| 33 | ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம் எது? | அமராவதி நகர். |
| 34 | தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் பீடபூமி எது? | பாரமஹால் பீடபூமி. |
| 35 | மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது? | நீலகிரி மலை. |
| 36 | பழனி மலையின் மிக உயரமான சிகரம் எது? | வந்தராவ். |
| 37 | தமிழ்நாட்டில் அதிக காடுகளைக் (பரப்பளவு) கொண்ட மாவட்டம் எது? | தர்மபுரி. |
| 38 | முதுமலை வனவிலங்கு சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? | நீலகிரி. |
| 39 | வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? | காஞ்சிபுரம். |
| 40 | உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக் காடான பிச்சாவரம் எங்குள்ளது? | கடலூர் மாவட்டம். |
| 41 | நெல் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் எத்தனையாவது இடத்தை வகிக்கிறது? | மூன்றாம் இடம். |
| 42 | தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) எங்கு செயல்பட்டு வருகிறது? | ஆடுதுறை (தஞ்சாவூர்). |
| 43 | கொண்டக்கடலை உற்பத்தியில் மாநிலத்தில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது? | கோயம்புத்தூர். |
| 44 | நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கிறது? | நான்காவது இடம். |
| 45 | பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படும் நகரம் எது? | சென்னை. |
| 46 | தமிழ்நாட்டின் 'ஜவுளி பள்ளத்தாக்கு' என அழைக்கப்படும் மாவட்டங்கள் எவை? | கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு. |
| 47 | 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் எது? | நீலகிரி. |
| 48 | 2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு? | 80.09%. |
| 49 | மதுரையிலிருந்து நத்தம் வரை செல்லும் தமிழ்நாட்டின் மிகக் குறைவான நீளங்கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் என்ன? | NH 785. |
| 50 | சென்னை சர்வதேச விமான நிலையம் இந்திய அளவில் எத்தனையாவது பெரிய விமான நிலையமாகும்? | மூன்றாவது. |
| 51 | மத்திய ஆசியாவின் உயரமான மலைத் தொடரையும் இமயமலையையும் இணைக்கும் 'உலகின் கூரை' எது? | பாமீர் முடிச்சு. |
| 52 | இமயமலைகளில் மிகவும் பழமையான மடிப்புகளைக் கொண்ட பகுதி எது? | ட்ரான்ஸ் இமயமலைகள் (அல்லது) திபெத்தியன் இமயமலை. |
| 53 | தீபகற்ப பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம் எது? | ஆனைமுடிச் சிகரம். |
| 54 | மேட்டு நிலப் பழைய வண்டல் படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | பாங்கர் சமவெளி. |
| 55 | ஆறுகளால் கொண்டுவரப்பட்டு படியவைக்கப்படும் புதிய வண்டல்மண் நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | காதர் சமவெளி. |
| 56 | மகாநதி டெல்டாவிற்கு தென்மேற்கே அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரி எது? | சிலிகா ஏரி. |
| 57 | கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ள ஏரி எது? | கொல்லேறு ஏரி. |
| 58 | சிந்து நதியின் மிகப்பெரிய துணையாறு எது? | சினாப். |
| 59 | பிரம்மபுத்திரா ஆறு திபெத் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | சாங்போ. |
| 60 | மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே மிக நீளமான ஆறு எது? | நர்மதை. |
| 61 | பூமியின் சுழற்சியால் காற்று திசை விலக்கப்படக் காரணமான விசை எது? | கொரியாலிஸ் விசை. |
| 62 | கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவும் தலக்காற்று எது? | மாஞ்சாரல். |
| 63 | உலகில் மிக அதிக அளவு மழைப் பெறும் பகுதியான மௌசின்ரான் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? | மேகாலயா. |
| 64 | அயன மண்டல பசுமை மாறாக் காடுகளில் காணப்படும் முக்கிய மரங்கள் யாவை? | இரப்பர், எபனி, ரோஸ் மரம், சின்கோனா. |
| 65 | பூமியிலேயே மிகவும் வறண்ட பாலைவனப் பகுதி எது? | அடகாமா பாலைவனம். |
| 66 | பருத்தி நன்கு வளர்வதற்கு ஏற்ற மண் எது? | கரிசல் மண் (ரீகர் மண்). |
| 67 | உலகின் பெரிய புவி ஈர்ப்பு அணை என அழைக்கப்படும் திட்டம் எது? | பக்ரா நங்கல் திட்டம். |
| 68 | மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான அணை எது? | ஹிராகுட் திட்டம். |
| 69 | பழங்குடி இன மக்களால் காடுகளில் மரங்களை அகற்றி சாகுபடி செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? | இடப்பெயர்வு வேளாண்மை. |
| 70 | அசாம் மாநிலத்தில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது? | ஜூம். |
| 71 | நெல் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா வகிக்கும் இடம் என்ன? | இரண்டாம் இடம். |
| 72 | இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் முதன்மை வகிக்கும் மாநிலம் எது? | உத்திரப்பிரதேசம். |
| 73 | சணல் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கொண்டுவரப்பட்ட புரட்சியின் பெயர் என்ன? | தங்க நூலிழைப் புரட்சி. |
| 74 | பருத்தி உற்பத்தியைப் பெருக்குவதற்காக கொண்டுவரப்பட்ட புரட்சியின் பெயர் என்ன? | வெள்ளி இழைப் புரட்சி. |
| 75 | தோல், கோக்கோ, மரபுசாரா உற்பத்தி ஆகியவற்றோடு தொடர்புடைய புரட்சி எது? | பழுப்புப் புரட்சி. |
| 76 | இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை 1818 இல் எங்கு தொடங்கப்பட்டது? | போர்ட் க்ளாஸ்டர் (கொல்கத்தா). |
| 77 | முதன்முதலில் இந்தியாவில் காகிதத் தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது? | செராம்பூர் (மேற்கு வங்கம்). |
| 78 | இந்தியாவில் அதிக நிலக்கரி உற்பத்தியைச் செய்யும் மாநிலம் எது? | ஜார்கண்ட். |
| 79 | விமானக் கட்டுமானங்களிலும், தானியங்கி இயந்திரங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும் தாது எது? | பாக்சைட். |
| 80 | இந்தியாவில் மாங்கனீசு தாது உற்பத்தியில் முதன்மை மாநிலமாகத் திகழ்வது எது? | ஒடிசா. |
| 81 | இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897 ஆம் ஆண்டு எங்கு நிறுவப்பட்டது? | டார்ஜிலிங். |
| 82 | மக்கள் தொகையில் ஆயிரம் ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையைக் குறிப்பது எது? | பாலின விகிதம். |
| 83 | இந்தியாவில் மிகுந்த நகர்மயமாக்கப்பட்ட பகுதியாக உள்ள மாநிலம் எது? | கோவா. |
| 84 | மனித மேம்பாட்டுக் குறியீட்டை (HDI) 1990 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பொருளியல் அறிஞர் யார்? | முகஹப் உல் ஹிக். |
| 85 | மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) என்ற தத்துவத்தை அரசாங்கத்தின் வழிகாட்டியாகக் கொண்டுள்ள நாடு எது? | பூட்டான். |
| 86 | சிந்து பள்ளத்தாக்கிலிருந்து சோனார் பள்ளத்தாக்கு வரை நீளமான சாஹி (ராயல்) சாலையை அமைத்தவர் யார்? | ஷெர்சா சூரி. |
| 87 | பொறியியல் துறையில் அதிசயமாகக் கருதப்படும் கொங்கன் இரயில்வே எந்த இரு பகுதிகளை இணைக்கிறது? | ரோகா மற்றும் மங்களூரு. |
| 88 | இந்தியாவின் மிக அதிக வேக இரயில் வண்டி எது? | காத்திமன் (GATHIMAN) அதிவிரைவு வண்டி. |
0 Comments