கன்னி இனப்பெருக்கம் (Parthenogenesis)
- வரையறை: அண்ட செல்லானது கருவுறாமல், ஒரு முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயல்.
- கண்டறியப்பட்ட வரலாறு:
- ஆண்டு: 1745
- கண்டறிந்தவர்: சார்லஸ் பானட்
I. இயற்கையான கன்னி இனப்பெருக்கம் (Natural Parthenogenesis):
சில விலங்குகளின் வாழ்க்கை சுழற்சியில் தொடர்ச்சியாக, நிலையாக மற்றும் இயற்கையாக நடைபெறும் இனப்பெருக்க முறை இதுவாகும்.
- முழுமையான (Complete) கன்னி இனப்பெருக்கம்:
- இரு பெற்றோர்களால் நிகழும் பாலினப் பெருக்கம் இதில் நடைபெறுவதில்லை.
- இவ்வகை இனப்பெருக்கம் மூலம் மட்டுமே உயிரிகள் பெருகுகின்றன.
- இதில் ஆண் உயிரிகள் காணப்படுவதில்லை; பெண் உயிரிகள் மட்டுமே இருக்கும்.
- முழுமையற்ற (Incomplete) கன்னி இனப்பெருக்கம்:
- பாலினப் பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கம் இரண்டுமே மாறி மாறி நடைபெறுகின்றன.
- எடுத்துக்காட்டு: தேனீக்கள். (இதில், கருவுற்ற முட்டைகள் இராணித் தேனீயாகவும், வேலைக்காரத் தேனீக்களாகவும் வளர்ச்சியுறுகின்றன; கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக வளர்ச்சியடைகின்றன).
- இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம்:
- லார்வாக்கள் கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளம் உயிரிகளை உருவாக்குகின்றன.
- எடுத்துக்காட்டு:
- கல்லீரல் புழுவின் ஸ்போரோசிஸ்ட்டுகள் மற்றும் ரீடியா லார்வாக்கள்.
- மொழுக்கு ஈ (Gall fly) போன்ற சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்கள்.
- கருவுறாத அண்டம் இயற்பிய அல்லது வேதிய தூண்டல்கள் மூலம் தூண்டப்பட்டு ஒரு முழு உயிரியாக வளர்ச்சியடையும் செயல்.
- எடுத்துக்காட்டு: வளை தசை புழுக்கள் மற்றும் கடல் அர்ச்சின்.


0 Comments