TNPSC TRB TET 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 10th Social Science Part-13
அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள்| எண் | கேள்வி | விடை |
|---|
| 1 | ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியிருந்த அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது? | சட்டப்பிரிவு 370 |
| 2 | ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது? | 1957 நவம்பர் 17 |
| 3 | மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவர் யார்? | முதலமைச்சர் |
| 4 | ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றிக் கூறும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது? | சட்டப்பிரிவு 154 |
| 5 | ஆளுநர் பதவிக்குத் தேவையான தகுதிகளைக் கூறும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் எவை? | சட்டப்பிரிவுகள் 157 மற்றும் 158 |
| 6 | ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும்போது ஊதியத்தைப் பகிர்வது குறித்துக் கூறும் சட்டப்பிரிவு எது? | சட்டப்பிரிவு 158(3A) |
| 7 | மாநில முதலமைச்சர் யாரால் நியமிக்கப்படுகிறார்? | ஆளுநர் |
| 8 | முதலமைச்சரை நியமிப்பது பற்றி கூறும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது? | சட்டப்பிரிவு 164(1) |
| 9 | மாநிலத்தின் அரசு வழக்கறிஞரை நியமனம் செய்து அவரது ஊதியத்தை நிர்ணயம் செய்பவர் யார்? | ஆளுநர் |
| 10 | மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் யாருடைய கையொப்பமிட்ட பின்னரே சட்டமாகும்? | ஆளுநர் |
| 11 | எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம்? | சட்டப்பிரிவு 213 |
| 12 | ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச்சட்டம் எத்தனை மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்? | 6 மாதத்திற்குள் |
| 13 | மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்பவர் யார்? | ஆளுநர் |
| 14 | எந்த சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்யலாம்? | சட்டப்பிரிவு 356 |
| 15 | ஆளுநருக்கான சிறப்புரிமைகளை வழங்கும் சட்டப்பிரிவு எது? | சட்டப்பிரிவு 361(1) |
இந்திய வேளாண்மை மற்றும் மண் வகைகள்| எண் | கேள்வி | விடை |
|---|
| 16 | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? | 1953 |
| 17 | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது? | 8 பிரிவுகள் |
| 18 | வெளிர் நிறமுடைய மணற்பாங்கான புதிய வண்டல் மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | காதர் |
| 19 | சுண்ணாம்பு மற்றும் களிமண் பாங்கான பழைய வண்டல் படிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | பாங்கர் |
| 20 | இரும்பு மற்றும் மெக்னீசியம் அதிகமாகக் காணப்படும் மண் வகை எது? | செம்மண் |
| 21 | தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவாகும் மண் எது? | கரிசல் மண் |
| 22 | வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும்போது மண்சுவரல் (Leaching) காரணமாக உருவாகும் மண் எது? | சரளை மண் |
| 23 | காபி, தேயிலை ஆகியவை அதிகம் பயிரிடப்படும் மண் எது? | காடு மற்றும் மலை மண் |
| 24 | சோடியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் சல்பூரிக் அமிலம் அதிகம் காணப்படும் மண் எது? | உப்பு மற்றும் கார மண் |
| 25 | தமிழ்நாட்டில் கடற்கரைப் பகுதிகளிலும் வங்கத்தில் உள்ள சுந்தரவனப் பகுதிகளிலும் காணப்படும் மண் வகை எது? | களிமண் மற்றும் சதுப்பு நில மண் |
| 26 | குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை பெற ஏற்படுத்தப்பட்ட திட்டம் எது? | பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா |
இந்தியாவின் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள்| எண் | கேள்வி | விடை |
|---|
| 27 | தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் எந்தெந்த மாநிலங்களுக்கு பயனளிக்கிறது? | மேற்குவங்கம் மற்றும் ஜார்கண்ட் |
| 28 | உலகின் பெரிய புவி ஈர்ப்பு அணை எது? | பக்ரா நங்கல் திட்டம் |
| 29 | பக்ரா நங்கல் திட்டம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? | சட்லஜ் |
| 30 | ஹிராகுட் திட்டம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? | மகாநதி |
| 31 | உலகின் மிக நீளமான அணையான ஹிராகுட் அணை எந்த மாநிலத்தில் உள்ளது? | ஒடிசா |
| 32 | பீகாரின் துயரம் என அழைக்கப்படும் கோசி ஆறு எந்த நாட்டிலிருந்து உற்பத்தியாகிறது? | நேபாளம் |
| 33 | தெகிரி அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? | பகிரதி |
| 34 | சம்பல் பள்ளத்தாக்குத் திட்டத்தால் பயனடையும் மாநிலங்கள் எவை? | இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் |
| 35 | நாகார்ஜுன சாகர் திட்டம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? | கிருஷ்ணா |
| 36 | சர்தார் சரோவர் திட்டம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? | நர்மதை |
| 37 | இந்திரா காந்தி கால்வாய்த் திட்டம் எந்த ஆற்றிலிருந்து நீரைப் பெறுகிறது? | சட்லஜ் |
வேளாண் பயிரிடும் பருவங்கள் மற்றும் வகைகள்| எண் | கேள்வி | விடை |
|---|
| 38 | இடப்பெயர்வு வேளாண்மை அசாம் மாநிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | ஜூம் |
| 39 | இடப்பெயர்வு வேளாண்மை கேரளாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | பொன்னம் |
| 40 | ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது? | பொடு |
| 41 | மத்தியப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது? | பென்டா, பீரா |
| 42 | காரிஃப் (Kharif) பயிரிடும் பருவம் எந்த மாதங்களை உள்ளடக்கியது? | ஜூன் முதல் செப்டம்பர் வரை |
| 43 | ராபி (Rabi) பயிரிடும் பருவம் எந்த மாதங்களை உள்ளடக்கியது? | அக்டோபர் முதல் மார்ச் வரை |
| 44 | சையத் (Zaid) பயிரிடும் பருவம் எந்த மாதங்களை உள்ளடக்கியது? | ஏப்ரல் முதல் ஜூன் வரை |
| 45 | அதிக விளைச்சல் தரும் நெல் ரகங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக? | CR தான் 205, A.R தான் 306, CRR 451 |
| 46 | இந்தியாவின் பூர்விகப் பயிர் எது? | நெல் |
| 47 | நெற்பயிருக்கு அடுத்து இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது எது? | கோதுமை |
| 48 | கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் திகழ்வது எது? | உத்திரப்பிரதேசம் |
| 49 | ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட வறண்ட பகுதிகளில் நன்கு விளையும் பயிர் எது? | கம்பு |
| 50 | கரும்பு உற்பத்தியில் உலகில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது? | இரண்டாவது இடம் |
| 51 | சர்க்கரை உற்பத்தியில் கியூபா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? | மூன்றாவது இடம் |
| 52 | சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? | மேற்கு வங்கம் |
| 53 | குஜராத் மாநிலம் எந்த உற்பத்தியில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது? | எண்ணெய் வித்துக்கள் |
| 54 | சீனாவை பிறப்பிடமாகக் கொண்ட தேயிலை வகையின் பெயர் என்ன? | பூகீ (BOHEA) |
| 55 | இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தேயிலை வகையின் பெயர் என்ன? | அசாமிகா (ASSAMICA) |
| 56 | தரமிக்கதும் இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுவதுமான காபி வகை எது? | அராபிகா |
| 57 | தரம் குறைந்த காபி வகையின் பெயர் என்ன? | ரொபஸ்டா |
| 58 | இரப்பர் தோட்டம் முதன்முதலில் 1902-ல் எங்கு உருவாக்கப்பட்டது? | கேரளா |
இந்தியப் புரட்சிகள் (வேளாண்மை மற்றும் அதுசார்ந்தவை)| எண் | புரட்சியின் பெயர் | தொடர்புடைய உற்பத்தி/துறை |
|---|
| 59 | மஞ்சள் புரட்சி | எண்ணெய் வித்துக்கள் (கடுகு, சூரியகாந்தி) உற்பத்தி |
| 60 | நீலப் புரட்சி | மீன்கள் உற்பத்தி |
| 61 | பழுப்புப் புரட்சி | தோல், கோக்கோ, மரபுசாரா உற்பத்தி |
| 62 | தங்க நூலிழைப் புரட்சி | சணல் உற்பத்தி |
| 63 | பொன் புரட்சி | பழங்கள், தேன் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் |
| 64 | சாம்பல் புரட்சி | உரங்கள் உற்பத்தி |
| 65 | இளஞ்சிவப்புப் புரட்சி | வெங்காயம், மருந்து பொருட்கள், இறால் உற்பத்தி |
| 66 | பசுமைப் புரட்சி | அனைத்து வேளாண் உற்பத்தி |
| 67 | வெள்ளிப் புரட்சி | முட்டை மற்றும் கோழிகள் உற்பத்தி |
| 68 | வெள்ளி இழைப் புரட்சி | பருத்தி உற்பத்தி |
| 69 | சிவப்புப் புரட்சி | இறைச்சி மற்றும் தக்காளி உற்பத்தி |
| 70 | வட்டப் புரட்சி | உருளைக்கிழங்கு உற்பத்தி |
| 71 | வெண்மைப் புரட்சி | பால் உற்பத்தி |
இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள்| எண் | கேள்வி | விடை |
|---|
| 72 | இந்தியாவில் எத்தனை உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன? | 18 |
| 73 | யுனெஸ்கோவின் மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ் இந்தியாவில் எத்தனை காப்பகங்கள் செயல்படுகின்றன? | 11 |
| 74 | அச்சனக்மர் - அமர்கண்டாக் உயிர்க்கோள காப்பகம் எந்த மாநிலங்களில் அமைந்துள்ளது? | மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் |
| 75 | திப்ரு செய்கொவா மற்றும் மானாஸ் ஆகிய உயிர்க்கோள காப்பகங்கள் எந்த மாநிலத்தில் உள்ளன? | அசாம் |
| 76 | திகேங் திபங் உயிர்க்கோள காப்பகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? | அருணாச்சல பிரதேசம் |
| 77 | கஞ்சன் ஜங்கா உயிர்க்கோள காப்பகம் எங்கு அமைந்துள்ளது? | சிக்கிம் |
| 78 | நாக்ரெக் உயிர்க்கோள காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது? | மேகாலயா |
| 79 | சிம்லிபால் உயிர்க்கோள காப்பகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? | ஒடிசா |
| 80 | சுந்தரவனம் உயிர்க்கோள காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது? | மேற்கு வங்கம் |
| 81 | பன்னா மற்றும் பச்மாரி உயிர்க்கோள காப்பகங்கள் எங்கு அமைந்துள்ளன? | மத்தியப்பிரதேசம் |
| 82 | சேஷாசலம் குன்றுகள் உயிர்க்கோள காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது? | ஆந்திரப்பிரதேசம் |
தமிழக வரலாறு மற்றும் விடுதலைப் போராட்டம்| எண் | கேள்வி | விடை |
|---|
| 83 | சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக 1877 இல் நியமிக்கப்பட்டவர் யார்? | டி. முத்துசாமி |
| 84 | 'தி இந்து' செய்திப் பத்திரிகையை G. சுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர்கள் தொடங்கிய ஆண்டு என்ன? | 1878 |
| 85 | G. சுப்பிரமணியம் 'சுதேசமித்திரன்' என்ற பருவ இதழை எந்த ஆண்டு தொடங்கினார்? | 1891 |
| 86 | P. ரங்கையா எந்த அமைப்பின் முதல் தலைவராக பொறுப்பேற்றார்? | சென்னை மகாஜன சபை |
| 87 | 1887 இல் காங்கிரஸ் மாநாடு சென்னையில் எந்த தோட்டத்தில் நடைபெற்றது? | மக்கிஸ் தோட்டம் |
| 88 | வ.உ.சி எந்த நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு தலைமையேற்றார்? | கோரல் நூற்பாலை |
| 89 | வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் யார்? | ராபர்ட் W.D.E. ஆஷ் |
| 90 | வாஞ்சிநாதன் திருநெல்வேலி ஆட்சியரான ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற நாள் எது? | 1911 ஜூன் 17 |
| 91 | அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்க வகுப்புகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை என்ன குழுக்களாக மாற்றினார்? | சாரணர் இயக்கக் குழுக்கள் மற்றும் தொண்டர் குழுக்கள் |
| 92 | 1912 இல் மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பை உருவாக்கியவர் யார்? | டாக்டர் சி. நடேசனார் |
| 93 | நீதிக்கட்சியின் எந்த அமைச்சரவை முதன்முதலாகத் தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தியது? | 1921 இல் செயல்பட்ட நீதிக்கட்சி அமைச்சரவை |
| 94 | இந்திய விடுதலைப் போராட்டத்தில் துருக்கியின் கலீபா பதவியை மீட்பதற்காகத் தொடங்கப்பட்ட இயக்கம் எது? | கிலாபத் இயக்கம் |
| 95 | வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மதுரை மக்களுக்கு ஆற்றிய சேவையின் காரணமாக எவ்வாறு அன்போடு அழைக்கப்பட்டார்? | ரோசாப்பு துரை |
| 96 | மதுரை தொழிலாளர் சங்கம் (1918) எனும் அமைப்பை ஏற்படுத்தி ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு உதவியவர் யார்? | ஜார்ஜ் ஜோசப் |
| 97 | 1926 தேர்தலில் வெற்றிபெற்ற சுயராஜ்ஜியக் கட்சியினரின் ஆதரவுடன் அமைச்சரவையை அமைத்த சுயேட்சை வேட்பாளர் யார்? | பி. சுப்பராயன் |
| 98 | சென்னையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரக் குழுவை உருவாக்கியவர் யார்? | எஸ். சத்தியமூர்த்தி |
| 99 | "சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" எனும் சிறப்புப் பாடலை வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திற்காகப் புனைந்தவர் யார்? | நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் |
| 100 | 1932 இல் திருப்பூரில் தேசியக் கொடியை ஏந்தியவாறு காவலர்களால் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டவர் யார்? | திருப்பூர் குமரன் (O.K.S.R. குமாரசுவாமி) |
0 Comments