகளை அறியவும் மற்றும் கற்பனை செய்யவும் பயன்படுகிறது.
- பியாஜே என்ற உளவியல் அறிஞர், அறிதல் திறன் வளர்ச்சி 4 படிநிலைகளில் நடைபெறுவதாகக் கூறினார்.
- ஒரு குழந்தை 7, 8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிராமப்படி சிந்திக்கத் தொடங்குகிறது என்று குறிப்பிட்டவர் பியாஜே.
- பியாஜேவின் படிநிலைப்படி முதல் நிலை தொட்டு உணரும் பருவம் ஆகும்.
- பியாஜே கூறும் புலன் இயக்கப் பருவம் என்பது 0-2 ஆண்டுகள்.
- பியாஜேவின் படிநிலைபடி மூன்றாம் நிலை 7 முதல் 12 வயது வரை ஆகும்.
- ஸ்கிமா (Schema) என்பது பியாஜே கூறும் மன அமைப்பு.
- மனிதன் வளர்ச்சி நிலையை எரிக்சன் 8 படிநிலைகளாக கூறினார்.
- எரிக்சன் கோட்பாட்டின் மையக் கருத்து: சமூக வளர்ச்சியில் 8 நிலைகள் மற்றும் குறிப்பிட்ட வளர்ச்சி சார்ந்த சிக்கல்கள் ஏற்படும் என்பது.
- எரிக்சனின் கூற்றுபடி குழந்தைகள் 4-வது படிநிலையின் போது தொடக்கப் பள்ளிக்கு வருகின்றனர்.
- எரிக்சன் கோட்பாட்டின் படி நிறையாளுமை பெற்றவரின் பண்பு தன்னாட்சி.
- எரிக்சன் கோட்பாட்டின் படி குறையாளுமை பெற்றவரின் பண்பு தனிமை.
- நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை என அழைக்கப்படுபவர் ஆல்பிரட் பினே.
- நுண்ணறிவு என்பது நோக்கத்தோடு செயல்படுதல், பகுத்தறிவோடு சிந்தித்தல், திறமையாகச் சூழ்நிலையைச் சமாளித்தல் போன்றவை அடங்கிய ஒரு கூட்டச் செயலாற்றல் என கூறியவர் வெக்ஸ்லர்.
- நுண்ணறிவுச் சோதனைக்கு உதாரணம் அலெக்சாண்டர் சோதனை.
- தார்ன்டைக் கூற்றின் படி நுண்ணறிவு வகையில் மூன்று உள்ளடக்கியது. அவை: சமூக நுண்ணறிவு, கருத்தியல் நுண்ணறிவு மற்றும் பொறியியல் சார்ந்த நுண்ணறிவு.
- நுண்ணறிவு = பொதுக்காரணி (G) + சிறப்புக் காரணி (S) எனக் கூறியவர் ஸ்பியர்மென்.
- மாணவர்களிடையே இடைவினை ஏற்படுத்தி கற்பிப்பது சிறப்புக் காரணி.
- தர்ஸ்டனின் கருத்துப்படி நுண்ணறிவு ஏழு வகையான அடிப்படை மனத்திறன்களால் ஆனதாகும்.
- தர்ஸ்டனின் நுண்ணறிவு வகைகளில் சில: சொல்லாற்றல், நினைவாற்றல் மற்றும் எண்ணாற்றல்.
- அடிப்படை கணிதச் செயல்களை வேகமாகவும் சரியாகவும் செய்யும் ஆற்றல் எண்ணாற்றல் ஆகும்.
- பன்மை நுண்ணறிவு என்ற கருத்தை வெளியிட்டவர் கார்டனர்.
- கார்டனர் கண்டறிந்த நுண்ணறிவுகள் ஏழு வகை.
- ஹெலன் கெல்லர் தொடு உணர் நுண்ணறிவு அதிகம் கொண்டவர் என கருதப்பட்டார்.
- பினே சோதனைகள் மூலம் அளவிடப்படுவது: பொது உண்மைகள் பற்றிய அறிவு, சொற்களுக்குரிய விளக்கங்கள், நினைவுத்திறன் மற்றும் எளிய கணக்கறிவு.
- நுண்ணறிவின் அளவு நுண்ணறிவு ஈவினால் குறிப்பிடப்படுகிறது.
- நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் டெர்மன்.
- மன வயதை கால வயதால் வகுத்து 100-ஆல் பெருக்கினால் கிடைக்கும் எண்ணே நுண்ணறிவு ஈவு எனப்படும்.
- ஒரு குறிப்பிட்ட வயதுடையோர் பொதுவாக செய்யக்கூடிய செயல்களை வெற்றிகரமாக ஒரு குழந்தை செய்து முடித்தால் அது மன வயது.
- புதியனவற்றைக் கண்டுபிடித்தலுக்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் கிரகாம் வாலஸ்.
- தனது கண்டுபிடிப்பு கனவில் பளிச்சிட்டதாக கூறியவர் ராமானுஜம்.
- குழு விவாதம், கருத்தரங்குகள் மற்றும் மன்றச் செயல்பாடுகள் ஆக்கத்திறன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
- மனவெழுச்சி என்பது: மன உணர்ச்சிகளை மேலோங்கி நிற்கும் நனவு நிலை மற்றும் உள்ளத்தையும் உடலையும் கிளர்ச்சியுற செய்யும் நிலை.
- பாசம் வெறுப்புணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த மனவெழுச்சி இல்லை.
- ஓரளவு அச்சமும், சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி பொறாமை.
- மாணவர்களிடம் அச்ச உணர்வு ஏற்படுத்தும் காரணிகள்: எதையும் சரியாக புரிந்து கொள்ளாமை, கூச்சம்/அவமானம் தரும் நிலைமைகள் மற்றும் தன் மதிப்பை தாக்கும் சூழல்கள்.
- நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் கவலைக்கு அடிப்படை காரணமாக அமைகின்றது.
- அதிக அளவில் கவலைப்படுவதின் விளைவு: தெளிவற்ற மனநிலை, மாய ஒளி மற்றும் மாயத்தோற்றம்.
- மாணவர்களிடம் கவலை ஏற்படுத்தும் காரணிகள்: பெற்றோர்/ஆசிரியர்களின் அளவு கடந்த எதிர்பார்ப்புகள், குற்ற உணர்வுகள் மற்றும் கற்றல் குறைபாடுகள்.
- உற்சாகமான மனநிலை, நல்ல உறக்கம் மற்றும் உணவில் திருப்தி ஆகியவை மனநலத்தின் வெளிப்படையான அறிகுறிகள்.
- ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிகாட்டாமல் மனதினுள் அடக்கி வைப்பதன் விளைவுகள்: சுவாச மண்ட நோய், தோல் நோய், ஜீரண மண்ட நோய் மற்றும் நாளமில்லாத சுரப்பி நோய்.
- உடன்பாட்டு தற்கருத்து அமைந்திருக்கும் உணர்வுகள்: வெற்றி உணர்வு, அன்பு, பாதுகாப்புணர்வு, மரியாதை மற்றும் நம்பிக்கை.
- எதிர்மறை தற்கருத்து அமைந்திருக்கும் எண்ணங்கள்: அவநம்பிக்கை, வெறுப்பு, தோல்வி உணர்ச்சி, சந்தேகம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு.
- ஒரு குழந்தையின் தற்கருத்து வளர்ச்சி குடும்பத்தில் உருவாகின்றது.
- குழந்தையின் தற்கருத்து வளர்ச்சியினை தீர்மானிக்கும் சமூக காரணி பெற்றோர்களின் மனப்பான்மை.
- குழந்தைகள் பள்ளியில் 'நாம்' என்ற சமூக உணர்வினை வளர்த்துக் கொள்கிறது.
- ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு குழுவை பற்றியோ உண்மை நிலை அறியாமல் அவசரப்பட்டு தவறான முடிவுக்கு வருவது சார்பெண்ணங்கள்.
- சகோதர உறவு என்பது ஒரே தாய்தந்தை உடையவர்கள்.
- முதலில் பிறந்த குழந்தை தனித்துவ நிலை பறிக்கப்படுவதாக உணரும்.
- விளையாட்டுகள் அறிவு, உடல், மொழி, சமூகம் மற்றும் மனவெழுச்சி வளர்ச்சிக்கு உதவுகிறது.
- குழந்தைகள் 2 வயது வரை புலன் - இயக்க விளையாட்டுகளை விரும்புகின்றனர்.
- பங்கேற்பு நாடகம் முறையில் மாணவரோ, ஆசிரியரோ அல்லது சமுதாயமோ சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
- SWOT என்பது பலங்கள், பலவீனங்கள், சந்தர்ப்பங்கள் மற்றும் பயங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது.
- ஒப்பார் குழு என்பது சம வயது மற்றும் சமநிலைகளில் உள்ள குழந்தைகள் ஒன்றுபட்டு உருவாகும் குழுவாகும்.
- சிறுவர்கள் கொள்ளும் சினத்தை வகைப்படுத்தியவர் குட்இனஃப்.
- மனசாட்சி ஒழுக்க நடத்தையில் இன்றியமையாகப் பங்கினை பெற்றுள்ள உள்ளுணர்வு ஆகும்.
- தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வதின் விளைவாக எழும் நன்னடத்தை ஒழுக்கம் ஆகும்.
- பள்ளிகளில் நடைபெறும் காலை இறை வணக்கம் கூட்டம் மாணவர்களிடம் ஒழுக்க வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளிக்கும் இடமாக அமைந்துள்ளது.
- தவறாமல் பள்ளிக்கு வருதல் என்பது பள்ளி இணக்கம் என்பதைக் குறிக்கும்.
- மனிதன் ஒரு சமூக விலங்கு எனக் கூறியவர் அரிஸ்டாட்டில்.
- கவனித்தலில் இடம்பெறும் உடல் இயக்கம்: தலையைத் திருப்புதல், பார்வையை குவித்தல் மற்றும் செவிமடுத்தல்.
- கற்றல் கற்பித்தலில் குழந்தைகளின் கவனத்தை கவர்வதற்கான வழிமுறைகள்: மிதமான வேகத்தில் பேசுதல் மற்றும் பரிவுடன் தொடர்ச்சியாக ஊக்குவித்தல்.
- துணைக் கருவிகளை பயன்படுத்துதல் மற்றும் நடித்துக் காட்டுதல் மூலம் கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.
- புலன்களில் ஏற்படும் தூண்டல்கள் ஏற்படுத்துவது குறுங்கால நினைவு.
- குழந்தைகளிடம் இயற்கையாகவே மொழியை கற்கும் திறன் உள்ளது என்றவர் கோம்ஸ்கி.
- ஆக்க நிலையுறுத்திக் கற்றலை சோதனையின் மூலம் நிரூபித்தவர் பாவ்லவ்.
- உட்காட்சி மூலம் கற்றல் நிகழ்வதை சோதனையின் மூலம் நிரூபித்தவர் கோலர்.
- நடத்தை கொள்கையாளர்கள்: ஜே.டி. வாட்சன், ஸ்கின்னர் மற்றும் பாவ்லவ்.
- ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் நிர்ணயிக்கப்படுகிறது என்றவர் கோத்தாரி.


0 Comments