12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 14
14. உயிரிகளில் காணப்படும் பல்வேவேறு வகையான ஒருங்கிணைவு முறைகளை விவரி.
உயிரிகளின் இனப்பெருக்க ஒருங்கிணைவு முறைகள்:
- தன் கருவுறுதல்
- எடுத்துக்காட்டு: ஆக்டினோஸ்பேரியம், பாரமீசியம்
- விளக்கம்: ஒரு செல்/உயிரினத்துள் ஆண், பெண் செல்கள் இணைந்து கருமுட்டை உருவாதல்.
- அயல் கருவுறுதல்
- எடுத்துக்காட்டு: மனிதன்
- விளக்கம்: இரண்டு பெற்றோரின் இனச்செல்கள் இணைந்து கருமுட்டை உருவாதல்.
- முழு சேர்க்கை
- எடுத்துக்காட்டு: டிரைக்கோ நிம்ஃபா
- விளக்கம்: கீழ்நிலை உயிரிகளில், முதிர்ந்த உயிரிகளே இனச்செல்களாய்ச் செயல்பட்டு புதிய உயிரிகளை உருவாக்குதல்.
- இளம் செல் சேர்க்கை
- எடுத்துக்காட்டு: ஆக்டினோ பிரிஸ்
- விளக்கம்: மறைமுகப் பிரிவு மூலம் உருவாகும் இரண்டு இளம் சேய் செல்கள் இனச்செல்களாய்ச் செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரியை உருவாக்குதல்.
- மாறுபட்ட செல் சேர்க்கை
- எடுத்துக்காட்டு: புரோட்டோசோவா
- விளக்கம்: அமைப்பில் மாறுபட்ட இரண்டு சிறிய இனச்செல்கள் ஒன்றிணைதல்.
- ஒத்த செல் சேர்க்கை
- எடுத்துக்காட்டு: மோனோ சிஸ்டிஸ்
- விளக்கம்: அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரண்டு இனச்செல்கள் ஒன்றிணைதல்.
- வேறுபட்ட செல் சேர்க்கை
- எடுத்துக்காட்டு: உயர்வகை விலங்குகள்
- விளக்கம்: முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனச் செல்கள் ஒன்றிணைதல்.


0 Comments