TNPSC TRB TET 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 10th Social Science Part-22
சமூக, சமயச் சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய இயக்கம்
- ராஜா ராம்மோகன் ராய் இயற்கை எய்திய ஆண்டு: 1833.
- இந்து சமூகத்தில் விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு: 1856.
- பிராத்தனை சமாஜம் ஆத்மராம் பாண்டுரங்கால் நிறுவப்பட்ட ஆண்டு: 1867.
- சுவாமி தயானந்த சரஸ்வதியின் கோட்பாடுகள் அடங்கிய நூல்: சத்யார்த்தபிரகாஷ்.
- ஆரிய சமாஜம் தூய்மைக்கோட்பாடு குறித்த முரண்பாட்டால் இரண்டாகப் பிரிந்த ஆண்டு: 1893.
- சுவாமி விவேகானந்தரின் வாழ்வுக்காலம்: 1863 - 1902.
- பிரம்மஞான இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஆண்டு: 1875.
- பிரம்மஞான இயக்கம் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்ட ஆண்டு: 1886.
- நாராயண குரு கேரளாவில் பிறந்த ஆண்டு: 1854.
- அய்யன்காளி திருவனந்தபுரத்திலுள்ள வெங்கனூரில் பிறந்த ஆண்டு: 1863.
- ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை நிறுவிய ஜோதிபா பூலே பிறந்த மாநிலம்: மகாராஷ்டிரா.
- சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்பு சங்கம்) அய்யன்காளியால் நிறுவப்பட்ட ஆண்டு: 1907.
- சர் சையத் அகமத்கான் அலிகார் நகரில் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியை நிறுவிய ஆண்டு: 1875.
- இராமலிங்க அடிகள் (வள்ளலார்) பிறந்த மற்றும் மறைந்த ஆண்டுகள்: 1823 - 1874.
- வைகுண்ட சுவாமிகள் பிறந்த இடம்: சாமிதோப்பு (கன்னியாகுமரி).
- அயோத்தி தாசரும் ஜான் திரவியமும் இணைந்து ‘திராவிடர்க் கழகம்’ எனும் அமைப்பை நிறுவிய ஆண்டு: 1882.
- வைகுண்ட சுவாமிகளின் இயற்பெயர்: முடிசூடும் பெருமாள்.
- திராவிட மகாஜனசபை அமைப்பின் முதல் மாநாட்டை பண்டிதர் அயோத்திதாசர் நடத்திய இடம்: நீலகிரி.
- பெரியார் ஈ.வெ.ராமசாமி ஈரோட்டின் நகரசபைத் தலைவராக பதவி வகித்த காலம்: 1918 -1919.
- பெரியார் 1925 இல் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள்: குடியரசு.
- B.R. அம்பேத்கார் எழுதிய எந்த நூலை பெரியார் 1936-ல் தமிழில் பதிப்பித்தார்: சாதி ஒழிப்பு.
- சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியார் இயற்கை எய்திய வயது: தொன்னூற்று நான்காவது வயது.
- "ஜீவிய சரித சுருக்கம்" என்ற இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதை வெளியிடப்பட்ட ஆண்டு: 1939.
- அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பை 1928-ல் உருவாக்கியவர்: மயிலை சின்னதம்பி ராஜா (எம்.சி.ராஜா).
- இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான 'சென்னை தொழிலாளர் சங்கம்' உருவாக்கப்பட்ட ஆண்டு: 1918.
- இந்தியாவில் 1923 இல் முதன் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவர்: ம.சிங்காரவேலர்.
- தேவதாசி முறையை ஒழிப்பதற்காகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதற்காக நடைபெற்ற இயக்கத்தில் முதலிடம் வகித்தவர்: டாக்டர். முத்துலட்சுமி அம்மையார்.
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்குக் கீழ்ப்படிய மறுத்துவந்த பூலித்தேவரை அடக்க பணிக்கப்பட்ட ஆங்கிலேயர்: கர்னல் ஹெரான்.
- மாபூஸ்கானின் படைகளுக்கும் பூலித்தேவரின் பாளையக்காரர்களுக்கும் போர் நடைபெற்ற இடம்: களக்காடு.
- திருநெல்வேலி பாளையக்காரர்கள் எந்த மன்னரின் ஆதரவோடு நவாபின் அதிகாரத்தை எதிர்த்தனர்: திருவிதாங்கூர் மன்னர்.
- கம்பெனியாரால் அனுப்பப்பட்ட யூசுப்கான் மதமாற்றத்திற்கு முன்பு அழைக்கப்பட்ட பெயர்: மருதநாயகம்.
- சிவகங்கை மன்னரான முத்துவடுகநாதர் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட போர்: காளையார்கோவில் போர் (1772).
- வேலுநாச்சியார் எந்த அரசரின் பாதுகாப்பில் விருப்பாட்சியில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தார்: கோபால நாயக்கர்.
- வீரபாண்டிய கட்டபொம்மனிடமிருந்து 1798 ஆம் ஆண்டு வாக்கில் கம்பெனி வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவை: 3310 பகோடாக்கள்.
- கள்ளர்பட்டியில் நடைபெற்ற மோதலில் ஆங்கிலேயர்களால் மீண்டும் கைது செய்யப்பட்டவர்: சிவசுப்ரமணியனார்.
- பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்ட கட்டபொம்மனின் சகோதரர்கள்: ஊமைத்துரை மற்றும் செவத்தையா.
- மருது சகோதரர்கள் 1801 அக்டோபர் 24 அன்று தூக்கிலிடப்பட்ட இடம்: திருப்பத்தூர் கோட்டை.
- வேலூர் புரட்சி சிப்பாய்களால் வெடித்த ஆண்டு: 1806 ஜூலை 10.
- வேலூர் புரட்சியை வன்மையாக ஒடுக்கிய கர்னல் ஜில்லஸ்பிக்கு அளிக்கப்பட்ட வெகுமதி: 7,000 பகோடாக்கள்.
- வஹாபி கிளர்ச்சி வங்காளத்தில் 1827 வாக்கில் தோன்றிய பகுதி: பரசத்.
- சாந்தலர்களின் கிளர்ச்சிக்குத் தலைமையேற்று நடத்தியவர்கள்: சித்து மற்றும் கணு.
- பிர்சா முண்டா தலைமையிலான உலுகுலன் கிளர்ச்சி (பெரிய கலகம்) நடைபெற்ற இடம்: ராஞ்சி.
- இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு: 1885.
- கர்சன் பிரபுவினால் வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்ட நாள்: 1905 ஜூலை 19.
- 'சுதேசமித்திரன்' என்ற தேசியப் பருவ இதழைத் தமிழில் தொடங்கியவர்: G. சுப்பிரமணியம்.
- G. சுப்பிரமணியம் தொடங்கிய சுதேசமித்திரன் பருவ இதழ் நாளிதழாக மாறிய ஆண்டு: 1899.
- 1887 இல் இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்ற இடம்: மக்கிஸ் தோட்டம்.
- சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்திற்காக வ.உ.சி வாங்கிய இரண்டு கப்பல்களின் பெயர்கள்: காலியா மற்றும் லாவோ.
- ஆஷ் கொலை வழக்கில் வாஞ்சிநாதனுக்கு உள்ளுணர்வு தூண்டிய ரகசிய அமைப்பு: பாரத மாதா சங்கம்.
- அன்னி பெசன்ட் அம்மையார் எழுதிய முக்கியப் புத்தகங்கள்: விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது மற்றும் இந்தியா - ஒரு தேசம்.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) வெளியிட்ட தெலுங்குப் பத்திரிகையின் பெயர்: ஆந்திர பிரகாசிகா.
- 1920-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 98 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற இடங்கள்: 63 இடங்கள்.
- பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆற்றிய சேவையின் காரணமாக 'ரோசாப்பு துரை' என மதுரை மக்களால் அழைக்கப்பட்டவர்: ஜார்ஜ் ஜோசப்.
- நீதிக்கட்சி அமைத்த பணியாளர் தேர்வு வாரியத்தைப் பின்பற்றி 1929-ல் ஆங்கில அரசு உருவாக்கியது: பொதுப் பணியாளர் தேர்வாணையம்.
- காந்தியடிகள் தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டவர்: கோபால கிருஷ்ண கோகலே.
- காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கிய அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் நடைபெற்ற ஆண்டு: 1918.
- ஜாலியன்வாலா பாக் துப்பாக்கிச்சூட்டில் அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை: 379 பேர்.
- சௌரி சௌரா கிராமத்தில் வன்முறைச் சம்பவம் நடைபெற்ற நாள்: 1922 பிப்ரவரி 5.
- 1923-ல் சுயராஜ்ஜியக் கட்சியை தொடங்கியவர்கள்: மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்.
- காந்தியடிகள் தண்டி யாத்திரையைத் தொடங்கிய வயது: 61 ஆவது வயது.
- காந்தி-இர்வின் ஒப்பந்தம் எட்டப்பட்ட ஆண்டு: 1931 மார்ச் 5.
- வகுப்புவாரி ஒதுக்கீட்டை இந்தியாவில் அறிவித்தவர்: ராம்சே மெக்டொனால்டு.
- 1917 ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப்பட்ட இந்திய பொதுவுடைமை கட்சி உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நிறுவப்பட்ட ஆண்டு: 1920 அக்டோபர்.
- 1942 வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது "செய் அல்லது செத்து மடி" என்ற முழக்கத்தை வெளியிட்டவர்: காந்தியடிகள்.
- மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டு: 1947 ஜுன் 3.
- தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு: 1,30,058 சதுர கிலோமீட்டர்கள்.
- நீலகிரி மலையிலுள்ள முக்குருத்தி சிகரத்தின் உயரம்: 2554 மீட்டர்.
- ஜவ்வாது மலையின் பல பகுதிகள் உருவான பாறைகளின் வகை: நீல நிற சாம்பல் கிரானைட் பாறைகள்.
- காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள வலைப்பின்னல் அமைப்பு அழைக்கப்படுவது: தென்னிந்தியாவின் தோட்டம்.
- தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழையளவு: சுமார் 958.5 மி.மீட்டர்.
- பூமியிலேயே மிகவும் வறண்ட பாலைவனப் பகுதி: அடகாமா பாலைவனம்.
- பூமியின் சுழற்சியின் காரணமாக நகரும் பொருட்களின் திசையை மாற்றியமைக்கும் விசை: கொரியாலிஸ் விசை.
- 2017 ஆம் ஆண்டு வன அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் மொத்த பரப்பளவு: 26,281 ச.கி.மீட்டர்கள்.
- உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக் காடான பிச்சாவரம் கொண்டுள்ள பரப்பளவு: 1,100 ஹெக்டேர்.
- வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்: சிவகங்கை மாவட்டம்.
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) அமைந்துள்ள இடம்: ஆடுதுறை (தஞ்சாவூர்).
- தமிழ்நாட்டில் கொண்டக்கடலை உற்பத்தியில் முதன்நிலை வகிக்கும் மாவட்டம்: கோயம்புத்தூர் மாவட்டம்.
- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் நீர்க்கொள்ளளவு திறன்: 7,321 மில்லியன் கன அடிகள்.
- தமிழ்நாட்டில் அரியலூர் மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகள் உற்பத்தி செய்வது: சிமெண்ட்.
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி (ஒரு சதுர கிலோ மீட்டருக்கு): 555 பேர்.
- மதுரையிலிருந்து நத்தம் வரை செல்லும் தமிழ்நாட்டின் மிகக் குறைவான நீளங்கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண்: NH-785.
- இந்தியாவின் நிலப்பரப்பு புவியின் மொத்த நிலப்பரப்பில் உள்ள சதவீதம்: 2.4 சதவீதம்.
- புவியானது 1° தீர்க்க கோட்டை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம்: 4 நிமிடம்.
- இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்: 8848 மீட்டர்.
- இந்தியா மற்றும் நேபாள எல்லையில் உள்ள கஞ்சன் ஜங்கா சிகரத்தின் உயரம்: 8586 மீட்டர்.
- ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம்: குருசிகார்.
- உலகின் மிக அதிக அளவு மழைப் பெறும் பகுதியான மௌசின்ரான் அமைந்துள்ள இடம்: மேகாலயா.
- 1953-ல் தொடங்கப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மண்வகைகளை வகைப்படுத்தியுள்ள பிரிவுகள்: 8 பிரிவுகள்.
- உலகின் பெரிய புவி ஈர்ப்பு அணையான பக்ரா நங்கல் திட்டம் கட்டப்பட்டுள்ள ஆறு: சட்லஜ்.
- கரும்பு உற்பத்தியில் உலகில் இந்தியாவின் நிலை: இரண்டாவது பெரிய நாடு.
- ஜிடிபி (GDP) யின் நவீன கருத்தை 1934-ல் முதன் முதலில் உருவாக்கியவர்: சைமன் குஸ்நட்.
- மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) என்ற வார்த்தையை 1972 இல் உருவாக்கியவர்: பூட்டான் அரசர் ஜிகமே சிங்கயே வாங்ஹக்.
- உலக வர்த்தக அமைப்பு (WTO) நடைமுறைக்கு வந்த ஆண்டு: 1995 ஜனவரி 1.
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்: 1946 டிசம்பர் 9.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவரது கைப்பட இத்தாலிய பாணியில் எழுதப்பட்டவர்: பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா.
- அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கும் "அரசியலமைப்பின் திறவுகோல்": முகவுரை.
- 1978 ஆம் ஆண்டு அடிப்படை உரிமைகளிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட சட்டத் திருத்தம்: 44 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்.
- நாடாளுமன்றத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு மசோதா ஒப்புதல் பெறவில்லை எனில் இரு அவைகளுக்கிடையேயான கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மசோதாவின் முடக்கத்தைத் தீர்த்து வைப்பவர்: குடியரசுத் தலைவர்.
- உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட ஒரு உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி இருக்க வேண்டிய ஆண்டுகள்: 10 ஆண்டுகள்.
- மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி விவரிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு: சட்டப்பிரிவு 154.


0 Comments